தேதி: October 19, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பலா சுளை - 25
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
பலா பழம் 10 சதவிகிதம் மட்டும் பழுத்ததாக வாங்கவும். நல்ல காயாகவும் இருக்க கூடாது.
சுத்தம் செய்து, கொட்டை நீக்கி நீளநீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கியவற்றை ஒரு தட்டில் ஒன்றுடன் ஒன்று படாமல் வெயிலில் 2 மணி நேரம் காய விடவும்.
1/4 டமளர் நீரில் உப்பை கரைத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் சிறிது சிறிதாக போட்டு உப்பு கரைசல் சேர்த்து கரகரப்பாக பொரிக்கவும்.
Comments
சாதிகா அக்கா
என்ன இந்த அயிட்டமெல்லாம் எங்க ஊர் ஆச்சே ஸூப்பரா இருக்குமே நான் இதெல்லாம் சாப்பிட்டு வருடங்கள் பல ஆகிவிட்டது, சக்க உப்பேரி, சக்க கூட்டு வாவ வருடங்கள் ஆகிவிட்டது அக்கா.
தங்கை விஜி
விஜி,எனக்கு சென்னை வந்த பின் கிடைத்த ஆருயிர் தோழி ஒருவர்.நகமும் சதையுமாக இருப்போம்.என்னுடைய சுக துக்கங்கள் அனைத்தையும் அவரும் சுமப்பார்.அவர் கேரளாவை சேர்ந்தவர்.சென்னை ஏர் போர்ட்டில் பொறியாளராக இருந்த அவர் கணவர் இப்பொழுது கேரளாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனது தான் சமீபத்திய என் சோகம்.அவர் கற்று தந்தது தான் இந்த ரெஸிப்பிக்கள்.சக்க உப்பேரி,சக்க கூட்டு செய் முறை சொல்லுங்களேன்.
ஸாதிகா
arusuvai is a wonderful website