குழந்தை தலையில் கட்டி போல உள்ளது..

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது... அவ தலைல அதாவது உட்சிக்கு பக்கத்துல ஒரு கட்டி மாறி இருக்கு... நான் அதை ஒரு பத்து நாட்கள் முன்னாடி தான் பாத்தன்.. அவளுக்கு முடி நிறைய இருக்கு அதனால எனக்கு தெியவில்லை.. அது எப்ப எப்டி வந்துசுனு தெரியல... நான் அதை முதல்ல பாக்கும் போது கீழ விழுந்து நான் தான் கவனிக்காம விட்டேன் nu நினைச்சன்... ஆன கீழ விழுந்தா உட்சி பக்கத்துல அடி பட வாய்ப்பு இல்லை.. நான் டாக்டர் கிட்ட போயி வந்தன் அவர் அதெல்லாம் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாரு...

ஆனால் நான் இது எதனால் வந்துசுன்னு கேக்க மறந்துடன்... அவர் இது ஒன்னும் இல்லனு சொன்னது அந்த டைம் நிம்மதியா இருந்துச்சு... ஆனா திடீர்னு ஒரு கட்டி சும்மா வராது.. இது என் வந்துச்சு எதனல இப்டி இருக்கு. சரி ஆகுமா .. இல்லை நான் வேற டாக்டர் பாக்கணுமா ... ஆனா நான் தொட்டால் அவளுக்கு வழி இல்லை... இத பத்தி எனக்கு பதில் சொல்லுங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு... எதாட்சு ஒன்னு வந்துட்டே இருக்கு .. please இத பத்தி தெரிஞ்சவங்க கண்டிப்பா பதில் சொல்லுங்க please....

பசுப்பால் பற்றி - உண்மையில் பசுப்பால், பசு தன் கன்றுக்காகச் சுரப்பது. மனிதக் குழந்தைக்கு அதை அப்படியே (கொதிக்க வைத்தாலும் கூட) கொடுப்பது பொருத்தமாக இராது. பசுப்பாலுக்கு குறிபிட்ட அளவு நீர் சேர்க்க வேண்டும். இதைப் பற்றி உங்கள் குழந்தையைப் பார்க்கும் மருத்துவரிடம் விசாரியுங்கள். இன்னும் பசுப்பால்தான் கொடுக்கிறீர்களா? பசுப்பாலை விட 'ஃபார்முலா' நல்லது. அது மனிதக் குழந்தைகளுக்காகத் தயாராவது. கிருமி தொற்றும் சாத்தியங்கள் முன்னதை விட இதில் குறைவு.

//எடை கூடாமல்// நிச்சயம் பிறந்ததிலிருந்து இன்று வரை எடை சிறிதாவது அதிகரித்திக்கும் இல்லையா? அல்லாவிட்டால் உங்கள் மருத்துவரே உங்களிடம் பேசியிருப்பார். குழந்தையின் வயதுக்கு ஏற்ப கொடுக்கும் உணவையும் அதிகரிக்க வேண்டும். ஃபார்முலா கொடுப்பீர்களானால், வரும் கொள்கலனிலேயே அளவுகள் பற்றிய விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதைப் பற்றியும் மருத்துவரிடம் போகிற போது விசாரித்துக்கொள்ளுங்கள்.

//பால் கொடுக்கும் போது சரியான முறையில் தலையை பிடிக்காததால் அவன் தலை நீண்டுவிட்டது.// இது பெரிய அள்வு வித்தியாசமாகவோ நிரந்தரமானதாகவோ இராது கண்ணா. இப்போது ஒழுங்காகப் பிடிக்கிறீர்கள் அல்லவாமல்லாவிட்டாலும் கூட தானாகச் சரியாகும். பாலூட்டும் போது உங்கள் மனது அமைதியாக சந்தோஷமாக இருப்பது பால்சுரப்புக்கு நல்லது. அதிகம் யோசிக்க வேண்டாம். இன்னொரு விடயம் - குழந்தைக்குத் தலையணை வேண்டியது இல்லை. தலையணை கழுத்தைத் திருப்பிப் படுக்கும் வசதி இல்லாமல் செய்யும்.

இது உங்கள் முதல் குழந்தை என்று நினைக்கிறேன். நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் வரவேதான் செய்யும். பயமாக இருக்கும் போது உங்களுக்குள் போட்டுக் குழப்பிக்கொள்வதை விட விபரம் புரிந்த யாரிடமாவது கேட்டுத் தெளிந்துகொள்வது நல்லது. அவர் மருத்துவம் தொடர்பான ஒருவராக இருந்தால் இன்னும் நல்லது. உங்கள் சந்தேகங்களையெல்லாம் ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரைச் சந்திக்கச் செல்லும் போது எடுத்துப் போனால் மறக்காமல் எல்லாவற்றையும் விசாரிக்க வசதியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்