குழந்தை உட்காரும் பருவம்

அனைவருக்கும் வணக்கம்!!
என் பெயர் #நாசியா (Naziya)
நான் இன்று தான் அறுசுவையில் சேர்ந்தேன். எனக்கு சென்ற ஆண்டு ஆகஸ்டு 11 கல்யாணம் நடந்தது. மே மாதம் 6ந் தேதி பெண் குழந்தை பிறந்தது (சிசேரியன் அறுவை சிகிச்சை)
அவளுக்கு தற்போது 6 மாதம். நான்கு கால்கள் கொண்டு அவள் தவழவில்லை. மூட்டி போட்டு 1 step வந்து கீழே விழுந்தது விடுகிறாள். ஆனால் கைகள் கொண்டு முன்னே வருகிறாள். 1 வாரத்தில் இருந்து தானே உட்கார்ந்து கொள்கிறாள். சற்று நேரம் கூட தனியாக விடமுடியவில்லை. பின்னே விழுகிறாள். பின் தலையில் அதிகம் அடி விழுகிறது. தொட்டிலில் இருந்து கூட ஒரு முறை கீழே விழுந்து அடிபட்டது. ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறையாவது அடி விழுகிறது. எதாவது ஐடியா செல்லுங்கள் பிளிஸ்.
நான் என் அனைத்து சந்தேகத்திற்கு அறுசுவையில் தேடுவது உண்டு. உதவுங்கள்.

குழந்தையின் அருகில் யாரவது ஒருவர் எப்போதும் இருக்க வேண்டும். குழந்தையை சுற்றி தலையனை வைக்கலாம். தலையனை வைத்தால் பின்னே விழுந்தாலும் அடி படாது.சில குழந்தைகள் மெதுவாகத்தான் தவழ்வார்கள். என் மகன் 7 மாத ஆரம்பத்தில் தான் தவழ ஆரம்பித்தான். அதனால் கவலை வேன்டாம்.

M Esakki

தலையணை வைத்தாலும் தள்ளி விட்டு விடுவாள். ஆனால் இப்போது உட்கார கற்று கொண்டாள். நேற்று தான் முட்டி போட்டு தவழ்ந்தாள். மகிழ்ச்சி கொள்கிறேன்.

தலையணை வைத்தாலும் தள்ளி விட்டு விடுவாள். ஆனால் இப்போது உட்கார கற்று கொண்டாள். நேற்று தான் முட்டி போட்டு தவழ்ந்தாள். மகிழ்ச்சி கொள்கிறேன்.

மகிழ்ச்சி நாசியா...

M Esakki

உங்கள் குழந்தைக்கு தற்போது ஆறு மாதம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..

ஆனால் நான்கு கால்களை கொண்டு தவழவில்லை என்று வறுந்துகிறீர்..

குழந்தை எட்டு மாதத்தில் எட்டு எடுத்து வைக்கும் என்பது பழமொழி மட்டும் அல்ல உண்மை மொழி அல்லவா!!அதாவது எட்டு மாதங்கள் முடிவடைந்ததும் நான்கு கால்களை கொண்டு எட்டு அடி எடுத்து வைக்கும்..

குழந்தை எட்டு மாதத்தில் தான் நன்கு உட்காரும்.. குழந்தைகளை உட்கார வைப்பது மிகவும் தவறு..

நாங்கள் ஏப்பம் வர மட்டும் மடியில் உட்கார வைத்து பழக்கினோம். ஆனால் உட்கார அவளே கற்று கொண்டாள். தானே செய்து கொண்டால் தவறா? இப்போது நாங்கள் அவளை படுக்க போட்டால் தானே குப்புறப்படுத்து கை ஊன்றி உட்கார்ந்து கொள்கிறாள். என்ன செய்ய வேண்டும்?

தானே உட்கார்ந்தால் பிரச்சினை இல்லை.. சில குழந்தைகள் பத்து மாதத்தில் நடந்து விடுவார்கள்..

நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.. அடி படாமல் முடிந்த வரை தடுத்து விடுங்கள்..

இப்போது நன்றாக தவழ்கிறாள். உட்காரவும் செய்கிறாள். 7 மாதம் தொட்டுவிட்டாள். எங்கள் மடி மீது வரும்போது தானே எங்களை பிடித்து நிற்கிறாள்.

7 மாதம் உணவு அட்டவணை கூறுங்கள் ப்ளீஸ்

இப்போது நன்றாக தவழ்கிறாள். உட்காரவும் செய்கிறாள். 7 மாதம் தொட்டுவிட்டாள். எங்கள் மடி மீது வரும்போது தானே எங்களை பிடித்து நிற்கிறாள்.

7 மாதம் உணவு அட்டவணை கூறுங்கள் ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்