மரணம்

மரணம் ஏன் ஏற்படுகிறது.கடவுள் என்பவர் உண்டா உலகில்

உங்கள் அம்மாவிற்கும் உங்களிற்கும் இடையிலான அன்னியோன்னியத்தை இங்கே உணர்ந்திருக்கின்றேன்.

ஆழ்ந்த இரங்கல் . தங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

muthukk7 என்பதுவும் நீங்கள் தானா?

//அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் நான் இல்லை.// புரிகிறது. சுலபமில்லை. //என் தம்பி பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்.அவனை நினைத்து இன்னும் மனம் வலிக்கிறது// உங்கள் தம்பிக்காகவாவது மெதுவே வெளியே வரப் பாருங்கள். பொறுப்புகள் இருக்கும் போது சற்று வளைந்துகொடுக்கத் தான் வேண்டும்.

தியானம் செய்வீர்களா? முயற்சி செய்து பாருங்கள். மனதை வேறு வேலைகளில் திருப்பப் பாருங்கள். நான் அறுசுவையில் உங்களுக்குப் பதில் சொல்ல‌ வருவது... என் மனதை மாற்ற‌ நான் எடுக்கும் முயற்சி. உங்களை ஒருநிலைப்படுத்த‌ உதவும் செயற்பாடு ஏதாவது ஒன்று இருக்கும். அதைப் பிடித்துக் கொண்டு வெளியே வரப் பாருங்கள். அவசரம் வேண்டாம். மெதுவேதான் வெளியே வர‌ முடியும். காலம் எல்லாவற்றையும் ஆற்றும்.

உங்களுக்கு என் அன்பு

‍- இமா க்றிஸ்

நானும் என்னுடைய கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறேன்.உங்கள் அம்மாவின் புகைப்படம் பார்த்தேன்.மனம் வருந்துகிறது.இறப்பு என்பது இல்லாமல் இருக்கலாம்.தங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.

உங்களிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. என்னை அன்பாக தூக்கி வளர்த்த என் சித்தப்பா நேற்று காலமானார். திடீர் மாரடைப்பு.40வயதுதான் முடிவடைந்து உள.அவருக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது.
மனதிற்கு வேதனையாக உள்ளது. சற்றும் எதிர்பாராத மரணம்.கடைசியில் நான் அலைபேசியில் பேசியது மட்டும் தான்.நேரில் பார்க்க கூட எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
மிகுந்த பாசமுள்ள சித்தப்பா அவர்.

மரணம் நமக்கு ஏற்படுவதை விட நம்மை சார்ந்தவர்களுக்கு ஏற்படுவதை ஏற்பது மிகவும் கடினம். என்னுடைய தந்தைகும் கேன்சர் வந்து மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார் எனக்கும் இதே மனவேதனை தான். அடுத்து நடப்பதை நினைத்தால் பயமும் கவலையும் என்னை வேறு எதையும் செய்ய விடுவதில்லை. ஏதாவது அற்புதம் நடந்து அப்பா சரியானால் எப்படியிருக்கும் என்று மனம் குழந்தை போல் யோசிக்க மூளை இல்லை என சொல்ல போராட்டம் ஒய்வதில்லை

Life is one enjoy and give happiness to others

//நம்மை சார்ந்தவர்களுக்கு ஏற்படுவதை ஏற்பது மிகவும் கடினம்.// 100% உண்மை.

//அடுத்து நடப்பதை நினைத்தால் பயமும் கவலையும் என்னை வேறு எதையும் செய்ய விடுவதில்லை.// அடுத்து நடப்பதை பிறகு பார்க்கலாம் கண்ணா. இப்போ நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌ பிரதானமான‌ விஷயம்... உங்க‌ அப்பாவை நல்லா பார்த்துக்கிறது. சிகிச்சையை டாக்டர்கள் பார்க்கட்டும். கிடைக்கும் நேரத்தை உங்கள் அப்பாவோட‌ செலவளியுங்க‌. அவரை சந்தோஷமா வைச்சிருங்க‌. பேசுங்க‌. அப்பாவுக்குப் பிடிச்சதை செய்யுங்க‌. காலம் ‍ போனால் வராது. கவலைப்பட‌ ஒரு காலம் இருக்கு. அது இது இல்லை கண்ணா. துக்கத்தை தூர‌ வைச்சிட்டு அப்பாவைக் கவனியுங்க‌. நீங்களும் நல்லா சாப்பிடுங்க‌; உடம்பைக் கவனிச்சுக்கங்க‌. நீங்க‌ நல்லா இருந்தால்தான் அப்பாவைக் கவனிக்க‌ முடியும். இன்னொரு விஷயம்... அப்பா ஏற்கனவே தன் உடல்நிலையைப் பற்றி... உங்கள் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் உள்ளே கவலையில் இருப்பார். நீங்க‌ கவலையா இருக்கிறதைப் பார்க்க‌ இன்னும் அதிகம் கவலையாக‌ இருக்கும். நீங்கள் தைரியமாக‌ இருப்பதாகக் காட்டிக்கொண்டால்... அவர் கொஞ்சம் ஆறுதலாக‌ இருப்பார். ட்ரை பண்ணுங்க‌.

கிடைக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்களை... மிஸ் பண்ணிராதீங்க‌. சந்தோஷங்கள் உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றலாம். ஆனால் இப்போ அது உங்க‌ அப்பாவுக்குத் தேவை. கிடைக்கும் காலத்தை விட்டுரக் கூடாது. இப்போது உங்கள் இருவர் கையிலும் உள்ள‌ நேரம் _ ‍ ஒவ்வொரு நிமிடமும்... மிகப் பெறுமதியான‌ விடயம். நல்லபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவை தான் மூலதனம். பிறகு நினைத்துப் பார்க்கும் போது... 'சரியானதைச் செய்தோம், அப்பாவை சந்தோஷமாக‌ வைத்திருந்தோம்,' என்கிற‌ சந்தோஷம் / ஆறுதல் உங்களுக்கு இருக்கும்.

//அற்புதம் நடந்து அப்பா சரியானால் எப்படியிருக்கும்// :‍) கண்ணா... மனிதர் யாரும் சாகா வரம் பெற்று வரவில்லை. இப்போது வேண்டுமானால் அற்புதம் நடக்கலாம். ஆனால் என்றோ ஒரு முடிவு இருக்கும் அல்லவா! அது முதுமையாக‌ இருக்கலாம். ஆனாலும்... அப்பா அப்பாதான். அப்போதும் இதே கவலை வரும். நீங்கள் முகம்கொடுத்துத் தானே ஆக‌ வேண்டும்!!

//என்று மனம் குழந்தை போல் யோசிக்க மூளை இல்லை என சொல்ல போராட்டம் ஒய்வதில்லை// இந்த‌ யோசனை.... உங்கள் கையில் உள்ள‌ காலத்தைப் பயன்படுத்தத் தடையாக‌ இருக்கும். இப்போதைக்கு... இருப்பதை மட்டும் நினையுங்கள்; இல்லாது போகும் காலம்... வரும் போது பார்க்கலாம். அதை நினைத்து இப்போதே கவலை வேண்டாம்.

தைரியமாக‌ இருங்கள்.
உங்களுக்கு என் அன்பு.

‍- இமா க்றிஸ்

ஏற்றுக் கொள்ள‌ மிகவும் கடினம் இல்லையா! என்ன‌ செய்வது! மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்களால் இயன்றவரை சித்தப்பா குடும்பத்தாருக்கு ஆதரவாக‌ இருங்கள்.

//கடைசியில் நான் அலைபேசியில் பேசியது மட்டும் தான்.நேரில் பார்க்க கூட எனக்கு கொடுத்து வைக்கவில்லை.// அதுவும் ஒரு வகையில் நல்லதுதானோ என்னவோ!

எம் மனது எப்பொழுதும் கிடைக்காதவற்றையே தான் எண்ணும். கிடைத்ததை நினைத்துப் பார்ப்பது குறைவு. பேசக் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

உங்கள் சிறிய‌ தந்தையார் குடும்பத்தினர் நன்மைக்காக‌ என் பிரார்த்தனைகள்.

அன்புடன்....

‍- இமா க்றிஸ்

//நானும் என்னுடைய கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறேன்.// மிக்க‌ நல்ல‌ யோசனை. இங்கு மற்றவர்களுக்கு பதில் சொல்வதே உங்கள் மனதைத் திசை திருப்பப் போதுமானதாக‌ இருக்கும்.

//உங்கள் அம்மாவின் புகைப்படம் பார்த்தேன்.// :‍) //இறப்பு என்பது இல்லாமல் இருக்கலாம்.// எனக்கு இப்பொழுதும் இறப்பு நன்று என்றே தோன்றுகிறது. எங்களுக்கு வேண்டும் என்பதற்காக‌ இன்னொருவர் சிரமங்களுக்கு இடையில் வாழவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு... என்னால் ஏற்றுக் கொள்ள‌ முடியாததாக‌ இருக்கிறது. எமக்குப் பிடித்தவர்கள் நன்மைக்காக‌... இறப்பை ஏற்றுக் கொள்வோம். அவர்கள் நிம்மதியாக‌ உறங்கட்டுமே!

உங்களுக்காக‌ என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும்.

அன்புடன்...

‍- இமா க்றிஸ்

:‍) தங்கள் கனிவான‌ வார்த்தைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த‌ நன்றிகள்.

அன்புடன்...

‍- இமா க்றிஸ்

இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா.

மேலும் சில பதிவுகள்