குழந்தையின் திடீர் கால் வலி

எனது 2.8 வயது மகள் நன்றாக விளையாடி ஆடி ஓடக் கூடியவள்.இன்று காலை எழுந்து ஏதோ காலில் முள் குத்தியது போல குதிகாலை தூக்கிக் கொண்டு நின்றாள்.எதுவோ ஏறி விட்டதோ என்று தேடினேன் காணோம்..பிறகு தூங்கி விட்டாள் எழுந்தபின் பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..எழுந்த பின் நொண்டினாள்..பயந்து விட்டேன்...ஆனால் எந்த வருத்தமோ அழுகையோ இல்லை நொண்டி நொண்டி நடக்கிறாள்..வலிக்கிறது என்று கேட்டால் மட்டும் சொல்கிறாள்..சிறித்துக் கொண்டே சொன்னதால் சும்மா என்னை ஏமாற்றுகிறாள் என விட்டு விட்டேன்.
பின் தவழ்ந்தாள் நான் ரொம்ப பயந்து விட்டேன் அப்பொழுதும் அதே சிரிப்பு அதே நோண்டல் தான்..குறும்பில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நோன்டினாள்..காலில் தைலம் போட்டு விட்டு மதியம் திரும்ப தூங்க வைத்தேன்..தூங்கி எழுந்த பின் முட்டி இரண்டையும் மடக்கிக் கொண்டு குனிந்து குடிந்து நிமிராமல் நடக்கிறாள்.
இன்று ஒரு நாள் பார்த்து விட்டு நாளை காலை மருத்திஉவரிடம் கொண்டு செல்ல இருக்கிறேன்...மற்ற எந்த கம்ப்லெயின்ட்டும் சொல்வதில்லை அமைதியாக தூங்குகிறாள்..எதனால் இந்த வலி??
இன்றே மருத்துவரிடம் போக இருந்தேன் ஆனால் ஒரு பக்கம் பயம் எதுவும் மருந்து ஊசி என குத்தி இல்லாத நோயை வாங்க வேண்டாமே பொறுPPஓம் என இருந்து விட்டேன்.
நான் சந்தேகிக்கும் சில காரணங்கள்:
1)2 நாட்களுக்கு முன் சைக்கில் வாங்கினோம்..அது கொஞ்சம் அவள் கால் எட்டாமல் இருந்தது என்றாலும் அவள் அடம் பிடித்ததால் கொண்டு வந்தோஷம் அதில் 25 நிமிடமாவது விளையாடியிருப்பாள்..அதனால் தொடையில் ஏதும் ஸ்பெரியின் ஆகி இருக்குமோ??சைக்கில் ஓட்டி அடுத்தநாள் வராமல் 2 நாள் கழித்து வலி வருமா?
2)வாரத்தில் ஒரு நாளாவது ஒரு கண்ணாடியை உடைப்பாள்..அதில் ஏதாஅவ்து சில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே போயிருக்குமோ?
3)தினசரி செய்யும் சின்ன காரியங்களுக்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை..ஒரு சேரில் ஏற கூட சும்மா ஏறாமல் ஓடி வந்து தான் ஏறுவாள்..அப்பப்ப டமார் டிம்மிர்னு முட்டிக் கொண்டு தான் ஏறுவாள்..அப்படி எதுவாவது பட்டிருக்குமோ?
இப்பொழுது அவள் கால் இரண்டையும் நடுவில் 1/2 அடி இடைவெளி விட்டு விரித்துக் கொண்டு முட்டியையும் மடக்கிக் கொண்டு குனிந்து நடக்கிறாள்....மருத்துவர் சொல்லும் முன்பே உங்களது ஆலோசனை எனக்கு மிகவும் அவசியம்.
இப்படி ஏதும் அனுபவம் உண்டா?எனக்கு ரொம்ப பயமாக தான் இருக்கு.

தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

தளிகா ரீமாவிற்கு கால் வலி இப்போ எப்படி இருக்கிறது. டாக்டரிடம் போனீங்களா? என்ன சொன்னார்கள். உடனே பதிவு போடவும்.

ஜானகி

அமைதி அமைதி அமைதி..என்னடா நேத்து பொலம்பினவ இன்னைக்கு இப்படி லொல்லு பன்றாளேன்னு தானே?
ஆமாம் அது சைக்கில் ஓட்டியே வந்தது தான்.டாக்டரிடம் போனேன் அவர் சரியாகிடும் 2 நாளில்னு விட்டுட்டார்..ஜலீலாக்கா ஃபோன் பன்னி பொறுக்கும் சூடாக எண்ணையை தடவ சொன்னார் அதே போல் செஞ்சேன்..இப்ப கொஞ்சமா தான் நொண்டரா ஆல்மோஸ்ட் சரியாகிவிட்டது.
ச்சே கருமம் நான் ரொம்ப பயந்துட்டேன்..எதுவாவது வந்தால் கூக்லிங் பன்னி பாக்கும் பழக்கத்தை இனி அறவே நிறுத்த போறேன்..கால் வலி எதனாலன்னு பார்த்தால் லூகீமியா வரை காரணம் சொல்லியிருக்கறாங்க..மனுஷனுக்கு பயம் வருமா வராதா..ரெண்டு நாளா தூங்கவே இல்ல
அதுல வேற இவ காலில் பூச்சி கடிச்சதுன்னு ஒரு டூப் விட்டா..நான் கூட எதுவோ நான் பார்ர்க்காதப்ப கொத்திடுச்சோன்னு பயந்தேன்.
இன்னைக்கு சப்பானி மாதிரி தலையில் பிஸ்கட் பாக்கெட்டை வச்சுட்டு சரிஞ்சு சரிஞ்சு போஇட்டிருக்கா.உங்க எல்லோர் உதவியாலும் எனக்கு தைரியமும் வந்தது இவளுக்கும் காலும் குணம் தெரியுது...எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.இப்ப தயிர் புளிக்கலன்னா கூட இங்க வந்து கேக்கத் தான் தோனுது.

எப்படியோ ரீமா குட்டி நலமா இருக்காங்கறது கேக்க சந்தோஷ்மா உள்ளது.ஆமாம் தோழி தளிகா இணையதளத்தில் ஏதெனும் தேடி அவசரமாக பார்த்தால் ஒன்றுமில்லாத ஜலதோஷத்திற்க்கு ஆஸ்மா வோடு முடிச்சு போட்டுடுவாங்க.நம்மல பயமுறுத்தற்துல அப்படி என்ன அதுக்கு ஒரு சந்தோஷமோ.என் கணவரே நான் ஏதாவது நெட்டில் எதற்க்காகவாவது மருத்துவ சம்பந்தமாக பார்த்தால்,வேண்டாம் அது எல்லாம் நீ பார்த்தால் பயந்துடுவன்னு சொல்வார்.அப்படியும் என் கை சும்மா இருக்காது.படிச்சுட்டு சும்மா இல்லாமல் என்னவரிடம் என்னங்க இது இப்படி ஆகுமோ,அப்படி ஆகுமோன்னு புலம்பல்ஸ் வேறு.

தளி ரீமாவை பற்றி கேட்கலாம்னு வந்தேன் சரியாகிட்டுன்னு சொல்லிட்டே அல்ஹம்துலில்லாஹ்..இவளுக்கு இன்னும் பெடலில் கால் வைத்து ஓட்ட தெரியல..சைக்கிள் வாங்கி 1 வருஷத்துக்கும் மேல் ஆகுது எப்படி கத்து கொடுத்தே?இவ சும்மா உருட்டிட்டே இருக்கா..அதும் வீட்டுக்கு எந்த பிள்லைங்களாவது வந்து அவ சைக்கிளை தொடுறப்பதான் இவ போய் உட்காருவா!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமா சுகன்யா நம்ம கை தான் சும்மா இருக்காதே ஏதோ பொறந்தப்பவே கைய்யில் பிசியோட வந்தது போலல்லவா .கடுகு வெடிக்காட்டி கூட கூக்லிங் தான் போங்க.
சந்தோ எனக்காக பதில் சொல்ல சொல்லி வேற த்ரெட்டில் சொல்லியிருந்தீங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா எப்படி நன்றி சொல்ல எல்லோருக்கும்னு தெரீல.
மர்லி இவ சைக்கில் வேனும்னு கேக்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகுது ரொம்ப இன்டெரெஸ்ட் வேற பிள்ளைக ஓட்டும்போது நல்ல காலை பாத்துட்டு இருப்பா..அதனாலயா என்னவோ
மாலுக்கு போய் சைக்கிலை வெளிய எடுத்ததும் அதில் உட்கார்ந்து மிதிக்க ஆரம்பிச்சுட்டா இன்னும் அப்படி இப்படி திருப்ப தான் தெரியல ஆனால் நல்லா மிதிக்கிரா..நானாவது நிறுத்தியிருக்கனும் ஒரே நாளில் கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஓட்டினா பாவம்.அது ஒரு 5 வயசு பிள்ளை ஓட்டும் சைக்கில் வேற.
நீ ஒன்னும் அவசரப்பட வேண்டாம் ஆசை இவங்களுக்கு இருந்தாலும் அதுகளுக்கு கால் பலமிருக்காது அது மிதிக்குமளவு அதை அப்படியே வை.இன்னொரு 6 மாசம் கழிச்சு மெல்ல கொடுத்து பார்..இரண்டு காலையுல் கரெக்டா வச்சு கொடுத்து அமுத்து அமுத்துன்னு சொல்லாம நீங்களே தள்ளுங்க அப்ப அதுக்கு காலும் அதோட சேர்ந்து சுத்தறது புரியும்..பின் மெல்ல தானா அழுத்தும்..வாங்கும்போது நல்ல சைக்கிலா வாங்கிக்க...இந்த சினா பொருட்கள் பிள்ளைகளுக்கு ஒத்துக்காது ரொம்ப அழுத்த வேண்டிவரும்.
இப்பத்திக்கி உருட்டட்டும் அப்ரம் அவஸ்தை வேண்டாம்ல.

ரீமாக்குட்டி எப்படி இருக்கா இப்ப. ரொம்ப பயந்துட்டீங்களா?
நேற்று 'ஃபன்னி வீடியோஸ்'சில் ஒரு பாப்பா 'பேபி கட்டிலில்' இருந்து ஒன்றொன்றாக தூக்கி விட்டெறிந்தது. என் பெண் அம்மா அந்தப் பாப்பாவைப்போல் இருக்கு இல்ல என்றாள். எந்தப்பாப்பா தெரியுமா? ரீமாக்குட்டி கட்டிலில் போடுவாளே ஒரு ஆட்டம். அதுவேதான்.

என் தங்கையின் பையன் ஒரு நாள் அவள் அலுவலகத்திலிருந்து வந்ததும். அம்மா நான் வாமிட் பண்ணிட்டேன்னு, அதற்கு 5, 6 காரணங்கள் எழுதி வைத்திருந்தானாம். அதற்கு என் தங்கை ப்ரெக்னன்சியை விட்டுவிட்டான், மற்ற எல்லாம் எழுதிவிட்டான் என்று சொல்லி சிரித்தாள். இந்த வாலுங்க எல்லாம் அப்படித்தான். நம்மை பயமுறுத்தும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

தளிகா நன்றியெல்லாம் இருக்கட்டும்..குழந்தை நல்லா இருந்தால் போதும்..அரட்டை திரட்டில் போட்டால் உடனே யாராவது பார்த்து பதில் உடனே உங்களுக்கு கிடைக்கும்னு தான் போட்டேன்.. குழந்தைக்கு என்றால் மனசு துடித்து விடுகிறது..குட்டியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்..

ஆம் ஜே /சந்தோ
அவள் இப்போ நல்லா இருக்கா..சரியான குறும்பு தான்..ஜே அது அப்பல்ல இப்ப பெட்ல போடர ஆட்டத்துல பெட் ல கீழ இருக்கற கட்டையில் ஒன்னு பிஞ்சு வந்துடுச்சு.
அந்த கால் நொண்டும்போதே கூட காலை விரிச்சு வச்சுக்கிட்டே அவளால் முடிஞ்ச ஸ்டெப் எல்லாம் போட்டு அது ஏற்க்குறைய ஒரு பரதநாட்டியம் போல இருந்தது.ஆமாம் பிள்ளைகளுக்கு எல்லாம் வரும்போகும் அப்படி தான்வளருவார்கள் என்பது நல்லாவே தெரியும் இருந்தாலும் பதட்டம் தான் இவள் அவ்வளவு சீக்கிரம் வலிக்காக அழுவ மாட்டாள் எதுவாவது வந்தால் கூட நான் தான் கண்டுபிடிக்கனும் அது தான் கஷ்டம்.கீழ விழுந்தாலும் அங்கங்க ஒரு நெல்லிக்காய் மண்டையில் முளைத்திருந்து நான் பார்த்தா தான் உண்டு

என்னுடைய குழந்தை கால்களை மடக்கி உட்கார்ந்து முட்டியை பிடித்து கொண்டு அழுகிறள். அவளுடைய வயது 1 அரை வயது ஆகிறது. நன்றாக விளையாடுகிறாள்.சாப்பிட்டுகிறள். ஆனால் ஊறு நாளைக்கு ஒரு தடவையது கால் பிடித்து அழுகிறள் . மிகவும் பயமாக் உள்ளது.

meerakrish

மேலும் சில பதிவுகள்