ஆலோசனை தாருங்கள்

தனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.

ஆடை கண்டிப்பாக குழந்தை தூங்கும்போது தான் அலச முடியும்.. சமைக்கும் போது வீட்டில் டைனிங் டேபிளில் வைத்து எல்லாம் கட் பண்ணலாம்.. குழந்தை நம் பக்கத்தில் இருந்து விளையாட வசதியாக இருக்கும்...டைனிங் டேபிளில் கொஞ்ச நாள் எதுவும் வைக்காமல் குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்து காய்கறி கட் பண்ணலாம். குழந்தை கண் முன்னே நாம் வேலை செய்தால் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்..

baby bouncer (அல்லது stroller) இருந்தால் குழந்தையை அதில் போட்டுவிட்டு நீங்கள் வேலைகளைப் பார்க்கலாம். உங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் எச்சரிக்கையாக‌ இருக்கத்தான் வேண்டும்.

ஆடை கழுவ‌... இந்தச் சமயத்தில் washing machine எனக்குப் பெரும் உதவியாக‌ இருந்தது. அப்போதுதான் வாங்கினேன். துணியைக் காயப் போடும் போது stroller இல் வைத்திருப்பேன். தோட்டம் செய்ததும் இப்படித் தான்.

‍- இமா க்றிஸ்

எனது மகன் 7 மாதங்கள் ஆனால் இன்னும் உட்காரவில்லை. இருக்க வைத்துவிட்டு எதுவும் செய்வது முடியாதே.

இறைவனே துணை

குழந்தை உட்கார 8,9மாதங்கள் ஆகும்.. பொறுமையாக இருங்கள்.. தானாகவே உட்காருவார்கள்..

baby bouncer இல் தாராளமாக‌ உட்கார‌ வைக்கலாம். //இன்னும் உட்காரவில்லை.// என்பது பிரச்சினை அல்ல‌. அது குழந்தைகளை வைத்து உணவு ஊட்டுவதற்குப் பயன்படுத்துவது; நீங்கள் சொல்வதை விட‌ குறைவான‌ மாத‌ வயதான‌ குழ‌ந்தைகளைக் கூட‌ வைக்கலாம். பௌன்சரில் சாய்வாகத்தான் இருப்பார்கள். பெல்ட் போட்டிருக்கும். கூகுள் இமேஜஸ் பார்த்தீர்களானால் புரியும்.

‍- இமா க்றிஸ்

நன்றி சகோதரிகளே இருவரின் ஆலோசனைகளுக்கும். முயற்சிக்கிறேன்.

இறைவனே துணை

குழந்தைக்கு புட்டில் பால் கொடுக்கிறேன். அதனால் தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது. ஏதாவது வழி கூறுங்களேன்.புட்டில் பால் குடிக்கும் போது தாய்ப்பாலையும் கொடுத்துக் கொண்டுதான் வந்தேன். சில நாட்களாகத்தான் இந்த பிரச்சினை. கவலையாக உள்ளது.

இறைவனே துணை

Imma sis indhu sis pl hlp me

இறைவனே துணை

குழந்தைக்கு புட்டில் பால் கொடுக்கிறேன். அதனால் தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது. // ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். நீங்கள் புட்டி பால் கொடுக்காமல் நன்றாக இரு மார்பகங்கள் பாலை பீச்சி விட்டு குளித்த பின் குழந்தைக்கு கொடுத்து பாருங்கள்

ஏதாவது வழி கூறுங்களேன்.புட்டில் பால் குடிக்கும் போது தாய்ப்பாலையும் கொடுத்துக் கொண்டுதான் வந்தேன். சில நாட்களாகத்தான் இந்த பிரச்சினை. கவலையாக உள்ளது.// நான் பின்பற்றியதை கூறுகிறேன் பார்முலா பாலில் நான் சர்க்கரை சேர்க்க மாட்டேன்.
சர்க்கரை சேர்த்து கொடுத்த பாலின் ருசி குழந்தை அறிந்தால் தாய்ப்பால் குடிக்க மறுத்து விடும்.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சர்க்கரை சேர்க்காமல் பழகி விட்டோம்.
இது ஒரு சின்ன டிப்ஸ் எனக்கு தெரிந்ததை சொன்னேன்.
சர்க்கரை சேர்க்காமல் கொடுங்கள்.

இமா அவர்களது பதில் உங்களுக்கு உதவலாம்.

எனக்கு வியாழக் கிழமை அன்று ஆப்பரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் சில பதிவுகள்