
தேதி: July 2, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இனிப்புகளில் மிகவும் பிரபலமானது இந்த ஜாங்கிரி. இதனை செய்வதற்கு சற்று அனுபவம் தேவை. வீடுகளில் இதை செய்வது கடினம் என்ற எண்ணத்தில் பலர் இதை செய்வதற்கு முயற்சிப்பதில்லை. அது ஒன்றும் கடினமான விசயமே அல்ல. மிகவும் எளிது என்று சொல்லி அதன் செய்முறையை நமக்காக இங்கே விளக்குகின்றார் திருமதி. சித்ரா செல்லத்துரை.
உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சை அரிசி - ஒரு பிடி
சீனி - அரை கிலோ
ஆரஞ்சு பவுடர் - சிறிது
ரோஸ் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
ரீபைன்டு ஆயில் - அரை லிட்டர்
கனமான துணி - ஒரு சதுர அடி











ஜாங்கிரி பிழிவதற்கு சற்று அனுபவம் தேவை. முதலில் துணியில் மாவை எடுத்து ஒரு வாழை இலையில் இரண்டு செ.மீ. விட்டத்திற்கு வட்டம் போட்டு அதன் மேல் சிறிய சிறிய வட்டங்களாக (கடையில் இருப்பதை போல) பிழிய வேன்டும். பல முறை செய்தவுடன் கை பழகி விடும். பிறகு எண்ணையில் நேரடியாக பிழிய வேன்டும்.
எச்சரிக்கை: ஜாங்கிரி பிழிய ஆரம்பிக்கும் முன் கையில் வளையல், பிரேஸ்லெட்டை கழற்றி விடவும். நேரடியாக எண்ணெயில் பிழியும்போது அவை சூடாகி கையில் மாறாத தழும்புகளாகி விடும்.
Comments
உளுத்தம்
உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சை அரிசி - ஒரு பிடி
சீனி - அரை கிலோ
இதை உங்களால் கப் அளவாக கொடுக்கமுடியுமா???????????ப்ளீஸ்.............................
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
இளம் கம்பி
இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச அடுப்பை மிதமாக வைத்தால் எவ்வளவு நேரம் எடுக்கும்.?பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?இந்த அளவுகளில் எத்தனை ஜாங்கிரி வரும்?
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரொம்ப நல்லா வந்தது
கடந்த வருட திபாவளிக்கு உங்கள் செய்முறையில் விளக்கிய லட்டு செய்து எல்லாருடய்யா பாரட்டை பெற்றேன். இம்முறை ஜாங்கிரி. ரொம்ப நல்லா வந்தது. Recipe-க்கு நன்றி
ஹை! ஜாங்கிரி!
ரெடிமேட் பாக்கட் வாங்கி செய்து பார்த்திருக்கிறேன். பெரிதாகத் திருப்தி வரவில்லை. அழகாக பிழிந்து இருக்கிறீங்க. அடுத்த தடவை இப்படித்தான் செய்யப் போகிறேன். குறிப்புக்கு நன்றி சித்ரா.
- இமா க்றிஸ்
ஜாங்கிரி
தீபாவளி ஸ்வீட்டா செய்தாச்சு.ரொம்ப நல்லா வந்திருக்கு..உங்க அளவுக்கு அழகா சுத்த வரலை..நீங்க சொல்லியிருக்கும் அளவை விட குறைவாகதான் செய்தேன்...தேங்க்ஸ் சிஸ்டர்..
அறுசுவை பேஸ்புக் பக்கத்தில் போட்டோ போட்டிருக்கேன்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜாங்கிரி
அபி... படம் பார்த்தேன். சூப்பர். அதைப் பார்த்துவிட்டு அம்மா தனக்கும் ஜாங்கிரி பிடிக்கும் என்று அப்ளிகேஷன் போட்டிருக்காங்க. :)
- இமா க்றிஸ்
இமாம்மா
கிரான்மா பார்த்ததை நானும் இப்போதான் பார்த்தேன்.. :)))நான் நன்றி சொன்னதாக கிரான்மா கிட்ட சொல்லுங்க :)
ஒரு நாள் செய்து கொடுங்க.. அப்படியே எங்களுக்கும் காட்டுங்க.. :)
கொஞ்சமாக 100g உளுந்தம் பருப்பு போட்டு செய்தேன்..அதுக்கே 23 ஜாங்கிரி கிடைச்சது..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அருசுவை பேஸ்புக்
அருசுவை பேஸ்புக் எப்படி யூஸ் செய்வது எங்கு உள்ளது????
"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty
அறுசுவை பேஸ்புக்..
பேஸ்புக்கில் ARUSUVAI என்று (Capital லெட்டரில் இருப்பது தான் இந்த அறுசுவை பேன்ஸ் க்ரூப்) Search பண்ணுங்க.. அறுசுவையின் Closed Group காட்டும்.. Join Request கொடுத்தால் admin பார்த்து சேர்த்து விடுவார்கள்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபி
நன்றி அபி request குடுத்து விட்டேன்
"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty
அபி
ஆஹா!எண்ணி வைச்சிருக்கீங்க. ;) இது பயனுள்ள டிப். நன்றி அபி.
சில வாரங்கள் fb-க்கு லீவு கொடுக்கப் போறேன். அதன் பின் கட்டாயம் ஃபான்ஸ் க்ரூப்ல படம் வரும். :)
- இமா க்றிஸ்