இது கர்பத்திற்க்கான அறிகுறியா?

நான் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க.
என்னுடைய அந்தரங்க உறுப்பு உடல்உறவு செய்யும் சமயத்தில் மிகவும் வறண்டு , இறுக்கமாக உள்ளது. எனக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிவிட்டது. இது தான் முதல்முறை இப்படி ஆகிறது. நான் கர்ப்பம் தரிக்க மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதவிலக்கு வர இன்னும் 5 நாட்கள் உள்ளது. கடந்த இரண்டு வாரமாக மார்பகத்தில் பயங்கர அரிப்பு உள்ளது. நான் தேங்காய் எண்ணை தடவுகிறேன். அப்ப வரைக்கும் அரிக்கவில்லை . அடிவயிறு ஒருவித வலி தோன்றி மறைகிறது. குனிந்தால் , படுத்தால் , தும்மினால் ஒரு வித வலி அடிவயிற்றில் வலிக்கிறது.பால் போல் கட்டியாக பிசு பிசுவென்று வெள்ளைபடுதல் கொஞ்சம் வருகிறது. அரிப்போ , நாற்றாமோ இல்லை. மாதவிலக்கு வரும் சமயத்தில் எனக்கு இப்படி இருந்தது இல்லை. மார்பகம் தடித்து வலிக்கும். அவ்வளவு தான். தற்போது சாயங்காலம் ஆனாலே திடீரென்று குமட்டல் வருகிறது , ஆனால் உடனே சரி ஆகிறது. இது நான் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியா?
எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. இது மாதிரியான அறிகுறிகளால் யாராவது அனுபவபட்டு இருக்கிறீர்களா?

Thank you mam

மேலும் சில பதிவுகள்