தேவா - முடியை hot rollers பயன்படுத்தி Curls செய்வது எப்படி?

என்னிடம் hot rollers இருக்கிறது.Curl செய்து ஒரு ஒரு மணி நேரத்தில் curls போய் விடுகிறது.Curls atleast ஒரு பார்ட்டிக்கு போய் வரும் வரை இருக்க என்ன செய்ய வேண்டும்?என்னுடையது நார்மல் முடி.மற்ற தோழிகளும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

Attn: தேவா எங்கிருந்தாலும் வரவும்.வந்து மேலே உள்ள என் கேள்விக்கு பதில் போடவும்.Please.ஏன்பா ரொம்ப நாள் கழிச்சு வந்து கேள்வி கேட்டா யாரும் பதில் சொல்ல மாட்டீங்களா? அப்புறம் நான் அழுதுருவேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ(வடிவேலு stleல)

இங்க பாருங்க பல பேரு பாதி மேக்கப்ல இருக்கோம்...இப்படியே வெளிய போயி எல்லாரயும் பயமுறுத்தாம இருக்கணுமின்னா ஒரு உலக சேவையா நினச்சு வந்து இங்க உள்ள கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா!!!! ஃக்வீன்.. இது உங்களுக்கு மட்டுமில்ல பல த்ரெட்களில் கேட்ட கேள்விகளுக்காகவும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் RSMV, எப்படி இருக்கீங்க? இந்தப் பதிவை நான் எப்படி பாக்காம போனேன். ரொம்ப சாரி. லேட்டா பதில் கொடுக்கறேன். இதே கேள்வியை முன்பு ஒரு முறை யாரோ கேட்டிருந்தாங்க. அது ஸ்ட்ரெயிட்னிங் பத்தின பதிவுன்னு நினைக்கிறேன். அங்கேயே பதில் கொடுத்திருக்கேன். எனக்கு சில சமயம் ஒரே கேள்வியை பல இடத்தில் பல பேர் கேட்கும்போது ஒவ்வொரு முறையும் பதில் அடிக்க இயலாமல் போய்விடுகிறது. இந்த தாமதத்தையும் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முதலில் கர்லிங் செய்ய என்ன முறையைப் பின்பற்றுகிறீர்கள். தலைக்கு போடும் க்ரீம் என்ன? எப்படி பைனல் செட்டிங் செய்கிறீர்கள். எந்த கர்லரை உபயோகப்படுத்துகிறீகள் என்பதனை முடிந்தால் தெரிவியுங்கள். நான் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எனது அடுத்த பதிவினை தங்கள் பதில் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

இலா, உங்கள் பதிவினைப் பார்த்து சிரிச்சேன் . எப்படியோ வந்துட்டேன். என்னால முடிஞ்ச அளவு மத்த பதிவுகளுக்கும் பதில் சொல்லிட்டேன். எப்படி போகுது உங்க வேலை? ரொம்ப பிசியா?

தேவா - நான் இதற்கு முன்பு எந்த spray ஒர் mousse உபயோகிக்கவில்லை ( அப்புறம் எப்படி curls நிறைய நேரம் இருக்கும் என்று நீங்கள் திட்டுவது எனக்கு கேட்கிறது- அந்த ஹாட் கர்லர்ஸ் sales செய்த lady இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.என் முடியிலேயெ தான் demonstration நடந்தது.அப்போது நன்றாக வந்தது.அதில் மயங்கி வாங்கி வந்தேன்.வீட்டிற்கு வருவதற்குள் curls போய் விட்டது.).'HoT Rollers' spray என்று கடையில் பார்த்தேன்.அதை உபயோகிக்க வேண்டுமா? Hot rollers உபயோகித்தால் scalp dry ஆகிவிடுமா? அதனால் பொடுகு வர வாய்ப்பு இருக்கிறதா?

ஸ்ட்ரெயிட்னிங் பகுதியில் போய் பார்த்தேன்.அதே முறையில் HOT ROLLERS உபயோகிக்க வேண்டுமா?
எனனக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொன்னால் கரெக்ட்டா செய்துடுவேன்.

என்னுடையது normal நீள முடி.

தேவா!!!
எப்படி இருகீங்க? எனக்கு வழமை போல இருக்கு வேலை..... அடுத்த வருஷ பிராஜெக்ட்களுக்கு இப்பவே தயார் செய்கிறோம்...
எனக்கு ஒரு கேள்வி இந்த பாரிஸ் ஹில்டன் போல வித விதமா ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ் வச்சுக்கணும் என்று .. என்னோட நேச்சுரல் ஹேர் கலரில் தான்... இதில் என்ன பின் விளவு என்று தெரிந்தால் சொல்லுங்க.. இருக்கிற நாலு முடிக்கு அயர்ன்பாக்ஸ் எல்லாம் போட்டால் அடுத்த மைல் ஸ்டோன் வயசுக்குள்ள அவ்வளவுதான்...

மகன் எப்படி இருக்கிறார்??

"My future starts when I wake up every morning... Every day I find something creative to do with my life."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா எப்படி இருக்கீங்க? என் பையன் நல்லா இருக்கான். அறுசுவையில் எழுதின மகிமையா என்னன்னு தெரியல. ஸ்கூலிலிருந்து வந்ததும் அம்மா நான் பெரிய பையனாயிட்டேன். எனக்கு இனிமே சும்மா சும்மா பாட்டுப் பாடி தூங்க வைக்காதீங்க. ஒரு பாட்டு போதும். நான் தூங்கிப்பேன்னு சொல்லிட்டு 2 நாளா தனியா என்னைத் தொடாம தூங்கறான். அதுவும் அவனா தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இரவிலிருந்து காலைவரை விழிக்காமல் தூங்கறான். எனக்கு சந்தோஷம் தாங்கல. காலையில் எழுந்து டான்ஸ் கூட ஆடிட்டேன். ஆனால அவன் அப்படி சொன்னதும் எனக்குதான் தூக்கம் வரல. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து அவனை செக் பண்ணிட்டே இருந்தேன். ஏன்னா அந்த அளவு அவன்கூட ஒட்டி உரசி, கையைப் பிடிச்சுட்டு தூங்கி பழகிட்டேன். நேத்து நைட்டும் அவன் சொன்னப்ப நான் அழுதுட்டேன். ஏண்டா இப்படி சொல்றன்னு கேட்டதுக்கு, அம்மா நான் பெரிய பையன்மா இப்ப. உங்கள இன்னும் லவ் பண்றேனே. உங்களைத் தான் உலகத்துலயே ரொம்பப் பிடிக்கும். ஏன் அழறீங்கன்னு என்னை பெரிய மனுஷன் மாதிரி தேத்தறான். என் ஷீட்டை மட்டும் வேணா தொட்டுக்குங்க சரியான்னு சொல்றான். ஜலீஜா அக்கா சொன்ன மாதிரி நடந்துட்டு இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு. அதே சமயம் ரொம்ப அழுகையாவும் வந்தது.

எக்ஸ்டென்ஷன் வைக்கறதுனால முடிக்கு ஒண்ணும் ஆகாது. என் அக்கா கூட 6 மாசம் முன்னாடி செஞ்சுக்கிட்டாள். அயர்னிங் செய்ய பிடிக்காட்டி இப்படி செஞ்சுக்கலாம். நீங்கள் வெஸ்டன் டிரஸ் தான் அணிவீர்கள் என்றால் உங்கள் முடி கலரிலேயே செய்யாமல் இடையிடயே இழைகளில் கொஞ்சம் டார்க் பிரவுன் அல்லது பர்கண்டி அல்லது லேசாக டார்க் வயலெட் போன்ற இழைகள் வருமாறு செய்யலாம். நல்ல மாடர்ன் லுக் இருக்கும்.ஒரே நிறத்தில் செய்வது அத்தனை கவர்ச்சியாக இருப்பதில்லை. இங்கேயும் வேலை வேலை என்று ஆகிவிட்டதால் அறுசுவையில் முன்பு போல் எழுத முடிவதில்லை. எந்த வேலையும் இல்லாமல் தொடர்ந்து பல டாப்பிக்குகளில் எழுத வேண்டும் என்று ஆசை. ஆசை இருந்து என்ன செய்யறது?

உங்க கோட்ஸ் எப்பவும் அசத்தல்தான். அந்த Hope ரொம்ப பிடிச்சிருக்கு. பேபி நிச்சயம் வரும். நானும் இப்படிலாம் தவிச்சிருக்கேன். ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட போன போது தட்டுகளை எடுத்து வந்துக் கொண்டிருந்த சர்வர் தவறி தடுக்கி விழுந்து அவர் கையில் இருந்த தட்டின் முனை அடி வயிற்றில் பலமாக இடித்து ஒரு முறை கலைந்தது. ஒரு முறை ஸ்பீட் போட்டில் போய்விட்டு திரும்பி வரும்போது முன்னே இறங்கியவர் ( அன்றைக்கு மிகவும் High Tide ஆக இருந்தது கடல்) கீழே இறங்கும்போது படியை தடுமாறி நகர்த்தி விட நான் 6 அடி உயரத்திலிருந்து விழுந்து விட்டேன். அப்போதும் அப்படியே. பிறகு என் பையன் வயிற்றில் இருந்தபோது இந்தியாவுக்கு வரும்படி ஆனது. கன்பர்ம் கூட ஆகவில்லை அப்போது. 40 நாட்கள் என்று நினைக்கிறேன். எனக்காக தனியாக பார்த்து பார்த்து ட்ராவல் அரேஞ்ச்மெண்ட் செய்தார்கள். அன்று ஒரு நாள் மட்டும் நான் போட்,பிளைட், கார்னு தரை, ஆகாயம் , நீர் வழி மார்க்கமாக இந்தியா வந்து சேர்ந்தேன். ஆனால் எப்போதும் மிகவும் எதிர்பார்த்து, அய்யோ எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்துடன் இருந்த நான் அப்போது மிகவும் தைரியமாக நம்பிக்கையுடன் இருந்தேன். எப்போது வரும் என்று தெரியாதவரை டென்ஷனுடன் தான் இருப்போம். அதனை விடுத்து நிச்சயம் ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்று நம்பிக்கையுடன் அப்போது உள்ள வாழ்க்கையை எஞ்சாய் செய்ய வேண்டும் என்று மனதை மாற்றிக் கொண்ட பிறகு இதுவரை கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த விஷயம் கன்பர்ம் ஆகியது.

அப்போது எனது தோழி சுனந்தா (உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒருவர் அவர். பூ விழி வாசலிலே, நாயகன் படத்தில் நடித்த கார்த்திகா) சித்ரா நீ இப்ப பிரெக்னெண்ட்னு 35 நாட்களில் கெஸ் பண்ணி சொன்னார்கள். இன்றும் அது எப்படி தெரிந்ததுன்னு ஆச்சரியமா இருக்கும். இங்கே நிறைய பேர் குழந்தை வேண்டும் என்று காத்திருக்கிறோம் என்று சொல்லும்போது அந்த நாட்கள் ஞாபகம் வரும். நம்பிக்கையாக அதே சமயம் மிகவும் கவனமுடன் இருங்கள். டாக்டரிடம் மிகவும் நம்பிக்கையாக ட்ரீட்மெண்ட் எடுங்கள் என்றுதான் எல்லோருக்கும் சொல்லத் தோணும். நான் இதற்காக எல்லோரும் திட்டி டான்ஸ் ஆடுவதை விட்டேன். நடப்பது கூட ரொம்பவும் மெதுவாகத்தான். அதே சமயம் உடம்பும் வெயிட் போட்டு பயமுறுத்தியது. எனவே சரியான எடையை சாப்பாட்டு மூலமாக முன்பே திட்டமிட்டுக் கொள்வது அவசியம்.

இவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, டாக்டரிடம் சந்தேகம் வந்தால் வேறு இடத்தில் ட்ரீட்மெண்டை தொடருங்கள். நம்பிக்கையுடன் கூடிய வைத்தியம் மிகவும் அவசியம். எனக்கு ஒரு டாக்டர் ஆபரேஷன் செய்ய வேண்டும். எண்டோமெட்ரியாசிஸ் என்றார். என் ஹஸ்பண்ட் ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது போன்று இருந்தார். ஏனெனில் முதலில் அம்மாவுடன் போய் சந்தித்தேன். அப்போது கணவர் டாக்டர் என்றுநான் சொல்லவில்லை. பிறகுதான் அந்த டாக்டர் விட்டது ரீல் என்று தெரிந்தது. எல்லோருக்கும் இது சாத்தியமில்லையே என்று மனதுக்கு கஷ்டமாக இருக்கும். எடுத்தவுடன் IVF க்கு போகாதீர்கள். வெளிநாட்டில் இருப்பதால் கிடைக்கும் லீவில் ஊருக்குப் போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டால் பலன் எப்படி சரியாக கிடைக்கும். அதற்கென்று மனைவியாவது சென்று எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து, டெஸ்ட் செய்து தெரிந்துக் கொண்டு கணவனுக்காக கேட்டுக் கொண்டும் வரலாம். எந்த நாள் எக் வருகிறது, கணவரின் ஸ்பெர்ம் கவுண்ட் (இதனை வெளிநாட்டில் லேப்புகள்ளில் செய்து கொள்ளலாம்) என்ன, நமக்கு வேறு என்ன பிரச்சனை இருக்கிறது, அதற்கான ட்ரீட்மெண்ட் என்று எதையுமே ஒரு மாத லீவில் முடிப்பது கஷ்டம்.

தாம்பத்தியத்திலும் சில சின்ன சின்ன விஷயங்களையும் கவனித்து தவிர்த்தால் நல்ல விஷயம் கைகூட வாய்ப்பு அதிகம். இலா, உங்ககிட்ட பேசற சாக்கில் அப்படியே மத்தவங்களுக்கு சொல்ல நினைச்சதையும் எழுதிட்டேன். கோச்சுக்காதீங்க. தனியா ஒரு பதிவு போட அலுப்பு.

தேவா - இந்த சனிக்கிழமை ஒரு கெட்டுகெதர் இருக்கிரது.அதற்குள் வந்து பதில் அளித்தால் நான் ஹெர் கர்ல் செய்து கொண்டு கெட்டுகெதர்கு போயி கலக்குவேன் (உங்க புண்ணியத்தில் - உங்களை வாழ்த்திக்கொண்டே....ஹிஹிஹி).

ஹாய் RSMV, உங்களுக்காக ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஹாட் ரோலர்ஸ் உபயோகப்படுத்தி கர்லிங் செய்வது எப்படி என்று இங்கே கொடுத்துள்ளேன்.

1) என்றைக்கு கர்லிங் செய்கிறீர்களோ அதற்கு 2 நாட்களுக்கு முன்போ அல்லது முதல் நாளோ தலைக்கு குளித்து விடுங்கள். அன்றே தலைக்கு குளித்து ஈரப்பதம் முடியில் இருந்தால் ஸ்ட்ரெயிட்னிங் செய்யவோ, கர்லிங் செய்யவோ ஹேர் சரியாக செட் ஆகாது. தலையில் ஈரமில்லாமல், சிக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
2) நல்ல தரமான ஹேர் ஸ்ப்ரே மற்றும் ஸ்டைலிங் ஜெல் (அல்லது மூஸ்) அல்லது சீரம் வாங்கிக் கொள்ளுங்கள்.
2) தலை முழுதும் ( வேர்க்கால்கள்ல் படாத வண்ணம்) சீரத்தை தடவுங்கள்.
3) இந்த நேரத்தில் ஹாட் ரோலர்சை ரெடியாக்கிக் கொள்ளுங்கள்.
3) இப்பொழுது தலையை நன்கு வாரிவிட்டு நீளமான க்ளிப்புகளைக் கொண்டு ( ப்யூட்டி சலோனில் உபயோகிக்கும் அதே மாதிரி க்ளிப்புகள் கடைகளில் கிடைக்கின்றன. இது முடியை நன்கு பிடித்துக் கொள்ளும்) முடிகளை செக்ஷன்களாக பிரித்துக் கொள்ளுங்கள். நல்ல பலனைத் தர ஒவ்வொரு செக்ஷனும் மெலிதாக அதாவது நிறைய முடிகள் இல்லாமல் இரண்டு விரல் அடர்த்திக்கு இருக்குமாறு பார்த்து பிரித்துக் கொள்ளுங்கள்.
4) ஒவ்வொரு பிரிவு முடியிலும் இப்போது கர்லர்சை வைத்து சுற்றி பின் போடுங்கள். கீழிருந்து மேலாக சுற்றுவது அல்லது மேல் பக்கமாக சுற்றுவது ஹேர் ஸ்டைலைப் பொறுத்தது. பொதுவாக இந்தியன் உடைகளுக்கு கீழிருந்து மேல் நோக்கி சுருட்டினால் நன்றாக இருக்கும்.
5) சிம்ரன், பூஜா சில படங்களில் வைத்திருப்பது போன்ற ஸ்ப்ரிங் கர்லிங் வேண்டுமானால் முடியை ரோலரில் சுற்றும் முன் முறுக்கிவிட்டு பிறகு சுற்றுங்கள்.
6) ரோலரின் பேக்கேஜில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் கழித்து ரோலரை நீக்குங்கள்.
7) இப்போது முடி கர்லிங் ஆகி விட்டிருக்கும். பிறகு தேவையான ஸ்டைலில் வைத்து லேசாக ஹேர் ஸ்ப்ரே செய்து செட் செய்துக் கொள்ளுங்கள். ஹேர் ஸ்ப்ரே பார்ட்டி இருக்கும் அன்று உபயோகித்தால் கூட போதுமானது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்தால் அது தலை முடியில் அதி\க நேரம் இல்லாதவாறு அடுத்த நாளே முடியை அலசி விடுங்கள்.

கர்லிங் நெடுநேரம் இருக்கவும், நல்ல லுக்கைத் தரவும் Perming சீரம் அல்லது Mousse ஐ ரோலர்ஸ் உபயோகிக்கும் முன்பு முடியில் அப்ளை செய்வது அவசியம். நன்றாக செட் ஆக வேண்டுமென்றால் ரோலர் தலையில் இருக்கும்போது ஹேர் ட்ரையரை Hot Mode ல் ஒரு நிமிடம் , Cool Mode ஒரு நிமிடம் என்று மாற்றி மாறி வைத்து முடியில் காண்பிக்கலாம். சின்ன ரோலரை உபயோகித்து கர்லிங் செய்தால் மிகவும் அழகாக இருக்கும். தலை பெரிதாக தெரியாது. அதிக சூட்டில் ரோலர்ஸ் இருந்தால் முடிக்கு கெடுதல் உண்டாகும். 15 நிமிடங்களுக்கு மேலே வைக்காமல் இருப்பது நல்லது. சந்தேகம் எதுவும் இருப்பின் கேளுங்கள். நான் என்னுடைய ஸ்ட்ரெயிட்னரைக் கொண்டே கர்லிங்கும் செய்துக் கொள்வேன். கொஞ்சம் ப்ராக்டிஸ் வேண்டும். அவ்வளவே. சலோனில் கேட்டால் செய்துக் காண்பிப்பார்கள்.

தேவா - மிகவும் நன்றி.என் கூக்குரலுக்கு ஓடி வந்து பதில் சொன்னதற்கு.
இப்பொழுது என் கேள்வி கணைகளை தொடுக்க போகிரேன்.
1.Loreal Hot Curls spray உபயொகிக்கலாமா?
2.Spray தலைக்கு குளித்தால் போகுமா?எண்ணெய் தடவினால் போகாதா?
3.ஸ்ப்ரயினால் முடிக்கு பாதிப்பு இல்லையா?

ரொம்ப தொந்திரவு கொடுப்பதிற்கு மன்னிக்கவும்.
மீண்டும் நன்றி.

தேவா, உங்க பதிவை எல்லாம் படிக்க படிக்க எனக்கு என்னவோ ரொம்ப தெரிஞ்சவங்க கிட்ட பேசற மாதிரி இருக்கு! ஆஃபீஸ் ஃப்ரஸ்ட்ரேஷன் தாங்காமல் முழு நாளும் தலைவலியும் எரிச்சலுமாக அழுகையுடன கழித்த எனக்கு, இங்க வந்து உங்க பதிவை படிச்ச அப்பறம் நிம்மதியா இருக்கு.. என்ன பினாத்தல்னு தோணுதா? கரெக்ட் கர்ல்ஸ் செய்வது எப்படி, உங்க பையன் தூங்க ஆரம்பிச்சுட்டான் என்பதற்கும் என் தலைவலிக்கும் என்னய்யா சம்பந்தம்??! நல்ல கூத்து போங்க!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்