வாழ்க்கை

ஹலோ தோழிகளே

எனக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு பையன் 7 வயது. எனக்கும் என் கணவருக்கும் ஒரே வயது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். என் கணவருக்கு உடலுறவில் நாட்டம் அதிகம் ஆரம்பத்தில் இருந்தே என்னை அந்த விஷயத்தில் மிகவும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். நானும் பையன் பிறக்கும் வரை பொறுமையாக இருந்தேன். இரவில் மட்டும் தான் நான் அவர் மனைவி (இப்படி சொல்ல எனக்கு மனம் வரவில்லை) இரவில் நான் அவருக்கு விபச்சாரி பகலில் வேலைக்காரி, பகலில் நான் யாரோ அவர் யாரோ. எப்பொழுது போனும் கையுமாக தான் இருப்பார். என் மகன் மீது துளியும் பாசம் இல்லை இன்று வரை அவனிடம் விளையாடியதில்லை அவனை கொஞ்சியதில்லை நான் அவனிடம் பாசமாக இருப்பதால் என்னிடம் தான் அதிகம் இருப்பான் வெளியில் சென்றாலும் போனை தூக்கி கொண்டு ஒரு இடத்த்தில் உக்காந்து விடுவார் நானும் என் பையனும் மட்டும் தான் விளையாடுவோம். வீட்டில் இருந்தால் போன் அல்லது தூக்கம் இது மட்டும் தான் அவர் வாழ்க்கை இது எனக்கு பழகவில்லை வெறுத்து விட்டது அவர் அவரின் தோழியுடன் தொடர்பில் உள்ளார் அவளுக்கு 2 பையன்கள் கேட்டதற்கு நீ எனக்கு எந்த சுகமும் தரவில்லை அதனால் தான் அவளுடன் செல்கிறேன் என்கிறார் படத்தில் நாடகங்களில் வருவது போல் காலையில் குளித்த தலையுடன் வீட்டு வேலைகளை முடித்து வந்து டீ தர சொல்கிறார் நான் ஊட்டியில் உள்ளேன் இங்கு அப்படி செய்தல் குளிரில் இறக்க தான் வேண்டும் அதற்காக நான் இரவே பாத்திரம் கழுவி வீட்டை சுத்தம் செய்து விடுவேன் அதிலும் அவர் திருப்த்தி அடையவில்லை. விடுமுறை நாட்களில் நானும் என் பையனும் விளையாடுவோம் அதுக்கூட அவருக்கு பிடிப்பதில்லை என்னையும் அவனையும் எப்பொழுதும் திட்டி கொண்டே தான் இருப்பார் எனக்கு அப்பா அம்மா இல்லை. அண்ணன் மட்டும் தான் அவனிடம் சென்று எப்போதும் என்னை பற்றி குற்றம் சொல்லி கொண்டே இருப்பார் என்னிடம் என் அண்ணனை பற்றி தப்பு தப்பாக சொல்கிறார். அவனிடம் என்னை பற்றி தப்பு தப்பாக சொல்கிறார் அவருடைய அம்மா அப்பா ஏதும் கேட்பதில்லை அவர் அப்பாவிடம் சென்று எண்னை வைத்து கொண்டே இவளை நான் தொட்டு 2 வருடம் ஆகிறது என்கிறார் என் மாமனாரும் ஒரு பையன் இப்படி இருப்பது கஷ்டம் என்று அட்வைஸ் செய்கிறார் எனக்கு அவமானமாக உள்ளது அவர் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது அவர்களுக்கு தெரியும் ஆனாலும் அவரை கண்டிக்க வில்லை அவருக்கு 1 அக்கா 2 தங்கைகள் இருவருக்கு திருமண ஆகி விட்டது அவருடைய கணவர்கள் என்னிடம் நன்றாக தான் பேசி கொண்டிருந்தார்கள் இவர் என்னை பற்றி எல்லோரிடமும் தப்பு தப்பாக சொல்லி என்னை யாரும் மதிப்பதில்லை என் மாமனார் தவிர அந்த வீட்டில் யாரும் என்னிடம் பேசுவதில்லை நாங்கள் திருமண ஆன முதல் தனியாக தான் இருக்கிறோம் கொரோனா காலத்தில் தான் அங்கே போய் இருந்தேன் ஒரு 3 மாதம் இருந்ததற்க்கே என்னை எல்லோரும் ஒரு புழு பூச்சி போல் தான் நடத்தினார்கள் இதில் அங்கேயே சென்று விடலாம் என்று சண்டை வேறு. நான் என் கணவரிடம் என்னால் இப்படி உனக்கு இரவுக்கு மட்டும் மனைவியாக வாழ முடியாது என்று கூறி விட்டேன் ஆனாலும் விடாமல் என்னை தொல்லை செய்கிறார் உடலுறவில் இருந்த போது கூட என்னை மிகவும் காயப்படுத்தினார் அதனால் தான் எனக்கு வெறுத்து விட்டது இதை அவரிடம் சொல்லியும் விட்டேன் அவருக்கு தினமும் முதலிரவு நடக்க வேண்டும் அதற்க்கு எனக்கு விருப்பமில்லை இதற்ற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை என் ஆதங்கத்தை எந்த எழுத்து மூலம் கொட்ட வேண்டும் என்று தோன்றியது அதான் இந்த பதிவு ஏதாவது தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்

**

தளிர்

நான் இங்கு உங்களுக்கு கருத்து தெரிவிப்பது சரியா என்று தெரியவில்லை

இருப்பினும் சொல்கிறேன்

நீங்கள் உங்கள் கணவரை இரவில் திருப்திப்படுத்த முடியும் தானே

தாரளமாக அவரை சந்தோசப்படுத்துங்கள்

நீங்கள் கொடுத்தால் ஏன் அவருக்கு வேறு பெண் தேவைப்பட போகிறது ?

நீங்கள் 2015 முதல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது

அதனை எளிதாக சமாளிக்க முடியும்

மேலும் சில பதிவுகள்