என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

எப்படி இருக்கீங்க?என்ன சொல்லுறாங்க பாப்பா,அட பாப்பா கூட பேசினீங்களா.தினமும் குறைந்த பட்சம் 1/2 மணிநேரமாவது தடவிக்கொண்டே பேசுங்க.எப்பவும் பாஸிட்டிவ்வா நினைங்க.சந்தோஷமா இருக்கனும்.ஆயிரம் கவலை இருந்தாலும் ஒரு நாளு மாசம் தள்ளி வச்சுடுங்க.இது மாதிரி நாட்கள் வாழ்வில் வருவது அரிது.

வரும் போது சந்தோஷமா அனுபவிக்கனும்.கால்சியம்,இரும்பு சத்து மாத்திரைலாம் ஒழுங்கா சாப்பிடுங்க.பிடிச்சதை நல்லா சாப்பிடுங்க.நல்ல படியா குழந்தையை பெற்று இந்த அறுசுவையில் எங்களோட அந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்துக்கனும்.ஓகே

நீங்க எப்படி இருக்கீங்க? நான் நன்றாக இருக்கிறேன். உங்களுடைய அறிவுரைக்கு நன்றி. கட்டாயம் பாஸிட்டிவ்வா திங்க் பண்றேன்.கட்டாயம் அறுசுவை சகோதரிகளோட தான் சந்தோஷமான செய்தியை பகிர்ந்துப்பேன்.

உங்கள்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா வாழ்த்துக்கள்.உங்கள் பதிவை படித்தவுடன் உங்கள் சந்தோசத்தில் நானும் கலக்க ஆசைப்பட்டேன்.உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் மனதை சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். நானும் தற்போது 4மாதம். விரும்பியதை அம்மாவிடம் கேட்டு சாப்பிடுங்கள்.இந்த சமயத்தில் ஆசை பட்டதை கேள் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

உமா தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! நல்ல சத்துள்ள் உணவாக சாப்பிட்டு, மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஜானகி

ஹாய் உமா, உங்க சந்தோஷம் இன்று போல் என்றும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள். நல்லபடியாக உங்க குட்டிப் பாப்பாவை பெற்றெடுக்க எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். உணவில் முருங்கக்கீரை, அதன் பூ, காய் மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். கர்ப்பப்பைக்கு நல்ல வலு கொடுக்கும். பழ வகைகளில் அதிக சூடு தரும் மாம்பழம், பைனாப்பிள், பப்பாளி போன்றவறை தவிருங்கள். கேரட் ஜூஸ் மிகவும் நல்லது. அடிக்கடி குடியுங்கள். இரவில் பாலில் குங்குமப்பூ சேர்த்து குடியுங்கள். இரண்டு வேளையும் கூட குடிக்கலாம். இப்போதிருந்தே மதர் ஹார்லிக்ஸ் போன்றவற்றை குடிக்கலாம். அதில் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. டாக்டரின் ஆலோசனையைக் கேட்டு பார்லி குடியுங்கள். அடிக்கடி வேண்டாம். கால் வீக்கத்தை தவிர்க்க, தூங்கும்போது கால்களை ஒரு தலையணையின் மேலே வைத்து தூங்குங்கள். அடிக்கடி காலை மசாஜ் செய்து விடுங்கள். தனியாக இருக்கும் நேரங்களில் பாப்பாவுக்கு புது விதமாக துணியில் நாப்பி மடிக்க பழகலாம். நல்ல இசையை கேளுங்கள். ரிலாக்ஸ்டாக இருங்கள்.

அதிகமாக அயர்ன் எடுத்துக் கொண்டால் காண்ஸ்ட்டிபேஷன் உண்டாகும். எனவே ப்ரூன்ஸ் போன்ற நார்ச்சத்து மிக்க பொருட்களையும் கூட எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த சமயங்களில் கான்ஸ்ட்டிபேஷன் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முகவும் அவசியம். ஏனென்றால் அதிகமாக புஷ் செய்வது போன்று வயிற்றை சுருக்கக்கூடாது. எங்கள் வீடுகளில் கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் இப்போதிலிருந்தே சொல்ல சொல்வார்கள். அது மனதை ரிலாக்ஸ் செய்ய சொல்லலாம் ( நம்பிக்கை இருந்தால்). அறுசுவையில் ஏற்கனவே யாரோ அதனை எழுதி இருந்தார்கள்ள். தேடிப் பாருங்கள்.

அம்மாக்கூட இருப்பதால் பயம் இன்றி தைரியமாக பிரசவத்தை எதிர் நோக்குங்கள். எப்போதும் ஹாஸ்பிட்டல் செல்ல தயாராக 8 மாதம் இருக்கும்போதே ஒரு பையை ரெடி செய்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான ஒவ்வொன்றையும் யோசித்து வையுங்கள். பேபி கிட் ( லோஷன், பவுடர், சோப், நாப்கின் , 2 டிரஸ் போன்றவை), நிறைய துணி நாப்கின்கள், துண்டுகள், உங்களுக்கு அப்போது ஈசியாக இருக்க மெட்டர்னிட்டி நைட்டீஸ், நர்சங் பேட்ஸ், நாப்கின்ஸ் ( மதர் சைஸ்), கொஞ்சம் அடுத்த சைசில் உள்ளாடைகள், இப்படி யோசித்து வையுங்கள். பிளாஸ்க், பாட்டில் போன்றவற்றை அப்போதைக்கு எடுத்து செல்லலாம்.

கவலையற்று, தன்னம்பிக்கையுடன் இருங்கள். தைரியமாக உங்க குட்டிப் பாப்பா வரும் நாளை எதிர்நோக்குங்கள். டாக்டரிடம் சிறு விஷயமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெறுங்கள். தலைவலிக்குக்கூட டாக்டரைக் கேட்காமல் மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள். குழந்தை பிறந்த நல்ல சேதியை எங்களுக்கு தெரிவியுங்கள்.

தேவா உங்களின் விரிவான பதிலுக்கு மிக நன்றி. அறுசுவை எனக்கு அருமையான தோழிகளைக் கொடுத்துள்ளது.கர்ப்பரட்சாம்பிகைக்கு வேண்டுதலே உள்ளது. உங்களுக்கு அந்த ஸ்லோகம் தெரிந்தால் எனக்கு அனுப்புங்கள்.

அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ஜானகி.

அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய அம்மா அங்கு உள்ளார்களா? அப்படி இல்லையென்றால் மிக கவனமாக இருங்கள்.கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்.

பாசமுடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

செல்வி மேடம் எனக்கு ஒரு சந்தேகம். நான் காலையில் டீ குடிக்கிறேன். இது சரியா? என் கணவர் ஹார்லிக்ஸ் குடிக்கச்சொல்கிறார்.அப்புறம் வாரம் 3 முறை இளநீர் குடிக்கின்றேன். தலைக்கு குளிக்கும் பொழுது குடிக்கலாமா?எனக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லை.

அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா, இந்த லிங்கில் சென்று பாருங்கள். ஸ்லோகம் இந்த லிங்கில் இருக்கிறது.
http://www.arusuvai.com/tamil/forum/no/6958

மேலும் சில பதிவுகள்