நீண்ட வருஷங்களுக்கு பிறகு.....

வணக்கமஂ மக்களே ரொம்ப​ நாள் கழிச்சு வந்திருக்கிறேனஂ. அனைவரும் நலமா?

நீங்க சொல்வது போலவே தான் என் கணவர் கூறுகிறார். அவர் வெளிநாட்டில் இருக்கிறார். நான் இங்கு என் இரு குழந்தை களையும்(இரண்டாவது குழந்தைக்கு 2வயது)கவனித்து கொள்கிறேன். குழந்தை முன் மாதிரி இல்லை. இப்ப ரொம்ப அடம் பிடிக்கிறாள். சின்ன விஷயத்திற்கெல்லாம் சத்தம் போட்டு அழுகிறாள். பொய் சொல்லவே தெரியாதவள் இப்ப பொய் சொல்கிறாள்.ஸ்கூலில் எழுதாமல் வீட்டிற்கு வந்து எழுதிட்டேன். மேம் கை கட்டுனாங்க. குட் சொன்னாங்கன்னு சொல்றா. மேம் என்னை சாப்பிட கூடாதுன்னு சொன்னாங்க நான்பட்டினியா இருந்தேன். சாப்பிடவே இல்லைன்னு சொல்றா. இதுதான் என்னால் தாங்க முடியல. இப்ப இரண்டு நாளாக நான் குழந்தையிடம் எதுவும் சொல்வதில்லை. அவளுக்கு பிடிச்ச மாதிரி விளையாட்டு ,பாடம் படிப்பது அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஜாலியா படிப்பா. ஸ்பெல்லிங்ளாம் மறக்கமாட்டா. பாட்டு,டான்ஸ் என்று போய் கொண்டு இருக்கிறது. நீங்கள் கூறுவது போல் இனியும் குழந்தையை கண்டிக்காமல் தப்பை மெதுவாக சொல்லி புரியவைக்க வேண்டும். நான் செய்வது தப்பா சரியா என்று புரியவில்லை.மற்றவர்களின் ஆலோசனை தேவைப்பட்டது.பதில் கூறியதற்கு நன்றி மேடம்.

இங்கு நிறைய தோழிகளை காண முடிவதில்லையே. Vaany, Vani vasu,thalika, poongothai Amma .எங்கே போனார்கள். அவங்க எல்லாம் இருக்கும் போது ரொம்ப ஜாலியா போகும். இப்ப யாருமே இல்லை. என்னுடைய சந்தேகத்திற்கு நீங்க தான் எப்பவும் பதில் சொல்வீங்க. 7வருடத்திற்கு முன்பு எனக்கு அபார்சன் ஆகி அதன்பின்பு குழந்தை தங்க வில்லை என்று கவலை பட்டு இங்கு பல சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டேன்.நீங்கள் தான் பதில் தந்திங்க மேடம். இப்பவும் பதில் அளித்தற்கு நன்றி.

//குழந்தை முன் மாதிரி இல்லை.// ஸ்கூலுக்குப் போவதால் வந்த மாற்றம். எல்லாக் குழந்தைகளிடமும் ஏதோ ஒரு மாற்றம் தெரியத்தான் செய்யும். அடம், அழுவது எல்லாம் மற்றக் குழந்தைஅகளைப் பார்த்து வருவதாக இருக்கலாம், அல்லது ஸ்ட்ரெஸ்ஸின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
//இப்ப பொய் சொல்கிறாள்.// :-) அவங்க பொய் சொல்லவில்லை கண்ணா. குழந்தைக்கு உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு தெரியாது. தனக்கு எது நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாரோ அதை நடந்ததாகப் பாவித்து உங்களிடம் திரும்பச் சொல்கிறார். சாப்பாடு - அவருக்குப் பிடித்ததாகக் கொடுத்து அனுப்புங்க. அப்படியும் சாப்பிடாவிட்டால் ஒன்றில் ஏற்கனவே வயிறு நிறைந்திருக்கிறது, அல்லது உடல் நலமில்லை. கொஞ்சம் கவனித்தால் போதும்.

//தப்பை மெதுவாக சொல்லி புரியவைக்க வேண்டும்.// இதுதான் கஷ்டமான விஷயம். :-) எமக்குத் தப்பாகத் தெரிபவை குழந்தைக்கு சரியாகத் தெரியலாம். கவனமாகக் கையாள வேண்டும்.

//நான் செய்வது தப்பா சரியா என்று புரியவில்லை.// நீங்களாக மனதுக்குள் கவலைப்பட்டுக் கொண்டு இராமல் இங்கு கேட்டது எப்படித் தப்பாகும்! :-) எல்லாம் விரைவில் சரியாகும். சந்தோஷமா இருங்க. இப்போ ஸ்கூலுக்குப் போவட்ர்ஹால் குழந்தை உங்களோடு செலவளிக்கும் நேரம் குறைந்திருக்கும். கிடைக்கிற நேரத்தை குழந்தைகளோடு சந்தோஷமாகக் கழிக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

:-) பூங்கோதையைப் பற்றித் தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எல்லாரும் பிஸியாகி இருப்பாங்க. நான்தான் வேலைவெட்டி இல்லாமல் இங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறேன் போல!! :-)

என்னால் உங்களுக்கு உதவ முடிந்ததையிட்டு மகிழ்ச்சி கண்ணா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்