கவி பாடும் நேரம்

மன்றத்தில் புதியதாய் சில பிரிவுகளைச் சேர்த்துள்ளோம். அதில் ஒன்று இந்த கவிதைகள் பகுதி.

இதுநாள் வரையில் அறுசுவை நேயர்கள் தங்களது கவிதைகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வந்தார்கள். அவற்றை நாங்கள் எடிட் செய்து கவிதைகள் பக்கத்தில் வெளியிட்டு வந்தோம். அதில சில பிரச்சனைகள் இருந்தன. எல்லாரது கவிதைகளையும் வெளியிட இயலவில்லை. சிலர் மிகச் சிறிய கவிதைகளை அனுப்புவார்கள். ஒரே ஒரு சிறிய கவிதைக்காக கவிதைப் பக்கத்தில் தனியே ஒரு பக்கம் ஒதுக்க இயலாது. அதனால் மேலும் சிலர் கவிதைகள் அனுப்பும் வரை காத்திருந்து, பல கவிதைகளைத் தொகுத்து ஒரு பக்கமாக கொடுத்து வந்தோம். இதனால் கவிதை அனுப்பியவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும் உண்டாயிற்று.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் களைந்திடவே மன்றத்தில் கவிதைகள் பகுதியை கொண்டு வந்துள்ளோம். உறுப்பினர்கள் தங்களது சொந்த கவிதைகளை இங்கே வெளியிடலாம். அது பெரிய கவிதையா, சிறிய கவிதையா என்பது பிரச்சனை அல்ல. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் இங்கே பதிவு செய்யலாம். அறுசுவையின் பொதுவான விதிகள் இங்கேயும் பொருந்தும். படைப்புகள் உங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும். படித்த கவிதைகள், ரசித்த கவிதைகளை கண்டிப்பாக இங்கே வெளியிடக்கூடாது. உங்களது சொந்த கவிதைகளை மட்டுமே இந்த பகுதியில் வெளியிட வேண்டும். மற்றவர் கவிதைகளை வெளியிட்டால் அவை உடனே நீக்கப்படும். ஒருவர் தொடர்ந்து இதே தவறை செய்தால், அவரது அக்கவுண்ட் ப்ளாக் செய்யப்படும்.

இங்கே வெளியாகும் கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் பக்கத்தில் நாங்களே தொகுத்து வழங்குவோம். எனவே உறுப்பினர்கள் இனி கவிதைகளை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யாமல், இங்கே பதிவிட வேண்டுகின்றோம்.

அன்று வார இறுதி நாள் வேறு!!!!.பயணிகள் ‌சிலர் இரயில் ‌வண்டியிலிருந்து இறங்கியதும் இரயில் நிலையத்திற்கு வெளியே செல்ல ஆரம்பித்தனர்.. நடைமேடையில் நடை கூட செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம். அந்த இளைஞனும் தன் நண்பருடன் இரயில் நிலையத்திற்கு வெளியே செல்லலானான்...

சாலையின் இரு புறமும் நிரம்பி வழியும் சிறிய பெரிய அளவிலான கடைகள்..அலையென மோதும் மக்கள் கூட்டம்.. சில கடைகளின் முன் வாங்க சார்!! வாங்க சார்!! என்று கனத்த குரல் எழுப்பும் வாலிபர்கள் ஒரு பக்கம்...எதை எடுத்தாலும் 10 ரூபாய்!! எதை எடுத்தாலும் 10 ரூபாய் என பலகை வைத்திருக்கிறார்கள் மற்றொரு பக்கம்... அதையும் கடந்து போவதற்குள் சுட சுட டீ!! காஃபி!! பஜ்ஜி!! போண்டா!? வடை சார் என்கிறார்கள் இன்னொரு பக்கம்... இவர்களையும் கடந்து செல்கின்றனர் அந்த இளைஞனும் அவனுடைய நண்பரும்...

சற்றே அந்தக் கூட்டத்தை கவனித்துப் பார்த்தால் வாரத்தில் ஒரு நாள் ஓய்வெடுக்க நினைக்கும் கணவனும்,வாரத்தில் ஒரு நாள் வெளியே செல்ல ஆசைப்படும் மனைவியும் குழந்தையும் கொண்ட குடும்பங்கள் சில!!!பண்டிகைக்கு துணிகளை வாங்க வந்திருக்கும் கூட்டுக் குடும்பங்கள் சில!!! வாலிப வயது கொண்ட தோழர்களும் தோழிகளும் பலர்!!எங்கு பார்த்தாலும் பறவைகள் போல் பறந்து திரியும் காதல் ஜோடிகளும் இவர்களுடன்!!!!

அந்த இளைஞன் மனதில் ஏதோ ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி... தன் குடும்பத்தார்கள் தன்னைச் சுற்றி இருப்பது போல!!!! காதல் தோல்வியடைந்த அந்த இளைஞன் தன் காதலியுடன் அந்தக் கூட்டத்தில் இருப்பது போல் கூட மனதில் நினைத்திருக்கக் கூடுமோ ?? என்னவோ?? அப்படி ஒரு நெகிழ்ச்சி!!! இந்த நிலையில் அந்த இளைஞனின் நண்பர் அவருடைய வருங்கால மனைவிக்கு பரிசளிப்பதற்காக ஒரு பொம்மை ‌ஒன்றை வாங்குகிறார்... அந்த இளைஞனும் அவனுடைய காதலியின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க குழந்தை பொம்மை ‌ஒன்றை வாங்குகிறான்... வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட‌ ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது அந்த குழந்தை பொம்மை... கடைக்காரர் இதில் ஏதாவது எழுத வேண்டுமா என்று மெல்லிய குரலில் கேட்கிறார் அந்த இளைஞனிடம்!... அவன் எழுதச் சொன்னான் புன்னகையுடன்!!!!! என்றும் அன்புடன் உன் நான் என்று!!!!!!

இப்பொழுது பேஸ்ட் வாய்ப்பு உபயோகிக்க முடிகிறது.மிக்க நன்றி.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.அது அன்று.ஆம்!...
நாமும் திருடர்களே!
சில தருணங்களில்....
பிறக்கின்ற பொழுதும் இறக்கின்ற பொழுதும் நம்மை சூழ்ந்துள்ளவர்களின் சிரிப்பை திருடுகிறோம்..உதித்த நாள் முதல் மறைகின்ற நாள் வரையில் தாயின் அன்பை திருடுகிறோம்!..
வளருகின்ற வயதில் தந்தையின் அறிவை திருடுகிறோம்!..
கற்கின்ற காலத்தில் ஆசானின் அனுபவத்தை திருடுகிறோம்!...

விவரம் தெரிகின்ற வயதில் உடன்பிறப்புகளின் உரிமைகளை திருடுகிறோம்!. இறுதி காலம் வரையில் உடன்வருகின்ற நட்புகளை திருடுகிறோம்!.தாரமே தாயாய் மாறுகின்ற பெண்ணின் மனதை திருடுகிறோம்!.. இன்னும் என்ன தான் திருடவில்லை நாம்!... உடல் உறுப்புகளை இழந்த எம்மக்களை ஊனமுற்றோர் என்கிறார் சிலர்... யார் ஊனமுற்றோர்?

உடலில் உறுப்புகளை இழந்தாலும் எம்மக்கள் வியக்கத்தகு சாதனைகளை படைக்க வல்லவர்!.. யார் ஊனமுற்றோர்?.. எவன் ஒருவன் உழைப்பின் பயனறியாது அடுத்தவருடைய வியர்வையின் பலனை திருடுகிறானோ?அவனே ஊனமுற்றோன்!.. எவன் ஒருவன் தன்மீது பிறர் வைத்திருந்த நம்பிக்கைக்கு எதிர்மறையாக பிரதிபலிப்பானோ?அவனே ஊனமுற்றோன்!.. இவர்களெல்லாம் சிறு வயதில் தாயின் அன்பையும், தந்தையின் அறிவையும், ஆசானின் அனுபவத்தையும், உடன்பிறப்புகளின் உரிமையையும், நண்பர்களின் நட்பையும், பெண்ணின் மனதையும் திருடி இருக்க மாட்டார்கள் போலும்!..

அன்றே இவர்களை திருடி இருந்தால் இன்று ஊனமுற்றோன் ஆக இருந்திருக்கலாகாது!.. இறைவனின் படைப்பில் ஊனமுற்றோர் என்று எவரும் இல்லை.மாறாக மதிப்பும் மரியாதையும் மிக்க மனிதர்களின் இதயத்தை திருடாமல் விட்டவர்களே ஊனமுற்றோர் ஆக காட்சியளிக்கின்றனர்!. திருடனாய் பார்த்து திருடாவிட்டால் ஊனத்தை ஒழிக்க முடியாது!.... நன்றி!...

நீர்க்குமிழி போலானது இவ்வுலகு
தீங்ழைப்போரை விட்டு நீ விலகு
நற்பண்புடையோருடன் பழகு
சன்மார்க்கம் கற்றொழுகு
நல்வாழ்வுக்கதுவே அழகு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....

வந்திட்ட இடர்களில் வருத்தம் துடைத்தேன்
முள் தைத்த பாதையில்
முகவரியை மாற்றினேன்
வீண்பழி கேட்டு நான்
வீழ்வேன் என்று நினைத்தாயா..
முன்னேறத் துடித்தேன்
முடிவாக்கிக் காட்டினேன்
படைத்தோனின் மேலான பாதுகாப்பைக் கேட்டேன்.
பண்புடனே வாழ்ந்தேன்
பட்டங்கள் பெற்றேன்.
கிழக்கின் சூரியனாய்
இலக்கினை அடைந்தேன்.
காலத்தின் ஓட்டம்
காயங்கள் ஆற்றும்
வழிமுறைகள் உணர்ந்தேன்
வலிகளை மறந்தேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....

வந்திட்ட இடர்களில் வருத்தம் துடைத்தேன்
முள் தைத்த பாதையில்
முகவரியை மாற்றினேன்
வீண்பழி கேட்டு நான்
வீழ்வேன் என்று நினைத்தாயா..
முன்னேறத் துடித்தேன்
முடிவாக்கிக் காட்டினேன்
படைத்தோனின் மேலான பாதுகாப்பைக் கேட்டேன்.
பண்புடனே வாழ்ந்தேன்
பட்டங்கள் பெற்றேன்.
கிழக்கின் சூரியனாய்
இலக்கினை அடைந்தேன்.
காலத்தின் ஓட்டம்
காயங்கள் ஆற்றும்
வழிமுறைகள் உணர்ந்தேன்
வலிகளை மறந்தேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வேளியோட்டம் தடைப்பட்ட போதும்
மனிதா உன் மாய செயல்லோட்டம் நிற்கவில்லையே
மண்ணில் விதைத்திட முடியா நிலையிலும்
சமுக ஊடகத்தில் உழுதிட துணிந்தாயே
உண்மையும் பொய்மையும் அள்ளித் தெளித்தாயே

மனிதம் மறந்துப் போனால் மண்ணில்
புனிதம் இல்லை
இதயம் விட்டு வேரிடத்தில் எங்கும்
இறைவன் இல்லை
நாகரிக மானிடனின்
நஞ்சுக் கொண்ட மனதால்
உதிர்ந்தன சில உயிர்கள்
உருக்குலைந்தது மானிட நியதிகள்

அன்புடன்
தோழி தாமரை
"புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்.
புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்."

மனிதநேயம் மறைந்து போனதால்
மனிதர்கள் தொலைந்து போகிறார்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உழுதுண்டு வாழ்வாரை
அழவிட்டுப் பார்ப்போர் - அவரைத்
தொழுதுண்டு வாழவில்லையெனில்
உணவின்றித் தவிப்பர் - ஒருநாள்
மாற்றம் வரும்பொழுது
ஏற்றம் பெறும் அவர்வாழ்வு - அன்று
சீற்றம் கொண்டெழுந்தால்
நாற்றம் பெறும் உன்வாழ்வு - அவரை
வஞ்சித்து நீ வாழ நினைத்தால்
கஞ்சிக்கு என்ன செய்வாய் - உன்
நெஞ்சுக்குள் நீதி உண்டா?
நினைத்துப் பார் - அங்கு
புரட்சி செய்யும் உழவர் கூட்டம்
உரைக்கும் மொழி கேள்-இல்லையேல்
வறட்சி காணும் இந்த வளமான நாடு!

#உழவர்கூட்டம்
#FarmersProtest

நன்றிகள் பல,
முத்து

மேலும் சில பதிவுகள்