பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

தோழிகளே பட்டி தீர்ப்புக்கு இன்னும் 1 நாள் மட்டுமே இறுப்பதால் உங்கள் இறுதிகட்ட வாதத்தை இன்று இரவுக்குள் கொடுத்து விடுங்கள். நாளை தீர்ப்பு பதிவிட இலகுவாக இருக்கும்,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

எதிரணி தோழி மிகவும் அழகாக வாதிட்டார்.. ஆனால் நிதி சேர்க்காத வீட்டில் உள்ள குழந்தையின் வருத்தத்தை பற்றி நடந்த உண்மை நிகழ்வை சொன்னார்..
நடுவரே எனக்கு தெரிந்த ஒரு உண்மை நிகழ்வை சொல்லுகிறேன்..

எங்கள் வீட்டில் அருகில் இரண்டு தம்பதியினர் வாழ்ந்து வந்தார்..(இது 2008ல் நடந்தது)..இருவரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளியில் சேர்த்தார்கள்.. ஒரு தம்பதியினர் வசதி படைத்தவர்.. இன்னொரு தம்பதியினர் அன்றாட வாழ்வில் தேவையை பூர்த்தி செய்து பள்ளிக்கு ஃபீஸ் கட்டும் அளவுக்கு உள்ளார்..

அந்த இரு தம்பதியினருக்கும் ஐந்து வயதில் பெண் குழந்தை தான் உள்ளது..

ஒரு நாள் அவர்கள் பள்ளியில் பரதநாட்டியம் கற்று கொடுப்பதாக நோட்டீஸ் கொடுத்தார்கள்.. அனைத்து குழந்தைகளும் ஆவலுடன் நோட்டீஸ் வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்..

எங்கள் வீட்டில் அருகில் உள்ள தம்பதிகளில் ஒரு குழந்தை மட்டும் நோட்டீஸ் வாங்கவில்லை.. மாறாக அன்று மாலையில் பள்ளியில் நடந்ததை வழக்கம் போல கதை சொல்ல அந்த குழந்தை தொடங்கியது.. அவள் அம்மாவும் கேட்டு கண் கலங்கி விட்டார்.. அம்மா இன்று எங்கள் பள்ளியில் பரதநாட்டியம் கற்று தருவதற்கு நோட்டீஸ் கொடுத்தார்.. நீயே எவ்வளவு கஷ்டம் படுகிறாய் எனக்கு மாதம் ஃபீஸ் கட்டுவதற்கு.. அதனால் நான் மட்டும் நோட்டீஸ் வாங்க வில்லை என்று அந்த பிஞ்சு குழந்தை சொன்னது..

இதில் குழந்தை எவ்வளவு பொறுப்பாக வளர்கிறது என்று பாருங்கள்.. அந்த குழந்தை அடம் பிடிக்கவில்லை.. எவ்வளவு புரிதல் அந்த குழந்தையிடம்.. இன்று அந்த குழந்தை நிச்சயம் நல்ல நிலையில் இருக்கும் என்று நான் உறுதியாக சொல்வேன்..

காசு பணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. குழந்தைக்கு பெற்றோர்கள் அருகில் இருந்து அனைத்தும் கற்று தர வேண்டும்..

//இதில் குழந்தை எவ்வளவு பொறுப்பாக வளர்கிறது என்று பாருங்கள்.. அந்த குழந்தை அடம் பிடிக்கவில்லை.. எவ்வளவு புரிதல் அந்த குழந்தையிடம்.. இன்று அந்த குழந்தை நிச்சயம் நல்ல நிலையில் இருக்கும் என்று நான் உறுதியாக சொல்வேன்..///,

குழந்தை பொறுப்பு கற்றுக்கொண்டது இருக்கட்டும். பொறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் பெற்றோர் பொறுப்பாக இருந்திருந்தால். குழந்தை குழந்தையாக வளர்ந்திருக்கும். குழந்தை வயதில் விருப்பப்படும் நியாயமான விசயங்கள்கூட பொருளாதாரம் குறைவான இடத்தில் வளரும் பிள்ளைகளுக்கு நிராகரிக்கப்படுவது வருந்தக்கூடிய விசயம் இல்லையா?
அப்பிள்ளை பொறுப்பு பெற்று நல்லவிதமாக வளர்ந்திருக்கும் சரி. அப்போதுவாய்ப்பு பெற்று கூடவே வளர்ந்த மற்ற வீட்டு பிள்ளைகள் பொறுப்பற்ற கெட்ட பிள்ளைகளாகவா வளர்ந்தார்கள்?
வாழ்வில் எவ்வளவு உயரம் சென்றாலும் அவ்வயதில் நிராகரிக்கப்பட்டதன் வலியும் வடுவும் மாறாது மறையாது நடுவரே...!
அப்பிள்ளைகூட தன் பிள்ளை தன்னைப்போல பொருள் இல்லைன்னு விரும்பியது கிடைக்காமல் இருந்துவிடக்கூடாதுன்னு பொருளை சேர்க்கும் நடுவரே.

//பொறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் பெற்றோர் பொறுப்பாக இருந்திருந்தால். குழந்தை குழந்தையாக வளர்ந்திருக்கும். குழந்தை வயதில் விருப்பப்படும் நியாயமான விசயங்கள்கூட பொருளாதாரம் குறைவான இடத்தில் வளரும் பிள்ளைகளுக்கு நிராகரிக்கப்படுவது வருந்தக்கூடிய விசயம் இல்லையா?//

எல்லா பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்து கொடுக்கவே விரும்புவர். என் அணி தோழி சொன்னது போல அந்த குழந்தை பெற்றோரிடம் நிலைமையை சொன்னதும் அந்த குழந்தை கஷ்டப்பட்டது போல தாய் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று பார்க்க வேண்டும்.

சில பேருக்கு திறமை இருக்காது வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். அந்த பெற்றோர்களுக்கு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஏதோ ஒரு குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவர்கள் இன்று கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு அத்தியாவசிய கல்வி கூட அந்த காலக்கட்டத்தில் கிடைத்திருக்காமல் இருந்திருக்கலாம்; அது அவர்களின் பெற்றோர்கள் செய்த தவறு / அறியாமை.

எம் தோழி சொன்ன பெற்றோர்கள், குழந்தைக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் கல்வி என்பது அத்தியாவசியம்; நடனம் என்பது அடுத்த கட்டம். அந்த பெற்றோர்கள் குழந்தைக்கு அத்தியாவசிய கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர்; நடனம் என்பது விருப்பம் இருந்தால் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்; அதற்கு பணத்தை விட விருப்பமே அவசியம். எத்தனை பணக்கார வீட்டு பிள்ளைகள் விருப்பமில்லாமல் பெற்றோர் நிர்பந்தம் காரணமாக பகட்டுக்கு நடனம் கற்றுக்கொள்கிறார்கள் தெரியுமா?

வசதியான வீட்டு பிள்ளைகளை நல்ல பீஸ் அதிகமுள்ள ஸ்கூலில் சேர்த்து விட்டு வேலைக்கு சென்றோ / பிசினஸ் பார்த்துக்கொண்டோ பிள்ளைகளை கவனிக்காமல் இருக்கும் (சில) பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் தெரியுமா? அவர்களது விருப்பு வெறுப்புகள் தான் தெரியுமா??

கஷ்டப்பட்டு படிக்கும் ஏழை குழந்தைகள் தன் வீட்டின் நிலைமையறிந்து பணத்தின் மதிப்பை அறிந்து நன்றாக படித்தும் சமூகத்தில் நல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக வளர்வதோடு தான் பெற்றோர் படும் கஷ்டங்களை எடுத்துக்காட்டாக கொண்டு முன்னெச்சரிக்கையோடும் சிக்கனத்தோடும் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

- பிரேமா

///சில பேருக்கு திறமை இருக்காது வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். அந்த பெற்றோர்களுக்கு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஏதோ ஒரு குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவர்கள் இன்று கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு அத்தியாவசிய கல்வி கூட அந்த காலக்கட்டத்தில் கிடைத்திருக்காமல் இருந்திருக்கலாம்; அது அவர்களின் பெற்றோர்கள் செய்த தவறு / அறியாமை.///
தனக்கு பின் வரும் சந்ததியிடமும் இப்படி காரணம் சொல்லமுடியுமா நடுவரே? நாங்கள் கஷ்டப்பட்டு எங்களின் பிள்ளைகள் வாழ்வை உயர்த்துகிறோம் என்றுதான் எண்ணுகிறார்கள். மாறாக பிள்ளைகளின் நேரத்தை உறிஞ்சியோ, பிள்ளைகளை கவனியாமல் விட்டோ யாரும் பணம் பொருள் பின்னே ஓடுவதில்லை.

///வசதியான வீட்டு பிள்ளைகளை நல்ல பீஸ் அதிகமுள்ள ஸ்கூலில் சேர்த்து விட்டு வேலைக்கு சென்றோ / பிசினஸ் பார்த்துக்கொண்டோ பிள்ளைகளை கவனிக்காமல் இருக்கும் (சில) பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் தெரியுமா? அவர்களது விருப்பு வெறுப்புகள் தான் தெரியுமா??/// எதிரணியினரே சொல்கின்றனரே ஒரு சில பெற்றோர்கள் இப்படி பகட்டாக இருக்கின்றனர் என்று. பிறகு அவர்களை பற்றி எதற்கு விவாதம்? அதிகபடியான பெற்றோர் எந்த மனநிலையில் எதற்காக பொருளீட்ட ஓடுகின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும் நடுவரே. அதுவும் இவ்வகை பெற்றோர் யாரும் தங்களின் பிள்ளைகளுக்கு அவசியப்பட்ட நேரத்தில், அவசிய பட்ட இடத்தில் இருக்க தவறுவதில்லை. அவர்கள் சொன்னதுபோல பகட்டில் இருக்கும் சிலர் அப்படி இருக்கலாம் ஆனால் அவர்களை பற்றி எங்கள் அணியில் பேசவே இல்லையே. எதிரணி கூறுவதுபோல அதிகககக.... நேரம் பிள்ளைகளுடன் செலவழித்து எந்த பிள்ளையும் அதை பெரியவர் ஆனதும் குறையாகக்கூறியதில்லையா?
நடுவரே இவர்கள் கூறுவதுபோல பகட்டுகாட்டும் பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே முன்னேறிகொண்டிருக்கும் சமூகத்தில், தனது பிள்ளையும் காலூன்றி நல்ல தலைநிமிர்ந்த வாழ்வு வாழ கல்வியும் அதில் உள்ள முன்னேற்றங்களையும் தன் பிள்ளை பெறவேண்டும் என நினைத்து பெற்றோர் அவர்களுக்காக பொருள் சேர்ப்பது எவ்வகையில் தவறு? முந்தைய தலைமுறையினரின் அறியாமை அல்லது இயலாமை அல்லது நமது பாசக்கார எதிரணியினர் சொல்வதுபோல பாசம் மட்டுமே காட்டி, பிள்ளைகளை கைக்குள்ளஏயே வைத்து இது தவறு, சமூகத்தில் இப்படி செய்தால்தான் சரிவரும், இப்படி பலதும் சொல்லி இத்தலைமுறை பெற்றோரை( ஒருசிலரை) பொருளாதாரத்தில் முன்னேற்றாமல் (சேர்த்து வைக்காமல்) விட்டு விட்டனர். அதன் விளைவு இத்தலைமுறை பெற்றோரில் பலர் பொருளாதாரத்தை தேடி ஓடுகின்றனர். ஆனால் எதிரணி சொல்வதுபோல பிள்ளைகளின் நேரத்தையோ, வாழ்வையோ வீணடித்து இல்லை. அடுத்த தலைமுறையும் இப்படியே சகித்து வாழனும்னு சொல்கின்றார்களா? அப்படி சொல்ல இவர்களுக்கு உரிமையை வழங்கியது யார்? போன தலைமுறை சேர்த்து வைத்ததால் எதிரணிபோல இருப்பவர்களின் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் நிறைய வளர்ந்துள்ளது. ஆனால் ஏற்கனவே உயர்ந்துள்ள பெற்றோரும் பிள்ளைகளும் மேலும் உயர்ந்து கொண்டேபோக, ஏழ்மையில் இருக்கும் பெற்றோரும் பிள்ளைகளும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் தியாகம் செய்து கொண்டு நேரத்தை பிள்ளைகளுடன் வாய்மூடி செலவழிக்க வேண்டுமா நடுவரே??? என்ன கொடுமை நடுவரே...! என்ன கொடுமை...?!

///கஷ்டப்பட்டு படிக்கும் ஏழை குழந்தைகள் தன் வீட்டின் நிலைமையறிந்து பணத்தின் மதிப்பை அறிந்து நன்றாக படித்தும் சமூகத்தில் நல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக வளர்வதோடு தான் பெற்றோர் படும் கஷ்டங்களை எடுத்துக்காட்டாக கொண்டு முன்னெச்சரிக்கையோடும் சிக்கனத்தோடும் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..///

இவ்வகையான நல்ல குணங்கள் நல்லொழுக்கங்கள் எல்லாம் கஷ்டப்படால்தான் வரும்னு சொன்னால், பிள்ளைகள் கெஞ்சி கொஞ்சி கேட்கும்போது எதிரணியில் உள்ளதுபோன்ற பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் ஏன் சரி என ஒப்புக்கொண்டு வகுப்பில் ( ரான்ஸ், பாட்டு) சேர்த்துவிடனும்? கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் , நீ இதற்கெல்லாம் ஆசைபடக்கூடாது என்பது போன்ற பேச்சுக்களும் கருத்துக்களும் இவர்களுக்கெல்லாம் எப்படி வருகிறது நடுவரே ? அவர்களுக்கு சொல்லும் விஷயங்களில் இவர்கள் பூர்த்தியடைந்து மனதிருப்தி அடைந்து விட்டனர். அப்படி இருந்தால்தான் இப்படிபட்ட எண்ணங்கள் வரும். அப்படி இருக்க நீங்கள் அனுபவித்த அல்லது உங்க பிள்ளைகள் அனுபவிக்கும் ஒன்றை அடுத்தவரோ, அவர்களின் பிள்ளைகளோ விருப்பப்படக்கூடாது என எப்படி சொல்லலாம்? அதற்கு அவர்களின் இயலாமையையும், பொருளாதாரத்தையும் இவர்களே உட்டிக்காட்டுகின்றனரே!!!
பத்து வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளது நடுவரே, ஒரு பெற்றோர் பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பம், மற்றொன்று பொருளாதாரத்தை முன்னேற்ற முயலும் குடும்பம். இதில் இரண்டு குழந்தைகளும் நம் எதிரணி சொல்வதுபோல நடன வகுப்பு செல்ல விரும்புகின்றனர். வளரும் குடும்பத்து பிள்ளை பெற்றோர் நிலையறிந்து பொறுப்பாக இது நமக்கு அநாவசியம் என்று புரிந்து கொள்வது கட்டாயம் என்று இவர்கள் நினைத்தால்...! வளர்ந்த நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளை பெற்றோரிடம் பணம் இருக்கு நாம் அதனை வீணாக செலவு செய்யக்கூடாது. அதனை பாதுகாக்கனும், இல்லாதவர்களுக்கு கொடுக்கனும் அப்படின்னு யோசிக்கனும் அதுவும் கட்டாயமே....!!! சரிதான நடுவரே.
இப்ப சொல்வார்கள் குழந்தை அடம்பிடிக்கிறது, வேண்டாம்னு சொன்னா மனசு சங்கடப்படும்,சாப்பிடமாட்டேன்னு சொல்றான், பள்ளிக்கு செல்ல மறுக்கிறான். இப்படி பல விஷயம் இருக்கு நடுவரே. சரி இரண்டு குழந்தையும் இப்படியே செய்யுது என்ன பண்ணலாம்? வளர்ந்த குடும்பம் செல்லம் கொடுத்து பாசம் காட்டி வளர்த்த பிள்ளை மனம் சோர்ந்துவிடக்கூடாதுன்னு சேர்த்துவிடுறாங்க. அப்போ வளரும் குடும்பத்து பிள்ளை கட்டாயமேன்னு தனது விருப்பத்தை புதைக்கனுமா? எந்த ஊர் நியாயம் நடுவரே?

இந்த நிலையை மாற்றவே அந்த பெற்றோர் ஓடுகின்றனர். அதனையும் குறைகூற சிலர் வந்துவிட்டனர்!!! அத்தியாவசியத்தையும், அநாவசியத்தையும் அளவீடு செய்ய மற்றவர்கள் யார் நடுவரே?!

தன் நேரத்தை தனக்காக செலவிடும் பெற்றோர் மிகவும் குறைவு நடுவரே. பல சூழ்நிலைகளின் காரணமாக பெற்றோர் சேர்க்க ஓடும் பொருளும் தன் பிள்ளைகளின் நலன் கருதியே. அதிலும் முடிந்தவரை அவர்களை ஒதுக்காமல்தான் ஓடுகின்றனர்.

எதிரணிபோல பாசம் வைக்கிறேன்,அதிக நேரம் என் பிள்ளையுடன் செலவழிக்கிறேன்னு சொல்லி அவர்களை செல்லமாக்கி கெடுத்து வைக்கும் பெற்றோரை எல்லாம் என்னதான் செய்யறது நடுவரே??

இவர்களைப்போல பிள்ளைகளை செல்லமாக, சுய முடிகள் எடுக்க தெரியாமல் பாசத்திற்கு அதிகம் அடி பணிபவர்களாக வளர்த்தி வைத்து அடுத்த தலைமுறை பெற்றோர்களாக( கணவன்,மனைவியாக) வாழத்துவங்கும் போதே தனது மாப்பிள்ளை அல்லது மருமகளிடம் இப்படி சொல்கின்றனர். என் பெண்ணை ஒரு சொல்கூட சொல்லாமல் வளர்த்துவிட்டேன் மாப்பிள்ளை நீங்களும் நல்லா பார்த்துக்கோங்கன்னு சொல்லி அனுப்பி வைக்கின்றனர். கணவன் வீடு சென்றவுடனே ஃபோன் மேல ஃபோன் போட்டு இங்க இது சரியில்லை அங்க அது சரியில்லைன்னு புலம்பித்தள்ளுதுக. நினைத்தது எல்லாம் பாசமான பெற்றோரிடம் கிடைத்து விடுவதால் கணவனிடம்கூட அனுசரித்து செல்ல இயலாத பிள்ளைகளின் சமூகத்தைதான் இவ்வகை பெற்றோர் உருவாக்குகின்றனர். புது சூழலில் மனிதர்களுடன் இவர்கள் ஒன்றி, கலந்து வாழ பழகுவதே இல்லை நடுவரே...!!! இவர்களுக்கான உலகத்தை தான் இவ்வகை பெற்றோர் உருவாக்கி கொடுக்க நினைக்கின்றனர். இது ரொம்பவும் தவறான சிந்தனை.
ஆண்பிள்ளையெனில் வரும் மருமகளிடம் இதபாருமா என் பிள்ளைக்கு சமைக்க தெரியாது, அவன் ரொம்ப செல்லமா வளர்ந்தவன் நீ தான் அனுசரித்து பார்த்து நடந்துக்கனும். இப்படியெல்லாம் புத்திமதிகள் வரும். இதிலிருந்து என்ன தெரியுது நடுவரே....!! என்ன தெரியுது.... அதேதான்!! எப்பவும் அனுசரிப்பதுவும், விட்டுக்கொடுப்பதும் ஒரு பக்கமாவே இருக்கனும். இல்லைனா குடும்பத்தில் பிரிவுதான் மிஞ்சும். இப்படி அனுசரித்து செல்லாத பிள்ளைகளை பாசத்தால் கட்டிப்போட்டு வளர்த்தும் பிள்ளைகளிடம் தெளிவையும் நியாயத்தையும் எதிர்பார்க்கவே முடியாது நடுவரே. சொல்றத சொல்லிட்டேன் இனி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான்.

நாங்கள் பிள்ளைகளை கைக்குள்ளையே வைத்து வளர்க்க வில்லை நடுவரே

பிள்ளைகள் தங்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு முக்கியம் அதுக்காக பெற்றவர்கள் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். ஏழ்மை நிலையை யாரும் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. காலமும் சூழ்நிலையும் அந்த நிலைக்கு தள்ளுகிறது. ஓடி ஓடி உழைத்து சேர்த்து வைப்பதற்குள் அந்த குழந்தை வளர்ந்து தனக்கென வேண்டியதை தானே உருவாக்கிக்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி விடும். அதுவே கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் குழந்தை சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வரும் என்பதை எதிரணியினர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கனவுகளையும் விருப்பங்களையும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழலாமே.. வாழ்வாதாரத்திற்கு அடிப்படையே கல்வி தான். அதை கற்றுக்கொண்டால் உலகத்தின் எந்த மூலையிலும் சென்று வாழலாம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று வள்ளுவன் கூறியதை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். எங்கள் வகை பெற்றோர்கள் குழந்தைக்கு வேண்டியதை செய்து தர தவறியதில்லை. குழந்தையும் சூழ்நிலைக்கேற்ப தன்னை செதுக்கி கொள்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சில பெற்றோர்களுக்கு தெரியாது; பாசம் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்பது. கூழோ கஞ்சியோ பெற்ற தாயின் கையால் குடிப்பதில் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் சுகம், ஏசி ஹோட்டல் அறையில் என்றோ ஒரு நாள் வாரவிடுமுறையில் குடும்பத்தோடு அமிர்தத்தை குடித்தாலும் கிடைக்குமா நடுவரே ??

- பிரேமா

//எங்கள் பள்ளியில் பரதநாட்டியம் கற்று தருவதற்கு நோட்டீஸ் கொடுத்தார்.. நீயே எவ்வளவு கஷ்டம் படுகிறாய் எனக்கு மாதம் ஃபீஸ் கட்டுவதற்கு.. அதனால் நான் மட்டும் நோட்டீஸ் வாங்க வில்லை//... பிள்ளை மனம் கல்லு என்பார்களே ! இல்லை என நிறூபித்திறுக்கின்றது அந்த குழந்தை.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

அனைவருக்கும் அன்பு வணக்கம்கள்,
வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பித்த தோழிகள் ரேணு, இந்து ,பிரேமா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நடை பெற்ற வாதத்தில் இறு தரப்பினரும் தனது வாதத்தை அழகான முறையில் எடுத்து வைத்தனர் . ... உண்மையை சொல்ல போனால் தீர்ப்பு கூற சற்று சிரமமகவே இறுந்தது... நல்ல அலசி ஆராய்ந்து ஒரு தீர்ப்புக்கு வந்துள்ளேன் சரி வாங்க தீர்பை பார்ப்போம்,...... பிள்ளைப்பேறு தான் பெரும் பேறு என்பதும், மக்கட்ச் செல்வமே மகத்தான செல்வம் என்பதும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மிகப்பெரிய உண்மை.அதனினும் பெரிது யாதெனில், பெற்ற மக்களை பேணி வளர்ப்பதாகும்.
பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுப்பது ஒவ்வொரு
பெற்றோரின் மீதும் கடமை.
இங்கு,
நேரம் என்பது தரமானதாக அளவில் மிக குறைவானதாக செலவழித்தால் கூட போதும். ஆனால்,
பல திறமைகளை வளர்க்கவும் உயர்கல்வி படிக்க வைக்கவும் அதிக நிதி ஒதுக்க வேண்டியது இக்காலத்தில் அவசியம் என்றாலும் , ...... அதை விட பெரிய கடமை ஒன்று உள்ளது. அதாவது நல்ல ஒழுக்கத்தையும், நல்ல பண்பை போதிப்பது ஒவ்வொரு பெற்றொரின் மீதும் கடமையாகும்.

பொருளாதாரத்தால் தன் குழந்தைகளைச் செல்வச் செழுமையில் வளர்க்க வேண்டும் என எண்ணுவது தவறென சொல்வதற்கில்லை. ஆனால், உங்கள் செல்வமே உங்களது குழந்தைச் செல்வத்தை கொன்று விடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை,...... தன் தாய் தந்தை பணக்கரர்கள் என்னும் எண்ணம் ஒரு குழந்தைக்கு வந்துவிட்டால், அந்த எண்ணம் ஒன்றே அக்குழந்தையின் அழிவிற்குக் காரணம் ஆகி விடக்கூடும்.

மாறிவிட்ட சூழ்நிலையில் வாழும் இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிக நேரம் ஒதுக்காவிட்டால் தவறான வழியில் செல்லக் கூடும் . இதனால் அறிவிலும் பண்பிலும் சிரந்தவர்களாக நம் பிள்ளைகளை உருவாக்க பெற்றோர்கள் நிதியை விட நேரத்தையே அதிகம் செலவிட வேண்டும் காலம் பொன் போன்றது என கூறுவார்கள் .... ஆனால் அது உண்மை இல்லை பொன் போனால் திருப்ப வாங்கிவிடலாம் , ஆனால் நேரத்தை திறுப்ப பெற முடியாது உயிரை போல்.... ஆகவே அந்த உயிர் போன்ற நேரத்தை குழத்தைகளுக்காக செலவிடுவதே சிறந்தது நல்லது . ஆகவே இப் பட்டி மன்ற தீர்ப்பு
“பெற்றொர்கள் தன் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவதே நல்லது என தீர்ப்பு
வழங்கி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி .

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

பட்டியின் சிறந்த பதிவுக்கான விருது- ரேணு
பட்டியின் சிறத்த பேச்சாளர் விருது- இந்து ,
பட்டியின் சிறந்த தலைவர் விருது - பிரேமா,
பட்டியில் கலந்து சிறப்பித்த மூவருக்கும் நன்றிகள் விருதுகளுடன் நேரம் உயிரை பேன்றது என்பதை நினைவூட்டுவதற்காக அழகிய விலை மதிப்புல்ல கைகடிகாரம் ஒன்றை பரிசாக அனுப்பி வைக்கபடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகிறேன்.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

தீர்ப்புக்கு நன்றி நடுவரே!!

தோழி இந்து மற்றும் சகோதரி ரேணு அவர்கள் சிறப்பாக வாதாடினார்கள். இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

எனக்கு ஸ்பெஷல் "தலைவர் விருது", இது எப்படி எனக்கு கிடைச்சதுன்னு தெரியல.. நன்றி நடுவரே !!

வாட்ச் எப்படி இருக்குனு ஒரே ஆர்வம் !! சீக்கிரம் அனுப்புங்க..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்