குழந்தைக்கு தடுப்பூசி கட்டி உதவவும்

என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. அவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் ஐஸ் வைத்து தடவிய பிறகும் கட்டியாக மாறி விட்டது. டாக்டர் ஒரு கிரீம் எழுதி தந்தார். அதை போட்டும் சரி ஆக வில்லை. அதில் பரு மாதிரி இருக்கிறது. என்ன செய்யவென்று தெரியல தயவு செய்து தெரிந்தவர்கள் உதவவும்

,indha maruthuva kuripu enadhu 4 Madha kuzhandhaiku ugandhatha? Avanukum 2 1/2 maadha thadupusi pottu indrodu 1 madham agirathu. Nellikai alavil katti ulladhu. Maruthuvaridam kanbithal cream poda sonnargal. Anal kuraindha badillai.

ஊசி போட்ட மருத்துவரிடம் மீண்டும் காண்பிக்கவும். சுய மருத்துவம் வேண்டாம்

குழந்தைக்கு சளி பிடித்துள்ளது ஹாஸ்பிட்டலில் மூன்று நாளைக்கு ஆறு ஊசி போட சொல்கிறார்கள்.என் குழந்தைக்கு ஒன்றரை ஆண்டின் ஊசி போன புதன் கிழமை தான் போட்டேன் மூன்று ஊசி இத்தனை ஊசி போட்டால் என் பிள்ளை எப்டி தாங்குவான்...தனியார் மருத்துவமனையில் ஆறு ஊசி போட சொன்னார்கள் நான் இன்று இரண்டு போட்டு விட்டேன்...எனக்கு மருத்துவமனை செல்லவே விருப்பம் இல்லை...சளிக்கு இப்படி ஊசி போட்டுள்ளீர்களா ...நான் இரண்டு போட்டு விட்டு நிறுத்தினால் தவறா

Jaisripriya

முதலில்... அவசியம் என்றால், பிள்ளை தாங்குவானா இல்லையா, உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதை யோசிக்கவே கூடாது. பிள்ளைக்கு சுகம் வர வேண்டுமா அல்லது அவன் கஷ்டப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும்.

'தனியார் மருத்துவமனைக்கு' ஏன் போனீர்கள்? குழந்தைக்கு விரைவில் சுகமாக வேண்டும் என்பதனால் தானே! 'அது ஏழு நாட்களில் தானாகச் சுகமாகும்,' என்று அங்கு சொல்லி அனுப்பியிருந்தால் உங்களுக்கு சிகிச்சையில் திருப்தி இராது. அவர்கள் சுகம் வரக் கூடியதால ஏதாவது செய்தேதான் ஆக வேண்டும் இல்லையா?

'சளிக்கு' என்று நீங்கள் சொன்னாலும் மருத்துவர்கள் வேறு விடயங்களையும் அவதானித்திருக்கலாம். தொற்று எந்த அளவில் இருக்கிறது என்பது அவர்களுக்குப் புரியும். சளியின் நிறம், மணம், காது, தொண்டை என்று எல்லாவற்றையும் கவனித்துத்தான் மருந்து கொடுக்க வேண்டும்.

//இரண்டு போட்டு விட்டு நிறுத்தினால் தவறா// சொல்லத் தெரியவில்லை. ஆனால் எந்த மருத்துவமானாலும் இத்தனை நாளுக்கு என்றுதான் கொடுப்பார்கள். அதை அரைகுறையாக நிறுத்துவதனால் எந்தப் பிரச்சினையும் புதிதாக வராது. ஆனால் ஏற்கனவே கொடுத்த ஊசிகள் (உங்கள் கருத்துப்படி குழந்தையைக் கஷ்டப்படுத்தியது) பயனே இல்லாமல் போகும். தொற்று இருப்பது உண்மை என்றால், சிகிச்சை இல்லாமல் போக, தொடர்ந்து குழந்தையின் சிரமங்கள் அதிகரிக்கலாம்.

நான் மருத்துவர் இல்லை. இந்தியாவில் சிகிச்சைகள் எப்படி என்னும் அறிவும் கிடையாது. அதனால் சரி, பிழை சொல்லத் தெரியவில்லை. நீங்கள் காட்டிய மருத்துவமனையின் நம்பகத்தன்மை பற்றி அதே ஊரில் இருக்கும் உங்களுக்கு சரியாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். தெரியாவிட்டால் உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள். அங்கு சிகிச்சையைத் தொடர்வதில்லை என்று முடிவு செய்தால், இன்னொரு மருத்துவரிடம் காட்டுங்கள்.

இது கொரோனா காலம். சுவாசத்தொகுதியில் எங்கு சிரமம் ஏற்பட்டாலும் உடனுக்குடன் கவனித்தாக வேண்டும். வயது, இரண்டு ஊசி எடுத்தவர்கள் என்கிற பாரபட்சம் அதற்கு இல்லை. பயமுறுத்தவில்லை, எச்சரிக்கையாக இருங்கள் சகோதரி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்