உதவுங்கள் தோழிகளே...

உதவுங்கள் தோழிகளே...

எனக்கு 23 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது..சில சமயம் தாய்பால் போதாமல் அவ ரொம்ப அழுகை...நான் நல்லா தான் சாப்பிடரேன்..ஆனா எனக்கு சாப்பிடும் முறை பத்தி சொல்லுங்க..நான் பூண்டு,சுண்டைக்காய் வற்றல்,பாகற்காய்,Mothers Horlicks(atleast 5 times per day)இப்படி நிறய சாபிடரேன்...ஆனா எவ்ளோ நேரத்துக்கு ஒரு தடவை சாப்பிடனும்னு தெரியல...ஒரு தரம் பால் குடுத்தா உடனே சாப்பிட்டாதான் அடுத்த முறை பால் வரும்மா??நான் எப்பவும் ரைஸ் தான் சாப்பிடரேன்...வேர எதுவேனா சாப்பிடலாமா??பாப்பாக்கு கேஸ் problem இருக்கு போல stomach ரொம்ப்ப upset இருக்கறதுனால ரொம்ப்ப அழுகை எனக்கு தாங்க முடியல எதாவது சொல்லுங்கள்....Please...

எனக்கு 23 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது..சில சமயம் தாய்பால் போதாமல் அவ ரொம்ப அழுகை...நான் நல்லா தான் சாப்பிடரேன்..ஆனா எனக்கு சாப்பிடும் முறை பத்தி சொல்லுங்க..நான் பூண்டு,சுண்டைக்காய் வற்றல்,பாகற்காய்,Mothers Horlicks(atleast 5 times per day)இப்படி நிறய சாபிடரேன்...ஆனா எவ்ளோ நேரத்துக்கு ஒரு தடவை சாப்பிடனும்னு தெரியல...ஒரு தரம் பால் குடுத்தா உடனே சாப்பிட்டாதான் அடுத்த முறை பால் வரும்மா??நான் எப்பவும் ரைஸ் தான் சாப்பிடரேன்...வேர எதுவேனா சாப்பிடலாமா??பாப்பாக்கு கேஸ் problem இருக்கு போல stomach ரொம்ப்ப upset இருக்கறதுனால ரொம்ப்ப அழுகை எனக்கு தாங்க முடியல எதாவது சொல்லுங்கள்....Please...

Anitha..

Anitha..

அய்யோ பாவம்டா.பாப்பாவை பால் கொடுத்தபின் குப்புற படுக்க போட்டு அதன் நெஞ்சை உங்கள் கைய்யால் தூக்கி பிடியுங்கள் மடியில்; இதமாக இருக்கும்.அல்லது தோளில் போட்டு கொஞ்ச நேரம் விடுங்கள்.
பால் பத்தாம தான் அழுகுத்ன்னு சொல்ல முஇயாது.இந்த 23 நாளில் குழந்தைக்கான சரியான் வளர்ச்சி உள்ளதா என்று மருத்துவரை கேளுங்கள்...மிகவும் எடை குறைவிருந்தால் மருத்துவரே புடிப்பால் கொடுக்க சொல்வார்.
என் கசினின் குழந்தையும் 2 மாதம் வரை அழுதது இப்ப 2 வாரமாக பரவாயில்லை.தாய்ப்பால்கொடுக்க கொடுக்கத் தான் சுரக்கும்.ஆனால் ஒவ்வொருமுறையும் சாப்பிட வேண்டும் என்பதை இப்போ தான் கேட்கிறேன்.எது குடிக்கரீங்களோ இல்லையோ தண்ணீர் ரொம்ப நிறைய குடிங்க.
பூண்டை நெய்யில்வருத்து சாதத்தில் பிசைந்து சாப்பிடுங்க..1 ஸ்புன் ஜீரகத்தை வறுத்து அதில் தண்ணீர் 2 கப் ஊற்றி கொதிக்க விட்டு அந்த தண்ணீரை பருகுங்கள்.
இதுவெல்லாம் நான் செய்தது தான் மற்றபடி இப்படி அணுபாமுள்ளவர்கள் உங்கள் குழந்தைக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்.பாவம் பயந்து போயிருக்காங்க.
பால் போதவில்லையென்று புட்டிப்பலை இப்போ கொடுக்காதீர்கள் மருத்துவர் சொல்லாமல் வயிறுவலி வந்து விடப் போகிறது.பயப்படாதீங்க சரியா ஒரு 4 மாசம் ஆனா குழந்தை கொஞ்சம் வளந்துடும் முக்கால் ப்ரச்சனை மாறி விடும்

ரொம்ப ரொம்ப நன்றி தளிகா....எனக்கு தெரியல ஒவ்வொரு முறை சாப்பிடனுமானு அதான் கேட்டேன்...எவ்ளோ முறை சாப்பிடனும்..அவ stomach Castor oilல தடவினாங்க சூடா இருக்குமோனு...ரொம்ப்ப பசினா நல்லா Milk குடிக்கறா sometimes தான் குடிக்க அடம்...நல்லா Activaவா தான் இருக்கா..Birth weight 2.99இருந்தா போன வாரம் 3.15இருந்தா...

Anitha..

Anitha..

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நல்லா கை காலை உதைச்சுட்டு விளையாடுறாளா!!பார்க்கவே நல்லா இருக்கும்.நீங்க எப்பவும் போல சாப்பிடலாம்பா.கட்டுபாடுன்னு எதுவும் இல்ல.ஆனால் நீங்க சாப்பிடுகிற சாப்பாடு உங்க குழந்தைக்கு பாதிக்கும்,எப்படின்னா நீங்க பச்சை கீரை சாப்பிட்டால் குழந்தையின் மலம் பச்சை நிறத்தில் இருக்கும்.அதுபோல் நீங்க சாப்பாட்டில் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துக்குங்க.குழந்தைக்கு கேஸ் ப்ராப்ளம் வராது.நீங்க அசைவம் சாப்பிடுபவரா இருந்தால் சுறாபுட்டு செய்து சாப்பிடலாம்.இதனால் நன்கு பால் சுரக்கும் என்று என் அம்மா சொல்வாங்க.

அதிகமா காரம் சாப்பிடாதீங்க.நீங்க தலைகுளிச்சிட்டு வந்து உடனே பால் கொடுக்காதீங்க.தலையை நல்லா துவட்டி அட்லீஸ்ட் தண்ணீர் அரை டம்ளர் குடிச்சுட்டு பாப்பாக்கு பால் கொடுங்க.குழந்தைக்கு பால் கொடுத்ததும் தோலில் போட்டு ஏப்பம் வரும் வரை முதுகை லேசா தட்டி கொடுங்க.குழந்தை டக்குன்னு ஏப்பம் விடும்.கேஸ் ப்ராப்ளம் இருக்காது.குழந்தை பால் குடிச்சதும் கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் உச்சா போய்விடும்,அதனால் அதற்கு கூட அழலாம்.பொதுவா குழந்தைக்கு குறைந்த பட்சம் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை பால் கொடுங்க.

நீங்க நல்ல ஆரோகியமானதா சாப்பிடுங்க.உங்களுக்கு சளி பிடிக்கிற பழங்களை தவிர்த்திடுங்க.அதே மாதிரி தான் காய்கறிகளும்.உங்களுக்கு சளி பிடிச்சா பாப்பாக்கும் பிடிச்சிடும்.வாயு அதிகமா இருக்கிற காய்களை,கிழங்குகளை தவிர்த்து பாருங்க.குழந்தைக்கு ஒத்துக்குதா இல்லையான்னு நீங்க தினமும் சாப்பிடுற சாப்பாட்டை வத்து தெரிந்து கொள்ளலாம்.ரொம்ப வயித்துவலியால அழுதாள்னா உட்வர்ட்ஸ் க்ரேப் வாட்டர் கொஞ்சூண்டு கொடுத்து பார்க்கலாம்.சிலபேர் விளக்கெண்ணெய் வயித்துல ஒரு சொட்டு தடவி விடுவாங்க.

ஓயாம அழுதாங்கன்னா டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போயிடுறது நல்லது.பொதுவா 1 மாசம் குழந்தைக்கு மருந்து எதுவும் கொடுக்க மாட்டாங்க.ஏன்னா உங்க தாய்ப்பால் தான் அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி.எதுக்கும் பயப்படாதீங்க.பெரியவங்க இதுக்கு நல்ல பதில் சொல்வாங்க.நம்ம அறுசுவை சகோதரிகள் நிறைய பேர் இருக்காங்க,வந்து பதில் சொல்வாங்க.

அனிதா நீங்க நிறைய சூப் குடிங்க,
குழந்தைக்கு வெண்ணீர் நல்ல கொதிக்க வைத்து ஆறவிட்டு ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமா இல்லை பாலாடையால் கொடுஙக்ள்.
வயிற்றில் நல்ல தேங்காய் எண்ணை கூட தேய்க்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

கவலை வேண்டாம் சரியான அளவு எடை கூடியிருக்கு என்றே நினைக்கிறேன்.அப்போ அழுகை இபால்போதாமல் அல்ல என்று நினைக்கிறேன்.
உடை நல்ல கவர் பன்னி தானே போடுரீங்க?இல்ல அனிதா தினம் பால் ஒரு 3கப் மத்ததெல்லாம் பாலன்ஸ்டா சாப்பிடலாம்.தண்ணீர் நெறைய குடிக்கலாம்.
பக்கத்துல ஆர்ய வைத்தியசாலா இருந்தா பிரசவ அரிஷ்டம் கேட்டு வாங்கி குடிச்சு பாருங்க.பல விஷயங்களிலும் குணம் கிடைக்கும்.
சுற்றுமுற்றும் குழந்தைக்கு அசவுகரியமா எதுவாவது இருக்கான்னு பாருங்க..உடை,வெட்பம்,ஃபேன்,வெளிச்சம், இப்படி எதையாவது மாத்தி பாருங்க.
தினம் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைய்யுங்க.இரவு சுடு தண்ணீரில் துணியை முக்கி துடைத்து தூங்க வைய்யுங்க.
குழந்தையின் நலனை இனி நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க.பாப்பா கொஞ்சம் வளந்தா சரியாகிடுவா.டோன்ட் வரி அனிதா.

குழந்தை ஒரு 3 மாதம்வரை எதுக்கு அழுதுன்னே புரியாது ரொம்ப பாவமா இருக்கும். என் குழந்தை பிறந்து 25 நாளில் 3 நாள் தொடர்ந்து அழுகை. கையில் கூட தூக்க விட மாட்டா. எங்க அம்மாவும் என்னவெல்லாமோ பண்ணி பார்த்தாங்க, டாக்டரிடம் பார்த்தோம் அவரும் ஒன்றும் இல்லைனு சொல்லிட்டார். அழுகை நின்ன பாடில்லை. சுளுக்குனு சொன்னாங்க. அதுசரிபண்ற ஆள் கிட்ட போனோம் அப்பவும் கதறி துடிச்சா. காதுகிட்ட, ஹக்கிள் கிட்ட தொட விட மாட்டா. ரொம்ப பாவமா இருந்தது.

எல்லோரும் அம்மைனு சொல்லிட்டாங்க. வேப்பிலைய அரைத்து காதுகிட்ட போட்டாங்க சரியாகல. என் அம்மா எதுக்கும் தாய்ப்பாலை காதில் 2 சொட்டு விட்டு பாருனு சொன்னாங்க. செய்தேன் மறுநாள் காலையில் காதில் ஏதோ பரு உடைந்து வருவது போல் தெரிஞ்சுது. அப்போதான் புரிந்தது. எனக்கு மூக்கின் கீழ் பருவந்து ரொம்ப பெருசாகி வலிதாங்க முடியாம 1 வீக் கஷ்டபட்டேன். அதுதான் அவளுக்கு இன்பெக்ஷன் ஆகி பிள்ளை இவ்ளோ கஷ்டப்பட்டுட்டா.திரும்பவும் தாய்பால் விட்டேன் மறுநாளே சரியாயிட்டு.

எங்க முதலிலேயே சொன்னாங்க பாலை லைட்டா காதில் விடு சரியாகும்னு நாந்தான் அப்படியெல்லாம் பண்ணகூடாதுனு டாக்டர், அங்கே இங்கேனு அலைஞ்சேன்.எங்க பாட்டி குழந்தைய உடனே டாக்டர்கிட்ட கொண்டு போகமாட்டாங்கலாம். எல்லாத்துக்குமே தாய்ப்பால்தான் போட சொல்லுவாங்களாம். வயிற்று வலினா கூட குழந்தை தொப்புளில் தாய்பால்தான் 3 சொட்டு விடுவாங்களாம்

அனிதா குழந்தை அழ நிறைய காரணம் இருக்கும். நீங்க தினமும் ப்ரெட்டை பாலில் முக்கி சாப்பிடுங்க. மதர் ஹார்லிக்ஸ விடவும் டாக்டர் ஒரு பவுடர் ரெகமண்ட் பண்ணுவாங்க. அதை ட்ரை பண்ணுங்க. முட்டை சாதம் சாப்பிடுங்க. கீரை நிறைய சாப்பிடலாம். எங்கம்மா சாப்பிட கூடாதுனு சொன்னாங்க ஆனால் டாக்டர்ஸ் (Gynec & pedia) கீரை கட்டாயம் சாப்பிட சொன்னாங்க. குழந்தை டாக்டர் நீ கீரை சாப்பிடுவதால் குழந்தை பச்சயா மோஷன் போறானு பேசக்கூடாது நீ நிறைய கீரை சாப்பிட்டு பீடிங் பண்ணதான் பாப்பாவுக்கு தேவையான் போஷாக்கு கிடைக்கும்னு சொன்னாங்க. நான் 2 நாளுக்கு ஒருமுறை கீரை நிறைய சாப்பிட்டேன். பயப்படாதீங்க அனிதா ரொம்ப அழுதா டாக்டரை கன்சல்ட்பண்ணுங்கப்பா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றி சுகன்யா,தளிகா,ஜலீலா,தனிஷா..ஆமாங்க காரமா ஒன்னும் சாப்பிடரது இல்ல..சூடு இருந்தா விளக்கெண்ணை தடவினா போதும்ல.. போனா அழுகறா அப்பொதான் தெரிஞ்சது உடம்பு சூடுனு..நான் என்ன சாப்பிடா அவளுக்கு உடம்ம்பு சுடு குறையும்..நான் பூண்டு ரைஸ் சாப்பிட்டேன் அதுக்கு அப்புறம் அவளுக்கு நல்லா சூடு புடிச்சது...நிறய்ய சாப்பிடக்கூடாதா...தூங்கி எந்திரிச்சா நல்லா பால் குடிக்கரா.. இப்போ இருக்கற வீட்ல தொட்டில் போட முடியல...அதான் அவளுக்கு தூங்க முடியல..நாங்க வேர வீடு எங்க பக்கத்துல பாக்கறோம்...

Anitha..

Anitha..

அனிதா ஒரு 3 பல் பூண்டை நெய்யில் வறுத்து சாதம் கலந்து சாப்பிடனும்..பின்ன வெந்தயத்தை ஊற்வச்சு குடிப்பாங்க அது குளிர்ச்சி.ஆனால் என் பேச்ச நம்பிடாதீங்க எனக்க் சரியா தெரியாது ...பின்னாடி வர்ரவங்க சொல்லுவாங்க

ஹாய்மா புதுவரவா?உங்க தலைப்பை இடம்விட்டு போடுங்க..பெரிதாக நீளுகிறது வளக்கமாக நாந்தான் இந்த தவரை செய்வேன்..ஜலீலக்கா கம்பை தூக்குவாங்க :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்