பல்சுவைப் பள்ளி - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

(இந்த கதையில் வரும் கதாபாத்திரமும், அதன் பெயர்களும் உண்மையே. ஆனால், கதை கற்பனையே).

அந்த ஆரம்பப் பள்ளியில் எல்லோரும் ஆசிரியர் வருவதற்காய் உற்சாகமாய் காத்திருந்தார்கள். அனைவர் முகமும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் இன்று தான் அவர்கள் ஆசிரியர் அரட்டை அடிக்க அனுமதித்திருந்தார்.

வந்த ஆசிரியர் வணக்கம் சொல்லி அமர்ந்து, மாணவர்களைக் கேட்டார், "வர்ற தீபாவளிய, நம்ம பள்ளில எப்படியெல்லாம் கொண்டாடலாம்? எல்லாரும் அவங்கவங்க கருத்த சொல்லுங்க, நம்ம கொண்டாட்டத்த பார்க்க வெளில இருந்தும் வருவாங்க."

முதல் ஆளாய் கை தூக்கிய இமாம்மா "அழகான கைவினை செஞ்சி தொங்கவிடலாம்" என்றார்.

"க்ராஃப்ட் வொர்க்கா?" யாரோ குரல் எழுப்ப இமாம்மா கர்ர்ர்...ர்.. "தமிழில் சொல்லலாமே..."

"கைவினை ஓகே தான். ஆனா, அது எனக்கு ஆரம்பம் தான். வேணா, ம்ம் ஸ்வீட் செய்யலாம்'' இது வனி சிஸ்.

"சரி தான்" கூடவே உமா டன்ஸ்டன், வாணி, சுவர்ணா, செந்தமிழ் செல்வி அம்மா.

"கொஞ்சம் காரமும் சேர்த்துக்கலாம்பா, குழம்பு மாதிரி" இது உமா டன்ஸ்டன்.

"இனிப்போ, காரமோ குட்டி அம்மாக்களுக்கும் ஒத்துக்கிற மாதிரி பண்ணுங்கப்பா..." இது வாணி சிஸ்டர்.

"அப்படீன்னா சித்த மருத்துவத்துல பயன்படுற பனை வெல்லம், மலைத்தேன் கலந்து செய்யலாம். இந்த மழைக் காலத்துக்கு சளி பிடிக்காது" என்று தனது கருத்தைக் கூறினார் சீதாம்மா.

"ஆமா... ஆமா... " என ஆமோதித்தார் ரேணுகா சிஸ்டர்.

"என்னம்மா கொஞ்ச நாளா காணல"

"இந்த கிறிஸ் தான் எப்ப பாத்தாலும் கொசுவர்த்தி கொளுத்துறா, மூக்கு எரியுது, அம்மா வீட்டுக்கு போய்ட்டேன். தீபாவளியும் அங்கதான். வேணும்னா இப்பவே பட்டிமன்றம் வைங்க." கூடவே பட்டிமன்ற நேயர்களும் கைதூக்கினர்.

கவித, கவித - கோரசாய் குரல். பார்த்தால் அங்கே ரஜினிபாய் அம்மா, சுபி, சஜன்யா, ரேவ்ஸ்.

"அந்தக் கால தீபாவளி, இந்தக் கால தீபாவளின்னு பிரிச்சி போட்டு கவித எழுதிரலாம்" பக்கத்துக்கு மூணு, நாலு கவித போதும். "அதுகூட ஓகே தான். ஆனா, ரேவ்ஸ் சோக கீதம் கூடாது.''

அப்படீன்னா, தீபாவளி எப்படி வந்ததுன்னு, நம்ம வரலாற படிச்சி கத சொல்லுவோம். நம்ம தொல்காப்பியத்துல தீபாவளி பத்தி என்ன சொல்லுறாங்கன்னா,

"ஏய் இத நானும் படிக்கணும்னு நெனைச்சேம்பா" ஆரம்பித்தார் 'அணு' செந்தில். ஆனா படத்துலதான், நரகாசுரனை கொல்லுறத கொடூரமா காட்டிட்டாங்க.

"ஏய் கதையே சொல்லுவோம். ஆனா உண்மை கத. யாருக்கும் தெரியாத மாதிரி பேர மாத்திடுவோம்." இது அருட்செல்வி சிவபிரகாசம்.

"எதுக்கு அது? டிரஸ் எடுப்போம், பலகாரம் சுடுவோம், பட்டாசு கொளுத்துவோம். போட்டோ எடுப்போம். பட்டாசு வருஷம் ஒருக்கா தானே கொளுத்துறோம். ஜமாய்ப்போம்'" பட்டாசாய் வெடித்தார் நிகிலா.

ஆண்கள் யாராச்சும். "ஒரு கத, நெடுங்கதை 2 மாசத்துக்கு, 1 பாகம் அடுத்த தீபாவளிக்கு முடிச்சிகலாம்".

"அப்படின்னா கடைசி வார்த்தைய மரியாதையோட 'ங்க' ன்னு முடிப்போம்." குரல்கள் ஒலித்தன.

ஆசிரியர் "எது வேணும்னா பண்ணலாம். ஆனா, கண்டிப்பா விதிமுறை நெறைய இருக்கும். ஃபாலோ பண்ணனும். அப்படி பண்ணல அவங்க போட்டில இருந்து நீக்கப்படுவீங்க. சரியா?" அனைவரும் சரி என தலையாட்டினர்.

“அப்புறம்... ஆசிரியைகள் சார்பா கோலம் போடுவாங்க."

"சுபத்ரா டீச்சரா, நல்லா கோலம் போடுவாங்களே, எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றார் இமாம்மா.

"நான் கூட அத பார்த்து என் நோட்டுல போட்டுருக்கேன்." குரல் மட்டும் கேட்க,

"இப்ப சொன்னது செந்தமிழ்ச் செல்வி அம்மாவா", என்றது இன்னொரு குரல்.

"இல்லை நான் அருட்செல்வி நீங்க குழம்பாதீங்க".

"நான் சொல்லுறது இது தான், எப்படின்னாலும் எது, தேவையோ அத முன்கூட்டியே ரெடி பண்ணி, பேக் பண்ணி வைங்க." செந்தமிழ்ச் செல்வி அம்மா.

"நான் வேணும்னா, பேக் யுவர் பேக்ன்னு குறிப்பு குடுக்கிறேன்...சரியா?".

"ஓகே, அங்க என்னப்பா, புரியாத மாதிரி குசுகுசுன்னு சத்தம் மட்டும் வருது. தெளிவா சொல்லுங்க. தமிழ்ல சொல்லுங்க. சரி யாரெல்லாம் கலந்துகிறவங்கள உற்சாகப்படுத்துறது." எல்லாருமாய் கை தூக்கினர்.

முதல் வரிசையில் இருந்த, ரேவதி.ப, கனிமொழி, தயு, கலை, பாலபாரதி, ரேமு, முசி, பாலநாயகி, ஜா123, ஆனந்தகௌரி முழுமையாய் கைதூக்க, இன்னும் சிலர் அரை குறையாய் தூக்கினர்.

"கிறிஸ் ஒழுங்கா கைதட்டனும், அப்பப்ப கட் அடிக்கக்கூடாது. சரி, சரி எல்லாரும் என்னென்ன பண்ணப் போறீங்க அப்படீன்னு முடிவு பண்ணி லீடர் இம்மாம்மா, வனிதா சிஸ்டர், ரம்யா கார்த்திக் இவங்ககிட்ட பேர குடுங்க. அரட்டை அடிங்க ஆனா, விதிமுறையைக் கடைபிடிங்க. நாளைக்கு பாக்கலாம்".

அனைவரும் ஆர்வமாய் பெயர் கொடுக்க ஆரம்பிக்க, வகுப்பில் அரட்டைத் தொடர்ந்தது...

Comments

படித்து, பாராட்டுனதுக்கு நன்றி சிஸ்டர். \\அப்பறம் இதில் ப்ரேம்ஸ் மிஸ்ஸிங்... ஐ திங்க், இந்த நாளில் நான் க்ளாஸ் கட் அடிச்சிட்டு சீரியல் பார்க்க போய்ட்டேன் போல... ஐ மிஸ்டு டூ பார்டிசிபேட் இன் திஸ். சோ சாட்...\\ அறுசுவை மெம்பர்ஸ் எல்லாரும் பள்ளில இருந்தாங்க. நீங்களும் தான். அமைதியா பேசினீங்களோ, சத்தம் கேட்கல. அவ்வளவு தான். சோ, நோ சாட். அடுத்த கதை அப்ப சத்தமா பேசுங்க. சரியா. கமெண்ட்க்கு நன்றி சிஸ்டர்.

உன்னை போல் பிறரை நேசி.

கலக்கிட்டீங்க ஃக்றிஸ்.
சூப்பரா காமெடியா இருந்ததுங்க. ரொம்ப எஞ்ஜாய் பண்ணி படித்தேன். அடிக்கடி இப்படி நகைச்சுவையா எழுதுங்க. படிக்க ஆவல். எல்லோருக்கும் மன அழுத்தம் நிச்சயம் குறையும். வாழ்த்துக்கள்.

வாணி சிஸ்டர்.

கதையை படித்து பாராட்டுனதுக்கு நன்றி.. அடுத்த கதை சீக்கிரம் போட ட்ரை பண்ணுறேன். 'ஃக்றிஸ்' பேரே புதுசா இருக்குங்க. நன்றி..நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

கலக்கல் க்றிஸ். அசத்திட்டீங்க. காலையில இருந்து ஒரே வயித்துவலி சிரிச்சு, சிரிச்சு இன்னும் அதிகமாயிடுச்சு. //”கொஞ்சம் காரமும் சேர்த்துக்கலாம்பா, குழம்பு மாதிரி"// காரம் ஓ.கே. அதென்ன குழம்பு மாதிரி!!! ஸ்வீட்டுக்கு தொட்டுக்கவா? ;) நல்ல நகைச்சுவை திறன் உங்களுக்கு நிறைய எழுதுங்க. படிக்க ஆர்வமா இருக்கு.
வாழ்த்துக்கள்.

என் லாப்டாப் ரிப்பேருக்கு போய் நேத்துதான் வந்துச்சு. அறுசுவை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன். இப்ப சந்தோஷமா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனக்கு இன்று அதிகாலை சுகப்பிரசவம் ஆகி உள்ளது .குட்டி இளவரசர் பிறந்துள்ளார் .எனக்கு நேற்று மாலை முதல் வலி மற்றும் ரத்தபோக்கு ஏற்பட்ட காரணத்தால் எனக்கு பிரசவம் முன் கூட்டியே நடந்தது .என் தாய் வீட்டில் யாரும் இது வரை வரவில்லை .என் கணவர் மட்டுமே பார்த்து கொண்டார் .குழந்தை 2.400 எடை உள்ளது .நீயோ நேட்டல் பிரிவில் இருந்து .பின்பு மருத்துவ இரத்த பரிசோதனை மேற்கொண்டு எல்லாம் நார்மல் என வந்தது .குழந்தை இப்போது தான் கையில் வந்தது .உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயன் தரும் மேடம் .நன்றி மேடம்