Naan tharpodu 28 weeks pragnant.. dubai hospital lil delivery parkalamnu irukom.. anga delivery experience ulla yarawadu irukingala? Hospital nalla irukuma? Admit aagum podhu baby ku ennaku enna things kondu pohanum?labour il husband kooda iruka allow pannuwangala
Risana farhan
Hi pa nanu dubai la tha iruken aana enaku experience illa aana nalla papanga solirukanga enaku therinjavanga vera tholigal enna solranga papom
kiruthi
Edhuwume theriyalla.. romba bayama iruku.. thanks pa unga badhiluku
risana
பயப்பிட வேண்டாம் தோழி நான் துபாயில் இல்லை எனக்கு அங்க உள்ள டாக்டர் பற்றி தெரியாது அனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன் முதலில் டாக்டர் மேல் நம்பிக்கை வையின்கள் வீனா எதையும் நினைத்து பயம் வேண்டாம் தைரியமாக செல்லுங்கள் என்ன என்ன திங்க்ஸ்எடுத்துட்டு போலாம்னு அவர்களிடமே கேக்கலாம் தோழி நீங்கள் இதனை நாட்களா எந்த டாக்டரிடம் சென்றிகள் .
firoz
ippo last 1 month ah health centere la than checkup poikitu iruken. anga doctor arabi edhuwume pesa mudiyalla awanga kitta. 8 months ku aprom Dubai hospital anupuwangalam delivery ku.. Inga delivery partha tholigal yarawadu awanga experience share pannina enaku help ah irukum
Happy new year frnds
Happy new year frnds
risana
கண்டிப்பாக தெரிந்த தோழிகள் உங்களுக்கு உதவுவார்கள் கவலை வேண்டாம் அரபி பேசுறதுனால புரியலையா சொல்லுறிங்களா இல்ல கேக்க முடியல சொல்லுறிங்களா உங்கள் கணவரிடம் சொல்லி அவர்களிடம் ஆங்கிலத்தில் கேட்கலாமே என்னோட அனுபவத்தை சொல்லுறேன் ஆனால் ந துபாய் இல்லை நான் வசிக்கும் இடத்தில முதல் மாசம் முதல் டெலிவரிக்கு கடைசி நாள் வரை ஒரு டாக்டரிடமும் டெலிவரி அணைக்கு வேறே டாக்டரிடம் அனுப்பினார்கள் முதலில் நானும் பயந்தேன் ஏன் என்றால் நான் இவளவு நாள் அவர்களிடம் கட்டிவிட்டு இப்போ டெலிவரி டைம் ல வேறே டாக்டரிடம் போறமேன்னு பயந்தேன் . இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக தான் நடந்தது அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன் பயம் வேண்டாம் எனக்கும் என் பேபிக்கும் என்ன என்ன எடுத்து சொல்லணும் டாக்டரிடம் என் கணவர் கேட்டு அதன்படி எடுத்து சென்றோம் மீதி எல்லாம் ஹாஸ்ப்பிட்டல் குடுத்தாங்க ந எனக்கு ஒரு டிரஸ் மட்டும் எடுத்து போனேன் மத்தது எல்லாம் அவங்களே குடுத்தாங்க பேபி க்கு எல்லாம் அவங்களே எல்லாம் குடுத்தாங்க பேம்பர்ஸ் முதல் பேபி போடுற டிரஸ் வரை எல்லாம் அவங்களே பாத்து கிட்டாங்க அனால் அங்க உள்ள ஹாஸ்பிடல்ல எப்படினு எனக்கு தெரியவில்லை கண்டிப்பாக தெரிஞ்ச தோழிகள் சொல்லுவாங்கள்
firoz
neenga enga irukinga? unga badhil enaku romba aarudala iruku.. doctor kita ketta hospital ponaduku aprom ella details um kelunganu solranga.. enaku ippawe therinjikita ellam ready panni wekka easy ah irukumnu thonudu.. thaniya than iruken thunaiku yarumilla paiyanayum nan than pathukanum
Risana
நான் us ல இருக்கேன் நான் கர்ப்பமா இருக்கு போது டெலிவரி டைம் ல உங்கள போல் தான் யோசித்தேன் முன்னாடியே தெரிஞ்ச எல்லாம் எடுத்து வைக்க நல்ல இருக்கும் நினச்சேன் ஆனால் டாக்டர் அது அந்த நேரத்துல தன சொல்லுவாங்கனு சொல்லிட்டாங்க அதுனால எனக்கு தெரிந்ததை நானே எடுத்து கொண்டேன் ஆனால் அது பிரயோஜனம் இல்லாமல் போச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சேன் அது தேவை இல்லாமல் போச்சு அவங்களே எல்லாமே தந்தாங்க குழந்தைக்கும் எல்லாம் அவங்களே பார்த்து கிட்டாங்க உங்களை போலவே தான் என் பேபி நானே தன பார்த்து கிட்டேன் எனக்கு ஆப்ரேசன் என்பதால் பலரும் என்னை பயமுறுத்தினாங்க பெரியவர்கள் இல்லாமல் எப்படி சமாளிப்பிங்கனு சொன்னாங்க .நான் என்னோடைய மனதைரியத்தை விடவில்லை இறைவன் மேல் நம்பிக்கையை இழக்கவில்லை அது மட்டும் இல்லாமல் எனது கணவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார் இறைவன் நமது கண்ணனுக்கு தெரியவில்லை எனில் நமது கூடவே இருக்காருன்னு நினச்சேன் அவர் மேல் பாரத்தை போட்டு நடக்குவதை எல்லாம் நல்லபடியா நடக்கும் நினையுங்கள் தோழி கவலை படவேண்டாம் எதுக்கும் நீங்கள் பேபிக்கு பால் பாட்டில் டிரஸ் டவல் உங்களுக்கு மதிக்க டிரஸ் எடுத்து வச்சுக்கங்க தலைக்கு சீப்பு எடுத்துக்கங்க பேபிக்கு சாக்ஸ் எடுத்துக்கங்க தொப்பி இத்தலம் தான் நான் வாங்கி வச்சேன் ஆனால் எல்லாமே வீட்டிலேயே திருப்பி வச்சிட்டேன் அவங்களே எல்லாம் குடுத்தாங்க
firoz
Romba nanri unga badhiluku.. operation pannina aduku aprom nama epidi nadandukanum usually oworu weetu welailayun baby a pathukum podum. ewalo nalaila weetu welaihal start pannalam?? Sapadu matha vishayamlam epidi irukanum?? Baby a name kulika wekka mudiyuma? Mudinja konjam theliwa sollungapa.Enaku 1st normal ippo placenta down iruku move aahalenna c sec nu solranga.. nan thaniya iruken c sec panninaaprom epidi samalikiradunu bayama iruku.. konjam ungaluku therinja tips kodunga
Risana
என்னுடைய அனுபவத்தை சொல்லுறேன் என்னுடைய டெலிவரி டைம் ல ஆப்ரேஷன் பண்ணி ஒரு வாரம் ஹாஸ்ப்பிடேல வைப்பாங்க அப்பறம் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க நான் வீட்டுக்கு வந்ததும் என்னால சாத்தியமா நடக்க கூட முடியல வலியால ரொம்ப துடிச்சேன் நீங்க நம்பினாலும் சரி நான் வீட்டுக்கு வந்ததும் நாலாவது நாளிலே எந்திரிச்சி வழிய பொறுப்படுத்தாம என் வீடு வேலையை கொஞ்சம் கொஞ்சமாக உக்காந்தே செஞ்சேன் சிம்பிளான சமையலை மட்டும் பண்ணிடுவேன் அப்பறம் பேபி குளிக்க வைக்குறது எல்லாம் நானாகவே செஞ்சிகிட்டேன் புள்ளத்தாச்சிங்க அப்படி சாப்பிடணும் இப்படி சாப்பிடணும் சொல்லுவாங்க ந இங்க தனியா இருக்கறப்ப எப்படி சாப்பிட முடியும் சொல்லுங்க நானே சமைச்சி தான் சாப்பிட்ட ஆகணும் அந்த நேரத்துல என்னால எப்படி ஹெல்தியா சமைக்க முடியும் என்னால சிம்பிளா என்ன சமைக்க முடியுமோ அதை சமைச்சி சாப்பிட்டு கிட்டேன் அவருக்கு சமைக்க தெரியாது குழந்தை குளிக்க வைக்க கூட தெரியாது அதுனால எல்லாமே நானாகவே தான் செஞ்சேன்.என்னையும் பார்த்துகிட்டு பேபியும் பார்த்து கிட்டேன் அவரும் எனக்கு கூட மட ஹெல்ப் பண்ணாரு இல்லனா ரொம்ப கஷ்டமா போயி இருக்கும் நான் கீழே உக்கார்ந்து எப்படி சமைக்காணும் சொல்லுவேன் அதன் படி அவரே செய்வாரு வீட்டுக்கு வந்து நாலு நாள் அவரே பண்ண சொன்ன பிறகு நானே சமாளிச்சு கிட்டு எழுந்துருச்சி சமைக்க ஆரம்பிச்சிட்டேன் இந்த அளவுக்கு பணத்துக்கும் இறைவன் துணையும் இருந்தது என்னோட மனா வலிமையையும் என்னால எல்லாம் செய்ய முடியும் நான் நம்புனா செஞ்சேன் நாமே இத்தலம் பண்ண முடியுமான்னு பயந்து யோசிக்க ஆரம்பிச்ச எதையும் செய்ய முடியாது உண்மையா சொல்லனும்னா என்னோட பிரசவத்தை நானே தான் பார்த்துக்கிட்டேன் அனால் எழுந்திருக்கும் போதும் கவனமாக எழுந்திருக்கும் நான் சமைக்க போகும் போது ஒவ்வரு அடிய எடுத்து வச்சி தான் போவேன் நாம தனியா இருக்கும் போது நம்ம உடம்பை நாம தான் பாதுகாத்துக்கணும் எதையும் நினைச்சி பயப்பிடாதிங்க தைரியமாக இருங்கள் கவலை வேண்டாம் உங்களாலே செய்ய முடியும் நம்புங்க வீட்டுல பெரியவங்க கிட்டையும் கேட்டுக்கங்க அவங்க சொலுறத்தையும் செயின்கள் ஏதாவது சந்தேகம்னா கேளுங்க எனக்கு தெரிஞ்சதை சொல்லுகிறேன்