
தேதி: November 4, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்
மொத்த நேரம்: 25 நிமிடங்கள்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
பெருங்காயத் தூள் - இரண்டு சிட்டிகை
பொடித்த மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை
கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை தனித்தனியே சலித்து எடுத்து, அதனுடன் உப்பு, மிளகுத் தூள், சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். காரம் விரும்புகின்றவர்கள் சிறிது மிளகாய்த் தூள் அல்லது கூடுதல் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் அப்படியே வைத்து இருக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் கொதிக்க விட்டு, அதன் மேல் ஒரு சாரணியை தூக்கிப் பிடித்து, அதில் மாவை தேய்க்கவும். எண்ணெய் கையில் தெறிக்காத தூரத்தில் சாரணியைப் பிடிக்கவும். மாவு தேய்க்கும் போது கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக தேய்க்க வேண்டும். அப்போதுதான் நீளமான சேவு கிடைக்கும்.

சேவு பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

சுவையான, மொறு மொறு கார சேவு தயார். கறிவேப்பிலையை இலேசாக வறுத்து சேவுடன் கலந்து கொள்ளவும்.

Comments
வாவ்,
வாவ் அசத்தல்
உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்
Fathima
ரொம்ப நன்றி
காரசேவு
அழகாகச் செய்து காட்டியிருக்கிறீர்கள் செண்பகா. ஆசையாக இருக்கிறது. ஒரு குட்டி பார்சல் குரியர் பண்ணிருங்க. :-)
- இமா க்றிஸ்
சுவையான காஷ்மீரி புலாவ்
சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?
http://www.tamilxp.com/2019/02/kashmiri-pulao-recipe-in-tamil.html
காஷ்மீரி புலாவ்
குறிப்பு கேட்கிறீங்க என்று நினைச்சேன், சொல்றீங்க. :-) முன்பே உங்களுக்கு எங்கோ சொல்லியிருந்தேன் - இங்கு வேறு தளங்களுக்கான சுட்டிகள் பகிர்வதற்கு அனுமதி இல்லை. உங்கள் உறுப்புரிமை நீக்கப்படலாம். டிலீட் பண்ணிருங்க.
- இமா க்றிஸ்
(No subject)