இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

enaku marriage agi 3 years achu. arambuthula nan preganta iruntha pothu enaku moolaiiyil blood urainchu irunthuchu romba kasta patu vanthen dnc panna vendiya solnilai vanthuruchu. ipo pregancy agalamun ninaikeren but intha problemum thirumbuvum varumanu bayama iruku. yaravathu therinja ans pannunga pls.
antha problem name anti thormbin nu sonngaga.

நீங்கள் உங்கள் மருத்துவரிடம் விசாரிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

hospitel dr kita ketom eni entha problem varuthanu sonnanga. irunthalum oru thayakkam oru payam iruku.
Ena romba kasta patuten vali nala 3 years ku munnidi. antha mathiri problem yarukumae vanthu kelvi patathu illa. Athan payamaga iruku.

Reply this my comment.
hospitel dr kita ketom eni entha problem varuthanu sonnanga. irunthalum oru thayakkam oru payam iruku.
Ena romba kasta patuten vali nala 3 years ku munnidi. antha mathiri problem yarukumae vanthu kelvi patathu illa. Athan payamaga iruku.

கண்ணா, உங்க கவலை புரியுது. தீர்வு சொல்ல நான் டாக்டர் இல்லை; நான் கார்த்தியும் இல்லை.

நான் உங்கள் இடத்தில் இருந்தால்.... அந்த வலி பெரிது, திரும்பவும் வரும் என்கிற பயம் இருந்தால் - இமாவிடம் ஆலோசனை கேட்க மாட்டேன். மருத்துவர் சொல்வதையும் கேட்க மாட்டேன். கர்ப்பம் வேண்டாம் என்று இருந்துவிடுவேன். என் மனம், 'தாங்குவேன், என்னால் முடியும்,' என்று சொன்னால் மட்டும் கர்ப்பத்திற்கு முயற்சி செய்வேனே அல்லாமல், கணவர் விரும்புகிறார், அத்தையோ அம்மாவோ விரும்புகிறார் என்று குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். உடல் எனது; மனம் எனது; வலியும் எனதே. வேறு யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்; முடியாது. இத்தனை பயம் எனக்கு இருந்தால், 'இருக்கிற குழந்தைக்கு ஒழுங்கான அம்மாவாக, 'இருந்தால்' போதும்.' என்று கூட என் மனம் சொல்லக் கூடும்.
ஆனால்... நீங்கள் 'கார்த்தி,' நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கண்ணா.
~~~~
அடுத்த தடவை சரியான தலைப்பில் உள்ள இழையாகப் பார்த்துக் கேள்வியை வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லி விட்டீர்கள்.. கேட்பதற்கு நன்றாகவும் இருந்தது நியாயமாகவும் இருந்தது..
ஆனால் எங்கள் நாட்டிற்கு இதெல்லாம் ஏற்று கொள்ள மாட்டார்கள்..
நிச்சயம் திருமணம் முடிந்து பெண் குழந்தை பெற்றாக வேண்டும் என்று மக்களுக்குள் வரையறை உள்ளது..
எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பெண்களையே குற்றம் சொல்வார்கள்..
உங்களை போல் புரட்சி பெண்மணிகள் அதிகம் வரவேண்டும்..
இனிவரும் காலங்களில் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும்..

இதில் புரட்சி எதுவும் இல்லை இந்து. இது என்ன நியாயம் என்று புரியவில்லை.

இவர் நிலை பற்றி எனக்குத் தெரியாது. அதனால் தான் அந்தக் கடைசி வரி. அவருக்குத்தான் அவர் நிலை தெரியும். 3 நாட்கள் முன்பே கேட்ட கேள்விக்குப் பார்த்தும் பதில் சொல்லாதிருந்தேன். மீண்டும் என் பெயர் போட்டு கேள்வியை வைத்திருக்கிறார். என் மனதில் உள்ளதைத்தான் நான் சொல்ல முடியும். அதனால் அவருக்கு அறிவுரையாகச் சொல்லாமல், நான் அவராக இருந்தால் என்ன செய்வேன் என்பதைச் சொன்னேன். காரணங்களை முழுவதாகச் சொல்ல முடியவில்லை. சற்று மறைத்தே எழுதியிருகிறேன்.

‍- இமா க்றிஸ்

Nan arusuvai ku pudushu. Epd reply pannunum nu enaku theriyala . Antha karthi epd vanthuchu nu enaku theriyala. en name gayathiri. Enaku nambikai iruku kulanthai pethukka mudiyumu nu. But oru payam than. Antha payatha pokka than arusuvai ku vanthen. Nirayna peru comments pathu than thunichalae vanthu iruku. Romba Thanks Ma.

எல்லாச் சமயமும் ப்ரொஃபைலில் இருக்கும் பெயரைப் பார்க்கக் கிடைப்பது இல்லை. இங்கே தெரிந்த பெயரைத் தட்டினேன்.

பயத்தைப் போக்கவா! :-) முதலிலேயே அதைச் சொல்லிக் கேட்டிருக்கலாம் அல்லவா! கேள்விக்கு ஏற்றபடி பதில் சொல்லியிருப்பேன். இத்தனை நேரம் எடுத்துப் பதில் தட்டியிருக்க வேண்டாம் நான்.

‍- இமா க்றிஸ்

sorry

மேலும் சில பதிவுகள்