Food doubt at 8 th month pregnancy

Hai friends,

Nan ipo 8 th month pregnancy(34 weeks starting), netru baby growth scan seithom. athula baby weight(2.62) athigama irukunu sonanga. enanku due date december end than kuduthurukanga. ithuvaraikum edutha test and scans elame normal than. but intha scan la than baby weight athigama irukunu sonanga. next week sugar test ethukum check panidalam nu solirukanga. white sugar avoid and white rice kammi panna solli irukanga.

Ipo na entha mathiriyana foods sapidalam? Fruits sapidalama? sathu maavu kanji kudikalama? and White rice ku padhila varagu, samai, thinai or kuthiraivali rice seithu sapidalama?

Pls reply friends.

வணக்கம் .நான் புதிய உறுப்பினர் என் வயது 23 .நான் தற்போது 8மாதம் கற்பம் .என் கணவர் மருத்துவர் .எங்கள் திருமணம் நடந்த பின் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக என் தாய் வீட்டினர் என்னுடன் பேசுவதில்லை . வீட்டில் என் கணவர் நான் மற்றும் மாமியார் உள்ளனர் .மாமியார் என்னுடன் அவ்வளவு பேசமாட்டார்கள் .நான் இதனால் மனவருத்தம் அடைந்தேன் .நான் திருமணம் ஆகி இரண்டாவது மாதம் கற்பம் அடைந்தேன் .கர்பத்தின் நான்காம் மாதம் முதல் தினமும் என் கணவர் என்னுடன் உறவு கொள்கிறார் .தற்போது 8 மாதம் முடியும் நிலையில் .எனக்கு பயம் மற்றும் உடல் சோர்வு உள்ளது .என் கணவர் மருத்துவர் என்பதால் உடல் உறவு அவசியம் என்றும் அது பிரசவத்திற்கு நல்ல து என்றும் .தன்னால் அது இல்லாமல் இருக்க முடியாது என்றும் கூறுகிறார். நன்கு படித்து இருந்தும் என் கணவர் ஏன் இவ்வாறு நடக்கிறார் என்று குழப்பமாக உள்ளது .

நான் என் பிரசவத்தை தனியாக எதிர் கொள்ள வேண்டும் ...நான் பெரிய குடும்ப த்தில் பிறந்து வளர்தேன் எப்போதும் கலகலப்பாக இருக்கும் .தற்போது மாமியார் மற்றும் கணவர் மட்டுமே ஆதரவு .மாமியாருக்கு மன வருத்தம் உள்ளது .இது வரை என் உடல் நிலை பற்றி பட்டும் பாடமல் கேட்பார்.பிரசவம் நேரத்தில் கூட மனம் மாறாதா என ஏங்குகிறேன் .தற்போது வரை நான் நல்ல வீட்டு வேலைகளை செய்கிறேன் .நடை பயிற்சி செய்கிறன் .நார்மல் டெலிவரி வலி அதிகமாக வருமா .ஆப்ரேஷன் ஆனால் எத்தனை நாட்களிலர் உடல் நிலை சீராககும் .குழப்பம் உள்ளது .எனக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லை .பதில் கூறவும்

//திருமணம் ஆகி இரண்டாவது மாதம் கற்பம்// இன்னும் சற்றுத் தாமதமாக கர்ப்பமாகி இருந்தால், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் கால அவகாசம் கிடைத்திருக்கும்.

//பயம் மற்றும் உடல் சோர்வு// கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உற்சாக இருக்கப் பாருங்கள். ஓய்வு அளவோடு இருக்கட்டும். தேவை இல்லாத போது எடுக்கும் 'ஓய்வு' - உண்மையில் 'ஓய்வு' அல்ல. பசி இல்லாத போது சாப்பிடுவது உடல் எடையைக் கூட்டுவது போல, இதற்கும் பின்விளைவு உண்டு. உற்சாகமாக (ஆக்டிவ்) இருப்பவர்களுக்குச் சோர்வு வருவது குறைவு. 'பயம்' எதைப் பற்றி என்று சொன்னால் என் அபிப்பிராயத்தைச் சொல்லுவேன். உடலுறவு கொள்வதால் குழந்தைக்குப் பாதிப்பு எதுவும் வரும் என்கிற பயமா? அப்படி எதுவும் ஆகாது.

//இல்லாமல் இருக்க முடியாது// என்கிறார் என்பது உண்மை. //பிரசவத்திற்கு நல்லது// என்பது, நியாயப்படுத்த உங்கள் கணவர் சொல்லும் காரணம். //நன்கு படித்து இருந்தும்// படிப்பிற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் மனிதர். ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். திருமணமான இரண்டு மாதங்களில் அவர் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காது போனது, சிரமமாக இருந்திருக்க வேண்டும். இனி பிரசவம், குழந்தைப் பராமரிப்பு என்று தன் தேவை பின் போடப் படப் போகிறது என்கிற நினைவு மன உளைச்சலைக் கொடுக்கலாம்.

தாய்மை பெண்களுக்கு மட்டும் சிரமங்களைக் கொடுப்பதில்லை, தொடர்பான ஆணுக்கும் சிரமங்கள் இருக்கிறது.

நான் முன்பு இங்குள்ள இழைகளில் பதில் சொல்லும் போது பலமுறை இதைப் பதிவு செய்திருக்கிறேன். இது ப்ரீதிக்காக அல்ல, படிக்கும் வேறு யாராவது சிந்திப்பார்கள் என்று பதிவு செய்கிறேன். திருமணமானதும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள முடிந்த காலம் எடுத்துக் கொள்ளுங்கள். உறவுகளும் அயலவர்களும் கேட்பார்கள் என்பது ஒரு பெரிய பிரச்சினை தான், ஆனால் உடனே கர்ப்பமானால் இது போன்று புரிதல் இல்லாமையால் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துதான் ஆக வேண்டும். உறவினரும் மற்றவர்களும் புதிதாகத் திருமணமானர்களைக் கேள்வி கேட்காமல் நிம்மதியாக விடுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

பிரசவத்தை தனியாக எதிர் கொள்வது - நீங்கள் பெரிதாக நினைத்தால் தவிர ஒரு பிரச்சினை அல்ல. மாமியாரோடு சமாதானம் ஆகப் பாருங்கள். அவரே விரும்பி தேவைகளில் கைகொடுப்பார். தன் பேரக் குழந்தை என்கிற எண்ணம் இருக்கும் இல்லையா! //பிரசவம் நேரத்தில் கூட மனம் மாறாதா என ஏங்குகிறேன்// மனதை மாற்ற ஏதாவது முயற்சி செய்தீர்களா? என்ன செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

வலி - அதிகமாக வருமா அல்லது குறைவாக வருமா என்பதைச் சொல்ல முடியாது. இது ஒரே பெண்ணுக்குக் கூட ஒரு முறை போல் அடுத்த பிரசவத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதைப் பற்றி இப்போதிருந்தே யோசிக்க வேண்டாம். வரும்போது பார்த்துக் கொள்ளலாம். //ஆப்ரேஷன் ஆனால் எத்தனை நாட்களிலர் உடல் நிலை சீராகும்// இதற்கும் அதே பதில் தான் ஒவ்வொருவருக்கு ஒருவிதம். யோசித்துக் குழம்ப வேண்டாம். அதனால் எதையும் மாற்ற இயலாது. முடிந்தவரை சந்தோஷமாக இருங்கள். எல்லாம் நலமாக என் பிரார்த்தனைகள். வேறு ஏதாவது பேசவேண்டி இருந்தால் இங்கே கேள்வியை வையுங்கள். யாராவது பதில் சொல்வார்கள். என் கண்ணில் படும்போது உங்களுக்குப் பதில் கிடைக்காதிருந்தால், பதில் சொல்கிறேன்.

சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

எனக்கு பிறப்புறுப்பில் வலி உள்ளது .இடுப்பு வலி கால் வலி போன்றவை உள்ளது .என் மாமியார் இது போல் தான் வரும் என்கிறார் .என் கணவர் காலை 9 மணிக்கு சென்றால் இரவு 10 மணி அளவில் தான் வீடு திரும்புவார் .மருத்துவமனை ,கிளினிக் சென்று வருகிறார் .தற்போது கொரனா நிலை என்பதால் மிகவும் பாதுகாப்பாகவே என்னை நெருங்குவர் .இருந்தும் என் மாமியாருக்கு தொற்று ஏற்பட்டது .மாமியார் உடன் இருந்து பார்த்து கொள்ள என் கணவர் அனுமதிக்க இல்லை நான் கர்ப்பம் ஆக இருந்ததால் .தற்போது அவர் உடல் நிலை சுமாராகவே உள்ளது ...மேலும் எனக்கு கடந்த இரண்டு நாட்கள் காய்ச்சல் உடல் சோர்வு உள்ளது .மருத்துவ பரிசோதனையில் சாதாரண காய்ச்சல் என்று தான் வந்தது .இருந்தும் மனம் மிகுந்த வேதனை படுகிறது .முகம் சோர்வாக உள்ளதாக கணவர் கூறுகிறார் .என் கணவர் என்னிடம் நேற்று உன்னை நான் எங்கும் விட மாட்டேன் பிரசவம் நானே பார்த்து கொள்கிறேன் .உன் பெற்றோர் வந்தால் இங்கே பார்க்க சொல்வேன் என்றார் .மேலும் குழந்தை பிறந்த பின்பும் உடலுறவு கட்டாயம் கொள்வேன் ஏனெனில் இது மட்டுமே நமக்குள் அன்யோன்யம் உன்னோட நேரம் செலவழிக்க இல்லை என்ற எண்ணம் போக்கும் ஒரே தீர்வாக இது மட்டும் தான் என்கிறார் .என் கணவர் நரம்பியல் மற்றும் மனநிலை மருத்துவர் ஆவார் .

இன்னும் 35 நாட்கள் டெலிவரிக்கு உள்ளன .ஆனால் இடுப்பு கை கால் வலி உள்ளது .மருத்துவர் வலி வருவது இயல்பு .ஏதேனும் நீர் இர்த்தக்குறி கண்டால் உடனடியாக வரும்படி கூறினார் .பிறப்புறுப்பில் மாற்றம் உள்ளது இன்று மாலை முதல் .என் மாமியார் தனக்கு தெரியவில்லை மருத்துவ மனை செல்லும் படி கூறியுள்ளார் .

இன்னும் 35 நாட்கள் டெலிவரிக்கு உள்ளன ...கணக்கு படி எட்டாம் மாதம் முடிவுக்கு வந்து ஒன்பதாம் மாதம் இது .ஆனால் என் மாமியார் எட்டாவது மாதம் குழந்தை பிறந்தால் கஷ்டம் என்றார் .இந்நிலையில் கூட என் மாமியார் என்னை நோகடிக்கிறார் என்று அழுகை வந்தது .என் கணவர் இன்னும் மருத்துவ மனையில் இருந்து வர இல்லை

நீங்கள் சொன்ன வலிகள், சிரமங்கள் சாதாரணமாக இருக்கக்கூடியவை தான்.

சாதாரண காய்ச்சல் என்று முடிவு தெரிந்தபின் வேதனைப்பட எதுவும் இல்லை. முகச் சோர்வு உங்கள் மனம் கவலையாக இருப்பதைக் காட்டுகிறது, உற்சாகமாக இருக்கப் பாருங்கள். குழந்தையை வரவேற்கும் ஆயத்தங்களில் மனதை ஈடுபடுத்துங்கள். உங்கள் கணவர், தானே பார்த்துக் கொள்வேன் எனும் போது, கவலை வேண்டாம். பெற்றோர் வந்தாலும், கூட வைத்துக் கொள்வதாகச் சொல்வது எத்தனை நல்ல விடயம்!

//இது மட்டுமே நமக்குள் அன்யோன்யம் உன்னோட நேரம் செலவழிக்க இல்லை// நீங்கள் குழந்தை வளர்ப்பைச் சரியானபடி திட்டமிடாவிட்டால் இனிமேல் இன்னும் குறைவாக நேரம் கிடைக்கும். கணவர், குழந்தை இருவருக்காகவும் செலவு செய்யும் நேரத்தைச் சரியானபடி பாலன்ஸ் செய்வது முக்கியம். அம்மா உதவிக்கு வந்தால் கூட குழந்தையின் வேலைகளை ஆரம்பம் முதல் நீங்களே செய்வது நல்லது. அம்மா திரும்ப தன் வீட்டுக்குத் திரும்பும் சமயம் உங்களுக்கும் குழந்தைக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். ஆரம்பத்தில் குழந்தையை நீராட்டுவதை அம்மா செய்யலாம். அம்மா இருக்கும் போதே மெதுவே நீங்கள் குளிக்க வைக்கும் வேலையையும் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

முடியாது, செய்யக் கூடாது, ஒரு மாதம் ஓய்வாக இருக்க வேண்டும், பச்சை உடம்பு என்கிறதெல்லாம் ஒரு அளவோடு மட்டும் இருக்கட்டும். இங்கு பிரசவ அறைகளில், பைஜாமாவிலிருப்பதை ஊக்குவிப்பதில்லை. பிரசவம் ஆன மறுநாளே விருந்தினரை எதிர்பார்ப்பது போல நல்ல உடை உடுத்தி அழகாக இருக்கச் சொல்வார்கள். படுக்கையில் இருப்பதுவும் மிகவும் அவசியம் என்றால் மட்டும் செய்யுங்கள். நீங்கள் உட்காருவதற்கு அறையில் ஒரு நாற்காலியை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆக்டிவ்வாக இருப்பது மனநிலை மேம்பட உதவும். இதன் வழியே, உடல்நிலையும் விரைவில் மேம்படும்.

குழந்தை அழும் சமயம் எல்லாம் தூக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. காரணம் என்னவாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, தேவையைத் தீர்த்த பின்பும் அழுதால் அப்படியே விட்டுவிடலாம். காரணமில்லாமல் அழுதால் யாரும் தூக்க மாட்டார்கள் என்பது குழந்தைக்குப் புரியும், புரிய வைத்தால் உங்கள் நாட்கள் சிரமமில்லாமல் நகரும். இரவில் உரிய நேரத்திற்குப் பாலூட்டி, பாம்பர் மாற்றியாகிவிட்டது என்றால் பிறகு எழுந்து அழுதால் உடனே கவனிக்க வேண்டியது இல்லை. பத்துப் பதினைந்து நிமிடங்கள் விட்டுப் பார்க்கலாம். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு உறங்க ஆரம்பிக்கும், அப்படியே பழக்கமாகியும் விடும், அதற்கு மேலும் அழுதால் எழுந்து பாருங்கள். உங்களுக்கும் உறக்கம் அவசியம் இல்லையா!

இப்போதே இதைச் சொல்வது அவசியம் இல்லை தான். ஆனால் தாயாராகத் தயாராகும் சமயம், இவற்றைப் பற்றியும் திட்டமிடல் இருந்தாக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

சந்தேகத்தை வைத்திராமல் மருத்துவரிடம் போவது நல்லதுதான்.

//எட்டாவது மாதம் குழந்தை பிறந்தால் கஷ்டம்// இதை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் மாமியார் நிச்சயமாக உங்களை நோகடிப்பதற்காக புதிதாக ஒரு கதையை உருவாக்கிச் சொல்லவில்லை. அப்படி நினைப்பதை விடுங்கள். அவருக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறார். நிறையப் பேர் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று உள்ள மருத்துவ முன்னேற்றங்கள், உங்கள் குழந்தையின் பாதி வயதுள்ள குழந்தைகள் பிறந்தாலும் கூட பாதுகாப்பாக வளர வைக்கக் கூடியவை.

//என் கணவர் இன்னும் மருத்துவ மனையில் இருந்து வர இல்லை// இன்று வந்ததும் பேசுங்கள். உங்களுக்கு ட்ரிப்ளிங் அல்லது இரத்தக் கசிவு ஆரம்பித்துவிட்டால், 'அப்பா வரும்வரை காத்திருப்போம்,' என்று குழந்தை உள்ளே இராது. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள், உங்கள் கணவர் & மாமியார் ஒன்றாக அமர்ந்து தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். அறிகுறிகள் தோன்றும் போது உடனே மருத்துவமனைக்குப் போவதுதான் புத்திசாலித்தனம்.

‍- இமா க்றிஸ்

அதிகாலை சுகப்பிரசவம் ஆகி உள்ளது .குட்டி இளவரசர் பிறந்துள்ளார் .எனக்கு நேற்று மாலை முதல் வலி மற்றும் ரத்தபோக்கு ஏற்பட்ட காரணத்தால் எனக்கு பிரசவம் முன் கூட்டியே நடந்தது .என் தாய் வீட்டில் யாரும் இது வரை வரவில்லை .என் கணவர் மட்டுமே பார்த்து கொண்டார் .குழந்தை 2.400 எடை உள்ளது .நீயோ நேட்டல் பிரிவில் இருந்து .பின்பு மருத்துவ இரத்த பரிசோதனை மேற்கொண்டு எல்லாம் நார்மல் என வந்தது .குழந்தை இப்போது தான் கையில் வந்தது .உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயன் தரும் மேடம் .நன்றி மேடம்

edit reply

மேலும் சில பதிவுகள்