அவசரம் தோழிகளே

வணக்கம் எனக்கு குழந்தை பிறந்து 10 நாட்கள், உதவிக்கு யாரும் இல்லை நானும் கணவரும் மட்டும் தான் என் குழந்தை வேகமாக மூச்சு விடுகின்றான். அவ்வாறு மூச்சுவிடும் போது சத்தம் வருகிறது ,சளி இழுப்பது போல் உள்ளது . எனக்கு அது ஆஸ்துமா நோயா என பயமாக உள்ளது .ஆஸ்துமா எனில் எவ்வாறு கண்டுபிடிப்பது? உதவுங்கள் தோழிகளே !!!!!

குழந்தைகளுக்கு இவ்வாறு இருப்பது சாதாரணம் தான். அது விரைவில் சரியாகிவிடும். உங்களுக்கு யோசனையாக இருந்தால் மருத்துவரிடம் காண்பியுங்கள். நீங்களாகக் கண்டுபிடிப்பதற்கு வழி இல்லை.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழி அவர்களும் இதை தான் கூறினார்கள் ஆனால் எனக்கு தான் பயமாக இருந்தது ஏனெனில் எனக்கு ஆஸ்மா உள்ளது அதுதான் குழந்தைக்கு வருமோ என பயமாக உள்ளது.

உங்களுக்கு இருக்கிறது என்றால் குழந்தைக்கு வர முடியும் தான், ஆனால் இப்போது உள்ளது பெரும்பாலும் ஆஸ்மாவாக இராது, குழந்தையின் மூச்சுக் குழாய் வளர சரியாகி விடும். மூச்சை வேகமாக விடுகிறார் என்கிறீர்கள். (மூச்சுக் காற்றை வெளியேற்றச் சிரமப்பட்டால் ஆஸ்மாவாக இருக்கலாம்.) மருத்துவர் ஸ்டெத் வைத்துப் பரிசோதித்துப் பார்த்தபின் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம்.

இப்போதெல்லாம் ஆஸ்மாவும் அலர்ஜியும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அனுபவிக்காதவர்கள் இல்லை என்கிற அளவு சர்வ சாதாரணமாகி விட்டது. பரம்பரையில் இல்லாதவர்களுக்கும் வருகிறது. எம் காற்று சுத்தமாக இல்லை. நீங்கள் நீங்கள் சிரமப்படுவதாகச் சொல்வதால் கேட்கத் தோன்றிற்று. நீங்கள் பஃப், பிரிவென்டர் எதுவும் பயன்படுத்துவது இல்லையா? உங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும் அதைத் தூண்டிவிடும் காரணி என்று சிலது இருக்கும். அவை எவை என்பதைக் கண்டுபிடித்தால் தவிர்ப்பது சற்று சுலபம். எனக்கு ஆறு வயதிலிருந்து ஆஸ்மா இருக்கிறது. இலங்கையில் இருந்தவரை சிரமப்பட்டேன். இங்கு வந்து ப்ரிவென்டர் ஆரம்பித்த பின் 95% இற்கு மேல் நன்றாக இருக்கிறேன். சில உணவுகள் சில சமயங்களில் பிரச்சினை கொடுக்கும். அதுவும் வென்டலீன் & ஆன்டிஹிஸ்டமைன் எடுக்க குறைந்துவிடுகிறது. வாசனைகள் தான் என் பெரிய பிரச்சினை. ஒரு நிமிடம் அதிகம். அதற்குள் நிறைய பாதிக்கப்பட்டுவிடுகிறேன். முன்பே தெரிந்தால் தவிர்க்க முடியாத இடங்களுக்குப் போகும் சமயம் மூக்கை மூடி துப்பட்டாவைக் கட்டிக் கொள்வேன். சில நிமிடங்களுக்கு மேல் அந்த இடத்தில் இருப்பதில்லை. பர்ஃயூம் / ட்யோடரண்ட் அணிவோரைத் தான் தவிர்க்க முடியவில்லை. தினமும் வீஸ் பண்ணிய காலம்... கடந்து பல வருடங்கள் ஆகுகிறது. ப்ரிவென்டரையும் வென்டலீன் பஃப்பையும் கண்டுபிடித்தவர்களை அடிக்கடி மனதினுள் வாழ்த்திக் கொள்கிறேன். ;-) உங்கள் பிரச்சினை வாசனையோ காற்று மாசோ இல்லை என்றால் நிச்சயம் ஒழுங்காகச் சிகிச்சை எடுக்க ஆஸ்மாவைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆஸ்மா உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க விட்டுவிடாதீர்கள். இன்று இலங்கைக்குப் போனாலும் என்னைக் காண்பவர்கள் பிரமிப்பாய்க் கேட்பார்கள், 'ஆஸ்மா இப்போது வருவதில்லையா?' என்று. அத்தனை நன்றாக இருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி தோழி . எனக்கு அதிக வெப்பம் மற்றும் காற்று மாசு தான் பிரச்சனை . நான் இலங்கையில் இருக்கும் போது தும்ம தொடங்கினால் நாள் முழுவதும் தும்முவேன். தற்போது நான் inhaler பயன்படுத்துகிறேன். தற்போது ஆஸ்மா கட்டுப்பாட்டில் தான் உள்ளது தோழி

மேலும் சில பதிவுகள்