குழந்தை குறித்து

எனக்கு 30வயதாகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனது கணவரின் தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அவரது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவரால் குழந்தை பெற முடியாது என்று கூறிவிட்டார்.

அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா

//அவர்களின் மரபு வழி தோன்றலாக குழந்தை இருக்க வேண்டுமாம்// அது சரிதான். அதற்காக உங்கள் மரபுவழித் தோன்றலாக இருந்தாக வேண்டுமா!

///////////////

குடும்பத்தில் குழந்தை பெறும் அளவிற்கு வயதுடைய பெண்ணாக நான் இருப்பதால்

அவர்கள் பேச்சிற்கு மறுபேச்சு பேச மாட்டேன் என்று நினைப்பார்கள் போல.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது அவரது தம்பிக்கு எல்லா விஷயத்தையும் சொல்லி அவரை தயார்படுத்தி இருக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அவரும் ஆண்தானே.
கரும்பு தின்ன கூலி தேவையா.

எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
எனக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது என்பதால் ஜோதிடரின் மூலம் இவர்கள் பேசி வைத்து இதனை நடைமுறை படுத்த திட்டம் தீட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.

நான் கொழுந்தனுடன் பேசிப் பார்க்கட்டுமா.
இவ்வாறான விடயங்களால் நம் இருவருக்கும் இடையே திருமணம் மீறிய பந்தம் ஏற்படும்.அது ஒரு குழந்தையோடு நின்று விடப்போவதில்லை.

எனவே உங்களுக்கு என் மூலமாக குழந்தை வேண்டும் அவ்வளவுதானே.
என் கணவர் மூலமாக பெற்றுத் தருகிறேன்.பிறகு எக்காரணம் கொண்டும் குழந்தையை உரிமை கொண்டாட மாட்டேன் என்று கூறலாமா ?

//இப்போது இணங்கி குழந்தை பெற்றெடுத்தாலும் பிற்காலத்தில் அவருக்கு தேவைப்படும் நேரத்தில் என்னை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்க வாய்ப்புள்ளது.// புரிந்தால் சரி. இன்னொரு விஷயம், நீங்கள் சொல்வது நடக்காவிட்டாலும் கூட இப்போது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் கணவர் மனதில் இருக்கும். தன் மனைவி இன்னொருவருக்கு இணங்கி நடக்க உடன்படுவதை எந்தக் கணவர் பொறுப்பார் என்று நினைக்கிறீர்கள்!!! ' 'ஆம்' அல்லது 'பார்க்கலாம்' என்று சும்மா கூட சொல்லிவைக்காதீர்கள். உங்கள் மேல் அவருக்கு நம்பிக்கை, மரியாதை எல்லாமே போய்விடும். நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கூட இழக்க நேரலாம். மனிதர் - எப்போது எப்படி மாறுவோம் என்பது தெரியாது.

//கொழுந்தன் மனைவி ஒரு அப்பாவிப் பெண்.அவரது வாழ்க்கை சிதைந்து விடக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு பொறுமையாக இருந்தேன்.// :-) அப்படியானால் அந்தக் கூட்டத்துக்கு எதிராக உங்கள் சகலையோடு இணைந்து உருப்படியாக வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள்.

//என்னிடம் பேசி பேசியே brain wash செய்கிறார்கள்.// நம்ப முடியவில்லை கண்ணா. வெளிப்படையாகவே கேட்கிறேன். எப்படி கணவரல்லாத ஒருவருடன் சங்கடமில்லாமல் படுக்கையைப் பகிர்ந்துகொள்வீர்கள்! திரும்ப எப்படி உங்கள் கணவருடன்...!!! உங்களுக்கு இதில் தயக்கமே கிடையாதா! இதில் 'ப்ரெய்ன் வாஷ்' எங்கே வருகிறது! உண்மையில் நான் கொடுப்பதுதான் 'வாஷ்' :-) அழுக்கை நீக்கும் விஷயம்தானே washing! :-) [படிக்கிறவர்கள் என்னைத் திட்ட வேண்டாம். இந்தப் பெண்ணின் குடும்பத்தாரை விட இவர் மேல் எனக்கு அதிகம் கோபம் வருகிறது. ;-(( ]

//குழந்தை பெறும் அளவிற்கு வயதுடைய பெண்// சரியான ஹோர்மோன் செயற்கையாக பெண் உடலுக்குக் கிடைக்குமானால் கருப்பை கருவை வளர்க்கும் தொழிலை நிச்சயம் செய்யும். 'மெனோபோஸ்' கடந்த பெண்களும் குழந்தை பெற்றிருக்கிறார்கள். கருமுட்டை மட்டும் இன்னொரு பெண்ணிடம் இருந்து கிடைக்க வேண்டும். செயற்கையாகக் கருக்கட்ட வைக்க வேண்டும். மருத்துவர்கள் சொல்கிறபடி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் எடுத்து இணையத்தில் தேடிப் பாருங்கள். வீடியோக்கள் (ஆங்கிலத்தில்) கண்ணில் படும்.

//எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.// எனக்கும் உள்ளது. உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லையோ! அல்லது இது ஒரு முற்போக்கான விடயம், உங்களை மற்றவர்கள் போற்றுவார்கள் என்று நினைக்கிறீர்களோ என்பது என் சந்தேகம்.

// ஜோதிடரின் மூலம் இவர்கள் பேசி வைத்து இதனை நடைமுறை படுத்த திட்டம் தீட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.// ஆன்மீகம் வேறு கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு. யார் என்ன திட்டம் தீட்டினாலும், நீங்கள் உறுதியாக இருந்தால், ப்ரெய்ன் வாஷ், ஜோதிடம் எதுவும் உங்களை அசைக்க முடியாது. நீங்கள் திடமாக இல்லை. ஒன்று கேட்கிறேன். ஒரு வேளை, உங்களுக்குக் குழந்தை கிடைக்க முடியாத நிலை இருந்திருந்தால் உங்கள் கணவர் உங்கள் சகலையின் துணையோடு குழந்தை பெற்று உங்கள் கையில் கொடுத்தால் சந்தோஷமாக வளர்ப்பீர்களா? தொடர்ந்து அவரோடு சந்தோஷமாக படுக்கையைப் பகிர்ந்துகொள்வீர்களா? உங்கள் பெற்றோர் மனநிலை என்னவாக இருக்கும்?

உங்கள் தாய், தந்தை, சகோதரர்களோடு இதைப் பற்றி மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள். போனில் வேண்டாம். நேரில் போய் நேரம் எடுத்து உட்கார்ந்து பேசுங்கள். என் எழுத்தை விட அவர்களது வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் இருக்கும். அவர்களைத் தூரத்தில் வைக்க வேண்டாம். 'என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்,' என்று அவர்கள் சொன்னது - விரக்தியில் வந்த வார்த்தை; தங்கள் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடக் கூடாதே என்னும் கவலையில் வந்த வார்த்தை. நீங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கி வைத்தால் திரும்ப அவர்களிடம்தான் போய் ஆறுதல் கேட்க நேரும்.

‍- இமா க்றிஸ்

அதற்குள் இன்னொரு பதிவு போட்டிருக்கிறீர்கள். இப்போதுதான் கவனித்தேன்.

//கொழுந்தனுடன் பேசிப் பார்க்கட்டுமா.// அதெல்லாம் வேண்டாம். உறுதியாக, 'முடியாது' என்று சொல்லிவிடுங்கள்.

//என் கணவர் மூலமாக பெற்றுத் தருகிறேன்.பிறகு எக்காரணம் கொண்டும் குழந்தையை உரிமை கொண்டாட மாட்டேன் என்று கூறலாமா ?// இதை நீங்கள் மட்டும் சொல்ல முடியாது அல்லவா?

நீங்கள் பேச வேண்டியது உங்கள் கணவருடன் மட்டும்தான். அவர் உடன்பட்டால் உங்கள் குழந்தையை அவர்களுக்குக் கொடுக்கலாம். உங்களால் குழந்தையைப் பிரிந்து உறுதியாக இருக்க முடியுமா? பெற்ற பிறகு நீங்கள் மனம் மாறக் கூடாது. அந்தப் பெண்ணிற்கு ஏமாற்றம் கொடுக்கக் கூடாது. சட்டபடி எழுதி தத்துக் கொடுத்து விடுங்கள். இது பிரச்சினை குறைந்த வழி.

‍- இமா க்றிஸ்

நீங்கள் பேச வேண்டியது உங்கள் கணவருடன் மட்டும்தான். அவர் உடன்பட்டால் உங்கள் குழந்தையை அவர்களுக்குக் கொடுக்கலாம். உங்களால் குழந்தையைப் பிரிந்து உறுதியாக இருக்க முடியுமா? பெற்ற பிறகு நீங்கள் மனம் மாறக் கூடாது. அந்தப் பெண்ணிற்கு ஏமாற்றம் கொடுக்கக் கூடாது. சட்டபடி எழுதி தத்துக் கொடுத்து விடுங்கள். இது பிரச்சினை குறைந்த வழி.

///////////////////////

எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.அதனால் இன்னொரு குழந்தை வேண்டும் என்று தோன்றியதில்லை.
கணவரிடம் இருந்தும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.

அவர் இதற்கு முழு சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஒரு வேளை, உங்களுக்குக் குழந்தை கிடைக்க முடியாத நிலை இருந்திருந்தால் உங்கள் கணவர் உங்கள் சகலையின் துணையோடு குழந்தை பெற்று உங்கள் கையில் கொடுத்தால் சந்தோஷமாக வளர்ப்பீர்களா? தொடர்ந்து அவரோடு சந்தோஷமாக படுக்கையைப் பகிர்ந்துகொள்வீர்களா? உங்கள் பெற்றோர் மனநிலை என்னவாக இருக்கும்?

///////////////

நிச்சயமாக சம்மதித்திருக்க மாட்டேன்
பெற்றோர் என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்

இருதலை கொள்ளி எறும்பாய் நான்
ஒருபுறம் என்மீது அளவுகடந்த பாசம் காட்டிய புகுந்த வீட்டு உறவுகள்
மறுபுறம் எப்படியோ இருந்துக்கோ என்று கண்டு கொள்ளாத பெற்றோர்கள்.

நான் காதல் திருமணம் செய்தபோதும் என்னை ஆதரித்து மருமகளாக ஏற்றுக்கொண்டு மகளைப் போன்று நடத்திய என் மாமியார் மாமனாருக்கு என்னால் இப்போது உதவ ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் எனது மாமியார் மாமனாரை எதிர்த்து விட்டு என் பெற்றோர் வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் என்னை ஏற்கமாட்டார்கள்.

நான் இப்போது என்ன செய்ய வேண்டும்.
இதை மட்டும் கூறுங்கள் imma அக்கா

திருமதி இமா அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார். இதற்கு மேல் அவர் என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை.

ஒரு சென்சிட்டிவான விசயம் குறித்து நீங்கள் இங்கே பேசுகின்றீர்கள். உங்களது புகைப்படத்தினையும் தைரியமாக உங்கள் உறுப்பினர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றீர்கள். இதனால் உங்களுக்கு எதுவும் பிரச்சனை வராதா? உங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்புள்ளதே?

உங்களிடம் ஒரு விஷயம் பற்றி கேட்டிருந்தேன் அல்லவா
தற்போது அதற்கு அருமையான தீர்வு கிடைத்தது சகோதரி

மேலும் சில பதிவுகள்