நீண்ட வருஷங்களுக்கு பிறகு.....

வணக்கமஂ மக்களே ரொம்ப​ நாள் கழிச்சு வந்திருக்கிறேனஂ. அனைவரும் நலமா?

வணக்கம். :-) நான் நலம்.
உங்கள் வருகை சந்தோஷம் தருகிறது. இடைக்கிடையே வந்து எட்டிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

நானும் ரொம்ப நாள் கழித்து வருகிரென். எல்லோரும் நல்லா இருக்கிங்களா?

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஹாய் தோழிகளே வணக்கம். பழைய தோழிகளை காணவில்லையே.

வணக்கம் சக்தி. நான் இருக்கிறேன். ப்ரேமாவுக்குப் போட்ட பதிலுக்குப் பதில் கிடைக்கவில்லை. வேறு இரு இடங்களிலும் இதே போல்வேறு இருவர் விசாரிப்பு கண்டு பதில் எழுதினேன். விசாரிக்கிறவர்கள் திரும்ப என் பதிலைப் படித்தார்களா என்பதே தெரியவில்லை. :-)பிறகு வந்த பதிவுகளை படித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

நான் தினமும் இங்கு வருகிறேன் சக்தி. மன்றத்தில் உள்ள இழைகளில் என்னால் பதில் சொல்லி உதவ முடிகிற மாதிரியான கேள்விகள் கண்ணில் பட்டால் பதில் சொல்லிவிட்டுத்தான் போகிறேன்.

‍- இமா க்றிஸ்

Eppadi irukinga imma amma.. Prema sis eppadi irukkinga.. Nanum romba naal kazhitthu than vanthu irukken.. Romba happy ha iruku ungala thirumbavum parthathula..

I love my parents...

வணக்கம். எனக்கும் உங்களை மீண்டும் இங்கு கண்டது மகிழ்ச்சிதான். நான் நலம். ப்ரேமாவும் நலம். இப்போதான் பேசினேன். அவங்க வருவாங்க. :-)

தொடர்ந்து எதையாவது செய்து வரப் பாருங்கள். :-)

அரட்டை அரங்கமல்லாத ஒரு இழை இது. இருந்தாலும் நாம் பேசுவதை அட்மின் பொருட்படுத்த மாட்டார் என நம்புகிறேன். :-)

‍- இமா க்றிஸ்

தாமதமான பதிலுக்கு சாரி. என் குழந்தைக்கு 6 வயது முடிய போகிறது. அவ class 1 cbse படிக்கிறாள். வீட்டில் நன்றாக படிக்கிறாள். ஆனால் வகுப்பில் ஆசிரியரிடம் எதுவும் சொல்வதில்லை. எழுதவும் மாட்டாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையிடம் எவ்வளவோ எடுத்து கூறி விட்டேன். ஒரு நாள் போய் எழுதுகிறார். மறுநாள் எழுத மாட்டாள். மிகவும் மன உளைச்சலாக உள்ளது.

ஆறு வயது என்றால் வற்புறுத்த வேண்டாமே! வீட்டில் நன்றாகப் படிக்கிறார் என்கிறீர்கள். விட்டுவிடுங்கள். அவர் நன்றாக வருவார்.

‍- இமா க்றிஸ்

ஸ்கூல் மேம் ரொம்ப கம்ப்ளைன்ட் பண்றாங்க. முதல்ல பயந்து டெஸ்க் கீழே குழந்தை உட்கார்ந்து இருக்கும்னு சொன்னாங்க. நான் அப்படி இருக்க கூடாதுன்னு கண்டிச்சேன். இப்ப க்ளாஸ் வெளியே ஓடுவது. மற்ற குழந்தை கிட்ட கிளாஸ் நடக்கும் போது பேசுவது விளையாடுவது போன்ற கம்ப்ளைன்ட் வருகிறது. க்ளாஸ் டெஸ்ட் பேப்பர்ல ஆன்சர் தெரிந்தும் எழுத வில்லை.ஏன்னு கேட்டா அவளுக்கு பிடிச்ச மேம் வரலன்னு சொல்றா. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஸ்கூல் சேர்த்து இந்த ஒன்றரை மாதமும் ஒரே கவலை.

எழுத்துப் பிழை ஒன்று கவனத்திற்கு வந்தது. எடிட் செய்தேன். அதனால் கமண்ட் மேலே வந்திருக்கிறது. :-)
~~~~

உங்க கவலை உங்களுக்கு, ஆசிரியர் கவலை ஆசிரியருக்கு. குழந்தை பாவம் உங்க இருவர் இடைலயும் மாட்டிட்டு சிரமப்படுறார். :-)

டீச்சரைப் பார்த்து பயந்து மேசைக்குக் கீழே ஒளிக்கும் 6 வயசுக் குழந்தையை நீங்க கண்டிக்கிறீங்க! டீச்சரை இல்லையா கண்டிக்கணும்! அவங்க சரியா இருந்தா குழந்தை எதுக்கு பயப்படப் போகுது! நீங்க ஆசிரியை சொன்னதா சொன்ன கம்ப்ளைன்ட் எல்லாம் குழந்தைகளின் இயல்பு. இதையெல்லாம் குற்றமாகச் சொல்லக் கூடாது. //அவளுக்கு பிடிச்ச மேம் வரலன்னு சொல்றா// :-) உண்மையைச் சொல்லும் குழந்தை! ஸ்கூல்ல சேர்ந்த ஒன்றரை மாதத்தில் 6 வயசுக் குழந்தைக்கு டெஸ்ட் வைச்சா இதெல்லாம் எதிர்நோக்கத்தான் வேண்டும். எனக்கென்னவோ குழந்தை ஒழுங்காக இருக்கிற மாதிரித்தான் தெரியுது. நீங்க கவலைப்படுறதால ஆகப் போறது எதுவும் இல்லை. குழந்தையை மாற்ற நினைத்து ஏதாவது சொல்லப் போய் அடம் பிடிக்க ஆரம்பிக்கப் போகிறார். அவருக்குத் தோன்றும் போது படிப்பார். யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்