சூட்டு கொப்பளம்

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகின்றது.அவளுக்கு உட்காரும் இடத்தில் சூட்டு கொப்பளம் வந்துள்ளது. சீல் இருந்து டாக்டர் எடுத்து விட்டார் இருந்தாலும் அந்த இடம் கல் மாதிரி கெட்டியாக உள்ளது என்ன செய்வது எதற்காக இப்படி உள்ளது என்ன செய்ய வேண்டும் மிகவும் வேதனையாக உள்ளது எனக்கு பாப்பாக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் பாப்பா நார்மலாக இருக்கிராள். .அந்த இடத்தை தொட்டால் வலி இருகிரது அந்த கல் மாதிரி இருக்கும் இடத்தை எப்படி சரி செய்ய வேண்டும்.உடனே எனக்கு தீர்வை சொல்லுங்கள் தோழிகளே

நான் போன வருடம் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்தேன். அவர் injection செலுத்தி அந்த இடத்தில் ஒரு ஆணி வேர் போன்று இருக்கும் அதனால் அது குணம் ஆனா பின்பு மைனர் சர்ஜரி செய்ய வேண்டும் என்று சொன்னார். நானும் அதன் முறை படி சிகிச்சை எடுத்து அந்த இடத்தில் சர்ஜரி செய்து கொண்டேன். ஆனால் இப்போது மறுபடியும் வந்துள்ளது. இதற்க்கு வேர எதாவது நிலையான தீர்வு இருந்த கொஞ்சம் சொல்லுங்க

இத்தனை காலம் தொடரும் பிரச்சினை என்பதால் நீங்கள் எளிதாக எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் அபிப்பிராயம் கேட்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

K mam thank you

வணக்கம்
என்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது
அவருக்கு உட்காரும் இடத்தில் ஆசனவாய்க்கு வெளி பகுதியில்
கல் போல வீங்கி வலி உள்ளது கடந்த இரண்டு நாட்களாக உள்ளது
கல் போல உள்ள இடத்தில் சூடாக உள்ளது தயவு கூர்ந்து இதற்க்கு மருந்து கூறவும்
நன்றி

சூடாக இருந்தால் இன்ஃபெக்‌ஷன் இருக்கவேண்டும். கைமருந்து என்று ஏதாவது செய்து கட்டு உடைகிற மாதிரி ஆனாலும் கூட, மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ள இடம் என்பதால் மருத்துவரிடம் காட்டுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.

‍- இமா க்றிஸ்

தயவு செய்து தற்போது கட்டு உடைவதற்கு ஏதேனும் வழி கூறவும்
அவர் ஓரளவுக்கு வலி இல்லாமல் இருந்தால் தான் மருத்துவரிடம் அழைத்து செல்ல முடியும்
உட்க்கார சிரம படுகிறார் அவரால் நீண்ட தூரம் நடக்க இயலாது
மிகவும் பலகீனமாக வேறு உள்ளார்

மூன்று நாட்கள் கழித்துப் பதில் சொல்கிறேன். உங்கள் கேள்வியை அன்றே பார்த்தேன். பதில் சொல்ல, சற்று யோசனையாக, குழப்பமாக இருந்ததால் விட்டுவிட்டேன். சில சமயம் என்னால் சரியான வார்த்தைகளைத் தெரிந்து எழுத முடிவது இல்லை. :-)

ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் வேதனை குறைந்தால்தான் மருத்துவம் செய்ய முடியும் என்பது... என் மனதுக்குச் சரியாகப் படவில்லை. நடக்க இயலாத பலகீனமானவருக்கு உடனே மருத்துவம் செய்ய வேண்டாமா? நடக்க இயலாவிட்டால் வேறு ஏதோ ஒரு விதத்தில் அழைத்துப் போகலாம் அல்லவா? என் தந்தை இப்படி இருந்தால், அவருக்கு ஆறுதல் சொல்லி, சற்று வேதனையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி உடனே அழைத்துப் போவேன். 61 வயது, என்னை விட இரண்டரை வருடங்கள் பெரியவர், என் கணவரை விட 4 வருடங்கள் இளையவர் என்கிற ஒப்பீடு மனதில் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பலகீனமாக இருக்கிறார் என்கிறீர்கள். என்ன காரணம் என்பது தெரியாவிட்டாலும், படித்த போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. இன்னும் 35, 40 வருடங்களுக்கான வாழ்க்கை வாழ இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் சரியானதைச் செய்ய வேண்டும். எப்போதும் தாமதமாகச் செய்யும் சிகிச்சைகள் தாமதமாகத் தான் பலனளிக்கும். அப்பா சுயமாக இயங்கக்கூடியவராக இருந்திருந்தால் அவருக்காக நீங்கள் கேள்வியை வைத்திருக்க மாட்டீர்கள். அவர் உங்கள் பராமரிப்பில் இருக்கிறார் எனும் பட்சத்தில், என்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் ஆவன செய்வது, உங்கள் சிரமத்தைக் குறைக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்