Food doubt at 8 th month pregnancy

Hai friends,

Nan ipo 8 th month pregnancy(34 weeks starting), netru baby growth scan seithom. athula baby weight(2.62) athigama irukunu sonanga. enanku due date december end than kuduthurukanga. ithuvaraikum edutha test and scans elame normal than. but intha scan la than baby weight athigama irukunu sonanga. next week sugar test ethukum check panidalam nu solirukanga. white sugar avoid and white rice kammi panna solli irukanga.

Ipo na entha mathiriyana foods sapidalam? Fruits sapidalama? sathu maavu kanji kudikalama? and White rice ku padhila varagu, samai, thinai or kuthiraivali rice seithu sapidalama?

Pls reply friends.

நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் எல்லாமே மிகுந்த அன்பு/அக்கறை/எளிமை/ஞானம்/பக்குவம்/தெளிவுடன் இருப்பதால் இது சம்ம(ப)ந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமே பயன்படுகின்றன.

என் அன்பு நன்றிகள் பல.

அன்புடன்
ஜெயா

முதலில் ப்ரீதிக்கு என் அன்பு வாழ்த்துக்கள். அம்மா சீக்கிரம் வந்து பார்ப்பாங்க. இருந்தாலும் எதிர்பார்ப்பு வேண்டாம். உங்கள் முழுக் கவனமும் குழந்தை மேல் இருக்கட்டும். :-) லண்டன்ல இருக்கிறீங்க என்பதை இப்போதுதான் கவனித்தேன்.

ஜெயா... :-) அவங்களுக்கு யாரும் பதில் சொல்லியிருக்கவில்லை. கேள்வியை வைப்பதற்காகவே உறுப்பினராகி இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவசர அவசரமாக மனதில் பட்டதைத் தட்டிவிட்டுப் போகிறேன். ஏதாவது பிழையாக எழுதி இருந்தால் சொல்லிருங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி மேடம் .நான் தற்போது ஒய்வு எடுத்தாலும் .வீட்டு பொறுப்பு என் வேலை கள் அனைத்து நானே செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன் .அடுத்த நாள் சமையல் செய்ய வேண்டியதை முன் நாளே திட்டம் இட்டு பாதி செய்முறை முடித்து விடுகிறன் .துணிகளை வாசிங் மெசினில் போட்டு உலர வைத்து விடுவேன் .பாத்திரம் சேரமால் பார்த்து கொள்கிறேன் .குழந்தையை மிகவும் கதகதப்பாக வைத்துள்ளேன். அழுதால் 10 நிமிடம் கழித்து தான் தூக்குகிறேன் .பகல் துணி டையப்பர் பயன்பாடு .இரவில் மட்டுமே டையப்பர் போட்டுள்ளேன் .தற்போது 45 நிமிடங்கள் ஒரு முறை தாய் பால் புகட்டுகிறேன் .இடையில் அழுதால் கையில் எடுக்க இல்லை அவரே சாமாதனம் அடைகிறார் .நான் பத்திய சாப்பாடு தான் சாப்பிடுகிறேன் .கணவர் அருகில் உதவி செய்கிறார் .மேலும் ஆலோசனை கூறுமாறு பணிவு உடன் கேட்டு கொள்கிறேன் மேடம் .உண்மை நிலையில் உங்கள் ஆலோசனை மிகுந்த பயன் உள்ளது. நன்றி

//பத்திய சாப்பாடு// தேவையில்லை என்பதை விட நல்லதல்ல என்பது என் அபிப்பிராயம் மட்டும் அல்ல அனுபவமும் கூட. வயிற்றோட்டம் வரலாம். இதனால் நீரிழப்பு அதிகமாகும். தாய்க்குப் போதிய சத்துக்கள் கிடைக்காது. இந்த இரு காரணங்களாலும் பால் சுரப்பு குறையும். குழந்தை அழ... தாய்க்குத் தீர்வு தெரியாமல் டென்ஷனில் மனமும் உடம்பும் களைத்துப் போகும். லண்டனில் இருக்கும் ஐரோப்பியத் தாய்மார் பத்தியச் சாப்பாடு சாப்பிகிறார்களா? அது அவசியம், நல்லது என்றால் மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பார்கள் இல்லையா! அப்படி நடப்பது இல்லை. ஏன்! அவர்களும் அவர்கள் குழந்தைகளும் வெகு ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். எப்படி? யோசித்துப் பாருங்கள்.

பத்தியச் சாப்பாடு - ஊருக்கு ஊர், குடும்பத்துக்குக் குடும்பம், சைவம் அசைவம் என்று வித்தியாசப்படும். நீங்கள் என்னென்ன சாப்பிடுறீங்க என்கிறதை விபரமாகச் சொன்னால் திருத்தம் சொல்லலாம். நீங்கள் பத்தியச்சாப்பாடு சாப்பிடுவதைப் பற்றி உங்கள் கணவரது அபிப்பிராயம் என்ன? கேட்டுப்பாருங்கள். பத்தியச் சாப்பாடு என்று மேலோட்டமாகச் சொல்லாமல் லிஸ்ட் போட்டு இன்னின்னது சாப்பிடுறீங்க, இன்னின்ன மசாலைப் பொருட்கள் சேர்க்கிறீங்க, என்கிறதைச் சொல்லிக் கேளுங்க.

பாலூட்டுவதற்கும் உங்கள் உடல் பிரசவத்தின் பின்பான திருத்த வேலைகளைச் செய்வதற்கும் மசாலைகள் அவசியம் இல்லை, பயன்படவும் மாட்டாது. உண்மையில் தேவையானது புரதம் நிறைந்த உணவு. அதோடு கூட வைட்டமின்கள் தாதுப்பொருட்கள் ++ தேவை. நீங்கள் சாப்பிட வேண்டிய உணவில் எல்லாச் சத்துக்களும் தேவையான அளவில் இருந்தால்தான் களைக்காமல், சோர்வில்லாமல் இருப்பீர்கள். பாலும் தேவைக்கு ஏற்றபடி சுரக்கும். தண்ணீர் நிறையக் குடிப்பது அவசியம்.

டயப்பர் - பகலிலும் போடலாமே! உங்கள் வேலையைச் சுலபமாக்கும். அதற்கு மேலே குழந்தைக்கு துணியை விட சுத்தமான ஆரோக்கியமான ஆப்ஷன் டயப்பர். நாப்பி ராஷ் வந்தால் அப்போது பார்க்கலாம். மற்றவர்கள் சொல்வதை விடுங்கள். நீங்களாக யோசித்துப் பாருங்கள். குழந்தையின் உடலில் ஒரேயொரு இடம் நனைந்து ஈரமாக (டயப்பர் குழந்தையை உலர்வாகவே தான் வைத்திருக்கும்.) மீதி இடங்கள் உலர்ந்து இருப்பது நல்லதா அல்லது ஈரம் முதுகிலும் காலிலும் பரவி குழந்தை ஈரத்தில் குளிர்ந்து கிடப்பது நல்லதா? டயப்பர் போட்டுவிட்டால் அதை மட்டும் மாற்றினால் போதும். துணி பயன்படுத்தினால் படுக்கப் போட்டிருக்கும் இடத்தையும் சேர்த்துச் சுத்தம் செய்ய வேண்டும். சரியான அளவு (வயதையும் எடையையும் பொறுத்து) டயப்பரைத் தெரிந்தெடுங்கள். தரமானதாக வாங்கிக் கொள்ளுங்கள். சரியான நேர இடைவெளியில் மாற்றிவிடுங்கள்.

உங்களைப் பார்க்கும் தாதி உங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் சொல்லியிருப்பார். என்னிடம் கேட்பது... உங்கள் மன ஆறுதலுக்காக இருக்கலாம். அங்கே உங்களையும் உங்கள் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் மருத்துவ ஆலோசகர்கள் உங்களுக்கு உதவுவார்கள் இல்லையா! அவர்கள் சொல்கிறபடி கேளுங்கள். என்ன சந்தேகம் என்றாலும் பயப்படாமல் அவர்களிடம் கேட்கலாம். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். உங்களுக்கு booklets கொடுத்திருப்பார்கள் இல்லையா? ஓய்வாக அமரும் போது படித்து முக்கியமானவற்றைக் குறித்து வையுங்கள். எக்ஸாமுக்கு படிக்கிற மாதிரி :-) ஒரு ஹைலைட்டர் வைத்து மார்க் பண்ணி வைத்தால் பிறகு தேவைப்படும் போது தேடுவதற்குச் சுகமாக இருக்கும்.

இங்கு கேட்க வேண்டாம் என்று சொன்னதாக எடுக்க வேண்டாம். :-) உங்களுக்குப் பேச நம்பிக்கையான ஒரு ஆள் தேவை என்று தோன்றினால் தயங்காமல் இங்கு உங்கள் கேள்வியை வையுங்கள். நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பதில் சொல்லுவேன். குழந்தைக்கோ அல்லது உங்களுக்கு உடல்நிலை நன்றாக இல்லை, பயமாக இருக்கிறது என்றால் - அந்தச் சமயம் இங்கு பதில் கிடைக்கவோ கணவர் வேலையால் வருவதற்கோ காத்திருக்கக் கூடாது. உங்களுக்கு ஃபோனில் அவசர மருத்துவ ஆலோசனை பெறும் வசதி இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு இருக்கிறது. பேசுங்கள். அவர்கள் சரியானபடி உங்களை வழிநடத்துவார்கள்.

‍- இமா க்றிஸ்

பத்திய சாப்பாடு என நான் குறிப்பிட்டது .இனிப்பு இல்லை .காரம் எண்ணெய் குறைவானது .எங்கள் வீட்டில் இந்திய தமிழ் நாடு முறை உணவு முறை கடை பிடிக்கிறோம் ...தாய்ப்பால் பெருகும் காய்கள் கிடைப்பது கடினம் என்பதால் .வெதுவெதுப்பான பால் 4 வேலை அருந்துகிறேன் .தற்போது கொரனே காலம் என்பதால் ஹோம் நர்ஸ் வைக்க சற்று தயக்கம் உள்ளது .மருத்துவ கையேடு குழந்தை பாரமரிப்பு கையேடு போன்ற படித்து பார்கிறேன் மேடம் .குழந்தை எடை குறைவாக உள்ளதால் nb சைஸ் டையப்பர் பயன்படுத்துகிறோம் .நன்றி மேடம்

:-) இலங்கையில் பத்தியச் சாப்பாடு - இதற்கென்று சரக்குகள் (மசாலா வகைகள்) தனியே அரைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வகை மீன், சிலர் தனியே முருங்கைக்காய் மட்டும் சமைத்துக் கொடுப்பார்கள். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம், நீங்கள் சொல்வது பிரச்சினை இல்லாத வகப் பத்தியச் சாப்பாடாகத் தெரிகிறது. :-)

அசைவ உணவு சாப்பிடுவீர்களா?

ஹோம் நர்ஸ் தேவையில்லை. கையேடுகளே தேவையான விபரங்களைச் சொல்லும். நீங்கள் சரியானதைச் செய்கிறவராகத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி மேடம்

மேலும் சில பதிவுகள்