அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் என் மகளுக்கு 12வது மாதம் ஆரம்பமாகியுள்ளது இரவில் இட்லி அல்லது பால் சாதம் போன்ற திட உணவு தான் கொடுத்து தூங்க வைக்கிறேன் ஆனாலும் அவள் சரியாக தூங்குவது இல்லை அடிக்கடி எழுந்துவிடுகிறாள். இதற்கு என்ன செய்வது வேறு உணவு கொடுக்கவா இடையில் ஒரு 2 மணி நேரத்திற்க்குள் எழும்பொழுது பால் கொடுதாலும் குடிப்பதில்லை அதனால் பசி அல்ல என நினைக்கிறேன் பதில் சொல்லுங்கள் தோழிகளே
ஸ்வாதி
பாப்பாக்கு உச்சா வருதா? வீட்ல A/C ஓடுதா?Fan அடில படுக்க வைக்கறீங்களா? தொண்டை உணர்ந்தால் தூக்கம் போகும். சிறிது வெதுவெதுப்பாக வென்னீர்/சுடுநீர் கொடுத்து பாருங்க.நைட் சாப்பிட்டு விளையாடவிடுங்க.
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
குழந்தையிடம் தூங்கும் முன்
குழந்தையிடம் தூங்கும் முன் பேசுங்கள். தங்கம் இன்றைக்கு நிம்மதியாக தூங்கு அம்மா இருக்கேன். கண்டிப்பா கேட்பாங்க
எல்லாம் நன்மைக்கே
இந்துஷாவுக்கு
இப்போதுதான் கண்ணில் பட்டது. தலைப்போடு தொடர்பில்லாத விடயம்தான், இருந்தாலும் பதில் சொல்கிறேன். :)
//இலங்கை தமிழர் என்று நிறைய பதிவை பார்த்து அறிந்து கொண்டேன்.// இந்தியத் தமிழும் நன்றாக எழுத வரும்; பேசும் போது தான் சகிக்காது. ;)
//ஆனால்// அது என்ன 'ஆனால்'!! :) தமிழருக்குத் தமிழும் சிங்களவருக்கு சிங்களமும் எழுத வராவிட்டால்தால் வெட்கம். (ஒரு ரகசியம் சொல்லட்டுமா! எனக்கு சிறு வயது முதலே ழ,ள வேறுபாடு தெரியாது. ;(
//இலங்கையில் தமிழில் பாடம் கற்பிப்பார்களா?// நான் முற்றுமுழுவதாக தமிழ்மொழி மூலம்தான் படித்தேன்.
என் முதலாவது தமிழ் ஆசிரியை என் தாயார்தான். (என் ஆங்கில, சிங்கள மொழி அறிவு கூட பெரும்பாலும் என் தாயிடமிருந்து வந்ததே.) போனால், நின்றால், நடந்தால்... பொருத்தமாக ஏதாவது கற்பிப்பார்... தவமாய்த் தவமிருந்து படத்தில் வரும் அப்பா போல. :) அவரது கடைசி நாள் வரை (நீங்கள் கேள்வியைப் பதிவிட்ட ஒரு வாரம் கழியும் வரை) என் தமிழ் அவரில்தான் தங்கியிருந்தது. இப்போது சந்தேகங்கள் வருகையில்... 'ஆள் இல்லை,' என்கிற உண்மை பயங்கரமாக மனதை உறுத்துகிறது. ;(
பாடசாலையில் அம்மாவைத் தொடர்ந்து ஆர்வமூட்டும் நல்ல ஆசிரியைகள் அமைந்தார்கள். அவர்களில் ஒருவர் பிற்காலத்தில் என் மாமியாராகவும் அமைந்தார். எனக்குக் கிடைத்த இன்னொரு தமிழ் ஆசிரியை... மறைந்த இலங்கை எழுத்தாளர் திருமதி ந. பாலேஸ்வரி அவர்கள். எழுத ஆரம்பித்து விட்டேன். குறையாக விட முடியாது. :) திருமதி. அக்னஸ் சிவராஜா, மனோகரி டீச்சர், செல்வி. சபாநாயகம், திருமதி. எட்வீசம்மா அன்டனி ஆகியோர் என்னைக் கற்பித்த அருமையான ஆசான்கள்.
ஆசிரியராக இருப்பதால் அடிக்கடி தோன்றும் ஒரு விடயம்... 'குதிரைக்குத் தண்ணீர் காட்டலாம்; அதுதான் குடிக்க வேண்டும்,' என்பது. நான் தண்ணீர் குறைவாகக் 'குடித்த' குதிரை. :)
எங்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி தினமும் ஒரு 40 நிமிடப் பாடவேளை இருக்கும். ஆறாம் வகுப்பிற்கு மேல் அதிபரிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் என் போல் சிலர் தான் அதைப் பின்பற்றினோம்.
//உங்கள் தமிழ் வாங்கியம் மிகவும் தூய தமிழாகவும் அழகாகவும் உள்ளது.// பேச்சுவழக்கில் தான் இங்கு அதிகம் பதில் சொல்கிறேன். படிக்கிறவர்களுக்கும் புரிய வேண்டும் அல்லவா! அதனால் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுகையில் முடிந்தவரை இந்தியர்கள் உச்சரிப்பது போல எழுதுகிறேன்.
இப்போது ஆங்கில வார்த்தைகளைத் தமிழ் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். சோப்பும் பேப்பரும் தமிழாகிப் போனது. ஆனால்... மம்மி என்று கூப்பிடுபவர்களைக் கிண்டலடிப்போம். :) நான் மம்மி, டடா என்று தான் கூப்பிடுவேன். ஆனாலும் என் தமிழ் நன்றாகவே இருக்கிறது என்று சொல்கிறீர்கள். :) //உங்கள் பதிவை பார்த்து நிறைய தமிழ் வார்த்தை அறிந்து கொண்டேன்.// ;) தமிழுக்கு என்னால் முடிந்த சிறு உதவி. பாராட்டுக்கு நன்றி இந்துஷா. சந்தோஷம். நீங்களும் அழகு தமிழில் பதிவிடுகிறீர்கள். என் அன்பு வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
இமா அவர்களுக்கு
எனக்கு தெளிவாக விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி..நான் ஆங்கில வழியில் கல்வி பயின்றேன்.. ஆனால் எனக்கு பிடித்தமான பாடம் தமிழ் தான்..
என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை எடுத்த தமிழாசிரியை எனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியை..
அதனால் ஆர்வத்துடன் தமிழ் படித்தேன்..
இன்னும் என் ஆசிரியை கற்று கொடுத்த இலக்கணம் நியாபகம் இருக்கிறது.
கல்லூரியில் தான் தமிழ் பாடம் முற்றிலும் இல்லை..
ஆனால் அறுசுவையில் தமிழில் எழுதுவது நன்றாக உள்ளது..
மீண்டும் ஒருமுறை நன்றி உங்களுக்கு..
இரவில் குழந்தை சரியாக தூங்குவதில்லை
என் குழந்தைக்கு 3 ஆம் மாதம் நடக்கிறது. அவள் ஒரு வாரமாக இரவு நேரங்களில் தூங்குவதற்கு சிரமபடுகிறாள். பகலில் நன்றாக தூங்குகிறாள். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?