பட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்கள், நான் இன்று விவாதத்திற்காக தேர்வு செய்த தலைப்பு ,”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்க அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ அதாவது நம் அன்பு குழந்தைக்காக நம் நமது நேரத்தை செலவிட வேண்டுமா அல்லது காசு, பணம், நகை என சேர்பதா எது நல்லது? இத்தலைப்பை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் அழைக்கிறேன் . அட்மின் அண்ணா , அண்ணி , அன்பு ரேணு, வாணி அக்கா , இமாம்மா, சீதாம்மா , தோழி பிரேமா ,தோழி இந்து மற்றும் அறுசுவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்பேடு பட்டிக்கு அழைக்கிறேன் . முதல் தடவை பட்டி ஆரப்பித்திருக்கிறேன் என்பதால் தவறேதும் இருந்தால் மன்னித்து உங்கள் பங்களிபை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன். ( யாருடைய மனமும் புண்படாமலும், நகைச் சுவையும் கலத்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்) பட்டி இன்று வியாழ கிழமை ஆரபித்து அடுத்த வியாழன் இத்தலைப்பு தீர்ப்பு வரும் ,
மன்ற விதிமுறைகள்
1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் சார்ந்து பேசக்கூடாது.
3. அரட்டை கூடாது.
4. ஜாதி, மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.
அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்
வாய்புக்கு நன்றி ரேணு.

// எனக்கு ஸ்பெஷல் "தலைவர் விருது", இது எப்படி எனக்கு கிடைச்சதுன்னு தெரியல // பட்டியில் சரவேடியாக கருத்துக்களை பதிவு செய்யும் உங்களுக்கு பொருத்தமானது.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

பட்டியை எடுத்து நடத்தியதற்கும் சிறப்பாக முடித்ததற்கும் நன்றி..

உங்களின் தீர்ப்பில் உள்ள வரிகள் அனைத்தும் அருமை.. நீங்கள் சிறந்த பேச்சு திறமை வாய்ந்தவர்.. விரைவில் சிறந்த எழுத்து திறமை விருது வாங்க என் வாழ்த்துக்கள்..

சிறந்த பேச்சாளர் விருதிற்கும், கைக்கடிகாரத்திற்கும் நன்றி நடுவரே..

எதிரணி தோழி நன்றாக வாதாடினார்.. எனக்கும் பிரேமாவிற்கும் வாதிட ஊக்குவித்தார்.. அவரது பேச்சு எங்களை சற்று யோசிக்கவும் வைத்தது.. அனைவருக்கும் நன்றிகள்..

மிக்க நன்றி நடுவரே !!

- பிரேமா

ஆமாம் , ரேணுவின் அழகான , சிந்திக்க வைத்த பதிவுக்குதான் அவருக்கு (பட்டியின் சிறந்த பதிவுக்கான விருது )

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

தீர்ப்பு எதிரணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை:-)

நன்றிகள் பல நடுவரே. என் அணிக்கு எதிரணியில் வாதாடிய தோழிகளின் கருத்தும் மிக சிறப்பாகவே இருந்தன. மீண்டும் மீண்டும் படித்து யோசித்து எனதணிக்கான கருத்துகளை தேடி பதிவிட வேண்டியிருந்தது.
உண்மையில் சொல்லப்போனால் பெற்றோர் இல்லாத பிள்ளைகளும் இந்த சமூகத்தில் நல்முறையில் வளர்கின்றனரே...! அவற்றை பற்றியும் பேச நினைத்தேன். பரவாயில்லை. அதற்குள் நீங்க தீர்ப்பே கொடுத்துட்டீங்க.
வாதிட்ட மற்ற தோழிகளுக்கும் மற்றும் தன் கருத்தினை சொல்லிச்சென்ற சத்யாவிற்கும் வாழ்த்துக்கள் பல.
கேட்டவுடன் நடுவராக வந்ததற்கு மிக்க நன்றி ஃபாத்திமா. எழுத்துகளை மட்டும் பிழையில்லாமல் பதிவிட பழகிவிடுங்கள். அடுத்த விவாதத்தில் கலக்கிடலாம்.

*

- பிரேமா

பெற்றோர்கள் சம்பாதிப்பது எதற்காக? குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காகத்தான் என்பதனை முதலில் அவர்கள் உணரவேண்டும்.. ”குன்றேறி யானைப்போர் கண்டற்றால் “ என்கிற திருக்குறளின் வழி வள்ளுவர் உணர்த்துவது தன் கையில் பணம் வைத்துக் கொண்டு தொடங்கும் செயல் பாதுகாப்பானது.. எனவே பெற்றோர்களின் சேமிப்பு பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கு.. அவர்களுடன் நேரத்தை செலவழிப்பதனைக் காட்டிலும் அவர்களுக்காக நிதியைச் சேமிப்பது நலம்

மேலும் சில பதிவுகள்