அறுசுவையை ஆங்கிலத்திலும் கொண்டு வரலாமே

நண்பர் பாபு அவர்களுக்கு

இன்று திருமணம் ஆகி சமயல் தெரியாமல் US வந்தபிறகுதான் அறுசுவையின் பயன் எவ்வளவு என்பது தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக அறுசுவையை பார்த்துதான் சமைக்கிறேன். நான் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி பார்த்த அறுசுவைக்கும் இப்போது உள்ள அறுசுவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யாரும் சமைக்கலாம் என்னைப் போன்றவர்கலுக்கு மிகவும் பயனுள்ளது. என்னைப் போல சமையல் தெரியாமல் உள்ள மற்ற மாநிலத்துகாரர்களுக்கும் பயன்படும்படி அறுசுவையை ஆங்கிலத்திலும் கொண்டு வரலாமே? ஆங்கிலத்தில் நிறைய websites, blogs இருக்கின்றன. இருந்தாலும் தென் இந்திய உணவுகள் நிறைய உள்ள இந்த அறுசுவை ஆங்கிலத்தில் வந்தால் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும். என்னுடைய தோழிகள் நிறைய பேர் இதை எதிர்பார்க்கின்றார்கள். முயற்சி செய்வீர்களா? இதில் என்னால் இயன்ற உதவிகளை செய்வதற்கு தயாராய் இருக்கிறேன்.

உங்கள் மூலம் பாபு அண்ணா செய்த பெருந்தொண்டுகளை படிக்க(பார்க்க) நேர்ந்தது...
ரொம்ப நன்றி...

நன்றி...

உண்மையில் உங்கள் blog-ஐ வாசித்தபோது நானும் அங்கு இருந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது...நான் அழுதேவிட்டேன்...அப்பப்பா எவ்வளவு கொடூரம்...அந்த சம்பவம் நடந்த சமயம், நாங்கள் இந்தியாவில் இல்லை...அப்பொழுது தான் US-க்கு வந்துக்கொண்டிருந்தோம்...அந்த சம்பவத்தை பற்றி ரொம்ப எதுவுமே தெரியாது...சுனாமி வந்தது...அது வந்தால் எப்படி இருக்கும் என்று தான் தெரிந்தது...ஆனால் பயம் இருந்தது...நாகப்பட்டினத்தில் இவ்வளவு கொடூரமாக தாக்கி இருப்பதை இப்போது படித்து தான் தெரிந்துக்கொண்டேன்...செய்தித்தாள்களில் படித்த போது ஏற்படாத தாக்கம் உங்கள் உரையை படித்த போது இருந்தது...
YOU ARE GREAT...GOD BLESS YOU...
நன்றி...

நன்றி...

சகோதரி ஜீவிதா அவர்களுக்கு,

பழைய வலைப்பூ பதிவை இப்போது தேடி கண்டிபிடித்து இங்கே கொடுத்து இருக்கின்றீர்கள். நானே அந்த பதிவை மறந்துவிட்டேன். உங்களுடைய பெயர் புதிதாக இருக்கின்றது. நாகை வந்த IISC டீமில் நீங்கள் இருந்தீர்களா?

அறுசுவையை ஆங்கிலத்தில் கொண்டுவரும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. தாங்கள் இப்போதுதான் அறுசுவையை பார்வையிடுகின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். இதற்கு முன்பு இது பற்றி நிறைய அறிவிப்புகள், பதிவுகள் வந்துள்ளன. விரைவில் எதிர்பாருங்கள். உங்கள் தோழியர்களிடமும் சொல்லி வையுங்கள். மொழிபெயர்ப்பில் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம், தங்களால் இயன்றால். இது குறித்து தங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்புகின்றேன். அறுசுவை பற்றி அப்போது என்ன மாதிரி கமெண்ட்ஸ் அடித்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? :-) இப்போதாவது உங்களுக்கு பயன்படுவதில் சந்தோசமே.

அன்பு தங்கை வாணி அவர்களுக்கு,

நீங்கள் நினைப்பதுபோல் பெரும் தொண்டெல்லாம் நான் செய்யவில்லை. எவ்வளவோ செய்திருக்கலாமே.. செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற உறுத்தல் எனக்கு இன்னமும் இருக்கின்றது. ஆனால், அன்றைய சூழல் வேறு விதமாக இருந்தது. முடிந்து போன கதை. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி (அதற்கு தகுதியுடையவன் நான் அல்ல என்ற போதிலும்).

i am unable to open the link. please help me.

"மகனின் கடைசி ஆசை நிறைவேறியதா.. இல்லையா என்பது தெரியாமல் கதறி அழும் தாய் " வரியை படித்தவுடன் அழுதேவிட்டேன்.. கொடுமை.. அந்த சூழ்நிலையை நினைத்து பார்த்தால் நெஞ்சை என்னவோ செய்யுது.. எனக்கு நன்றாக தெரிந்த குடும்பத்தில் இரண்டு பேர் வேளாங்கண்ணியில் இறந்து போனார்கள். அப்ப இருந்த வருத்தத்தைவிட இப்ப அதிகமா இருக்கு.

அன்புள்ள அண்ணா,
அது உங்கள் பெருந்தன்மையை காட்டுது...உங்களை புகழ்வதற்க்காக சொல்லவில்லை, எங்கள்(நான், என் கணவர்) மனதுக்கு நீங்கள் செய்தது பெரிய தொண்டு தான்...
நாங்கள் எல்லாம் வெறும் பண உதவி தான் செய்தோம்...பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை...இந்தியாவில் இருந்திருந்தாலும், அதை செய்திருக்கமாட்டோம்...பண உதவி நான் செய்திருப்போம்...
KEEP IT UP, அண்ணா...

நன்றி...

நன்றி...

அன்பு தங்கைக்கு,

பெரிய வார்த்தைகள் சொல்கின்றீர்கள். எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகவும், கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கிறது. நான் செய்தது கண்டிப்பாக தொண்டு கிடையாது. அங்கே பாதிக்கப்பட்டது எனது ஊர் மக்கள், எனக்கு தெரிந்தவர்கள், என்னைத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள்.. இப்படி ஏதோ ஒரு விதத்தில் என்னோடு சம்பந்தபட்டவர்கள். அவர்களுக்கு நான் உதவச் சென்றது ஒரு கடமை போன்றது. எனது இல்லத்தில் நடக்கும் ஒரு துயர சம்பவத்தில் எனது பங்கு என்னவாக இருக்குமோ அதுதான் அங்கும் இருந்தது.

எங்கள் ஊருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சம்பந்தமேயில்லாமல், மனித நேயத்திற்காக மட்டும் எங்கெங்கோ இருந்து உதவி செய்ய ஓடிவந்தார்களே.. அவர்கள் செய்ததுதான் உண்மையான தொண்டு. பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும், முகம் தெரியாத நபர்களுக்கு உதவும் பொருட்டு பொருட்களும், பணமும் வழங்கினீர்களே.. நீங்கள்தான் அத்தனை பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள்.

நான் பெருந்தன்மையாக இதனைச் சொல்லவில்லை. இந்த விசயத்தில் மட்டும் என்னை யார் பாராட்டினாலும், புகழ்ந்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றேன். 300, 400 க்கும் மேலான இறந்த உடல்களை அப்புறப்படுத்தியவன், நிவாரணப் பணியில் உழைத்தவன் என்று என்னனென்னவோ சொல்லி, ஒரு நேரத்தில் மாவட்ட ஆட்சியரை வைத்து பாராட்டு விழா, விருது என்றெல்லாம் கூட ஏற்பாடு செய்தார்கள். ஓடி ஒளிந்துவிட்டேன். அப்படி எதையும் நான் ஏற்றுக்கொண்டிருந்தால், நான் செய்த செயல்கள் அத்தனைக்கும் அர்த்தம் இல்லாது போயிருக்கும். அல்லது வேறு அர்த்தம் வந்திருக்கும்.

அப்போது வலைப்பதிவுகூட எழுதுவதற்கு மனநிலை, விருப்பம் இல்லை. அந்த நேரத்தில் ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தகவல்கள் கொடுத்து வந்தன. நிறைய பொய்யாய் இருந்தது. உண்மையான நாகையின் நிலைமை என்னவென்பதை எழுத வேண்டியது அவசியமாயிற்று. பல்வேறு நாடுகளில் இருந்து உதவ விரும்பியவர்கள் என்னிடத்தில் உண்மை நிலை கேட்டனர். அவர்களுக்காகவே நான் சில பதிவுகள் பதிந்தேன்.

சகோதரி ஜீவிதாவின் பதிவில் என்னுடைய blog சம்பந்தமான பகுதியை நீக்கிவிடலாம் என்று நினைக்கின்றேன். படித்துவிட்டு அழுததாக எனக்கு சிலர் மின்னஞ்சலும் அனுப்பி இருக்கின்றார்கள். என்றோ முடிந்து போன சம்பவத்திற்கு இப்போது நாம் வருந்தவேண்டாம் என்பது எனது எண்ணம்.

அன்புள்ள அண்ணா,
உங்கள் மனது எல்லோருக்கும் இருக்காது...உங்களை மேன்மேலும் வருத்தபடவைக்க எனக்கு விருப்பம் இல்லை...
மன்னிக்கவும், அண்ணா...
நன்றி...

நன்றி...

Hi Babu,
நான் முதலில் அருசுவை தளத்தை பார்த்தபோது இருந்ததை விட இப்பொழுது நன்றாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தினமும் சமையலே அருசுவையைப் பார்த்துதான்.உங்களின் நகைச்சுவையான பதில்களும் அருசுவை பக்கம் வருவதற்கு ஒரு காரணம்.முடி வளர்வதற்காக உங்கள் நண்பரின் முயற்சிக்ள்.... வீட்டில் சொல்லி சிரித்தோம் ஆனால் இதுவரை எந்த கருத்தும் எழுதவில்லை.சுனாமியில் நீங்கள் செய்ததை படித்தேன். உங்களிடம் நகைச்சுவை மட்டும்மல்ல நல்ல மனதும் இருக்கிறது. இதுபோல உதவி நிச்சயம் நமது கடமை தான் ஆனால். இதைச்செய்பவர்கள் வெகு சிலரே.அருசுவை மேலும் வளர வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்