மன வேதனை குறைய வலி கூறுங்கள் தோழிஸ்

தோழிகளே! கணவன் மனைவிக்குள்
பிரச்சனை வருவது இயல்பே.

புரிதல் இல்லை, விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லை என்றால் இல்லற வாழ்க்கையில் சந்தோசம் என்பது எப்படி இருக்கும்?

என்னுடைய கணவரை நான் புரிந்த கொண்ட அளவிற்கு அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை.

மாமியார் மருமகள் பிரச்சனையே எங்கள் வீட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல் ஆகி விட்டது.

மாமியார்க்கு நான் என்ன செய்தாலும் பிடிக்கவில்லை.
(சமையல் செய்வதில், வீட்டினை சுத்தமாக வைப்பதில்)
அவர்களை நான் தாயாக தான் நினைத்து அனுசரித்து செல்கிறேன்.
மாமியார் செயல்பாடானது இப்போது எனக்கு பிடிக்கவில்லை.

காரணம் கணவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவாங்க.அவர் இல்லாத நாட்களில் அன்பாக நடந்து கொள்வார் மாமியார். இருக்கும் நேரத்தில் கணவணிடம் உன் மனைவி செய்வது எனக்குப்பிடிக்கவில்லை சாப்பாடு நல்லாவே இல்லை அது சரி இல்லை இதுசரியில்லை என்று சொல்லி விட்டு பிரச்சினையை உருவாக்கி விட்டு சென்று விடுவார்கள்.

பின்பு என்ன நடக்கும் கணவர் என்னிடம் வந்து சண்டை போடுவார்.
சண்டை எல்லை மீறும். நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ள மாட்டார்.
நான் தப்பே செய்யாவிட்டாலும் தவறு என் மீது தான் என்று கூறுவார். அதையும் தாங்கி கொண்டு இரவு முழுவதும் கண்ணங்களை நனைத்து கொண்டு மறுநாள் காலை வேலையினை தொடங்க செல்வேன்.
மாமியார் எதுவும் தெரியாதது போல் என்னிடம் பேச வருவார்கள் நான் பேசமாட்டேன்.குழந்தைகளை கவனித்து கொண்டு நான் சமையல்,மாமியார்க்கு தேவையான வேலைகளையும் செய்து கொடுத்து கொண்டு நாட்களை நகர்த்துகிறேன்.

ஆனாலும் கணவரிடம் கூறை கூறுவதும் மட்டும் அவர்கள் நிறுத்துவதில்லை .

கணவர் அம்மாவின் பேச்சை கேட்டு என்னிடம் பேசாமல் மாதக்கணக்கில் இருப்பார்.

10 வருடம் ஆகி விட்டது. தினமும் பிரச்சனை. வேலைக்கு போனால் போன் கூட பேச மாட்டாங்க.

எனக்கு வாழவே பிடிக்கவில்லை தோழிகளே.

கணவரோ உன்னை கல்யாணம் பண்ணதால நிம்மதி இல்லை.உங்க அம்மா வீட்டுக்கு போ.

நான் நிம்மதியா இருப்பேனு சொல்லுறாரு. நான் என்ன பண்ண தோழிகளே.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு இப்படி பேசாமல் இருப்பது யாருக்கா இருந்தாலும் வேதனையாகவும் மனவுலைச்சலாகவும் தான் இருக்கும்..

நீங்கள் விரைவில் வீட்டு வேலை முடித்து தனிக்குடித்தனம் செல்ல என் வாழ்த்துக்கள்..
பத்து வருடங்கள் பொறுமை காத்து விட்டீர்கள்.. எல்லாம் கைகூடி வரும் காலம் நெருங்கி விட்டது..

அவர்கள் பேசாததை நீங்கள் பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள்.. அவர்களே மாறுவார்கள்.. குடும்பம் என்றால் எல்லாம் கடந்து போய் தான் ஆக வேண்டும்..

உங்கள் குழந்தையிடம் அதிக நேரம் செலவிடுங்கள்..

ஒருத்தருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம் செல்வது தப்பு இல்லை.. ஆனால் சந்தோஷமாக செல்லுங்கள்.. மனக்கசப்புகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள்..

மாமியார் நாத்தனார் அக்கா அண்ணன் தம்பி தங்கை இப்படி எந்த உறவாகினும் நமக்கு நிச்சயம் வேண்டும்..

அவர்களை விட்டு தள்ளி போனபின் அவர்களே அறிவார்கள் உங்களை பற்றி.. மகிழ்ச்சியுடன் இருங்கள்..

உங்கள் மனம் மாறுவதற்கு அறுசுவை தோழிகளுக்கு பதில் போடுங்கள்.. அப்படி போட போட நம் வீட்டில் நடக்கும் பிரச்சினை பெரிதாக தெரியாது.. இது என் அனுபவம்..

வீட்டுக்கு வீடு வாசற்படி !! எல்லார் வீட்டிலேயும் இருக்க கூடிய பொதுவான பிரச்சனை தான்.

உங்கள் மாமியார் உங்கள் சமையலை குறை கூறினால், "நல்லா இல்லையா அத்தை! நீங்க ஒரு தடவ செஞ்சு காமிங்க நான் அது மாதிரி பண்றேன்னு சொல்லுங்க." அப்புறம் தெரியும்

உங்க மாமியார் சொல்லும் பதில்லையே அடுத்த கேள்வியாக வையுங்க.

உங்க மாமியார் பற்றி உங்க கணவர் கிட்ட எதுவும் பேசாதீங்க. உங்க மாமியார் சொல்ற படி தலையை ஆட்டி வையுங்க. காசா பணமா !!

உங்க கணவர் வரும் போது அழுத முகமா இல்லாம நல்ல குளிச்சு முடிச்சு அவருக்கு பிடிச்ச மாதிரி அலங்காரம் பண்ணிக்கோங்க. உங்க வீட்டாளுக பத்தி குறை சொல்லாம உங்க தனிப்பட்ட சந்தோஷத்தை பத்தி மட்டும் பேசுங்க.

உங்க கணவர் கூட மனம் விட்டு பேசுங்க. கால் அமுக்கி விடுங்க.

பிரச்சனை இருக்கேன்னு நினைச்சு கவலை படறதுக்கு பதில் அதுல சிக்காம எப்படி தப்பிக்கிறதுனு யோசிங்க. குழந்தையோட நல்லா விளையாடுங்க. நாணல் மாதிரி வளைந்து கொடுத்து போங்க.

உங்கள் வாழ்வில் சந்தோஷம், நிம்மதி மலர என் வாழ்த்துக்கள்

- பிரேமா

மேலும் சில பதிவுகள்