சான்விச் ரெசிபீஸ்

தோழிகளே எனக்கு சான்விச் ரெசிபீஸ் நிறைய வேண்டும்..சேர்ச்ச் பன்னி பார்த்தால் உப்பு சப்பில்லாத சேன்ட்விசெஸ் தான் கிடைக்கிறது....நம் தளத்தில் சான்ட்விச் குறிப்புகள் அதிகம் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்...குறைந்தது 20 குறிப்பு இருந்தால் தான் தனிப்பிரிவாக அறுசுவையில் அதாஇ சேர்க்க முடியும்...நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்?நான் மட்டும் தான் sandwiches தேடுகிறேனா இல்ல நீங்களுமா?
தெரிந்த சான்ட்விச் குறிப்புகளை இங்கு தந்துதவுங்களேன்.
என் கனவருக்கு ஆஃபிசுக்கு கொடுத்தனுப்ப தான் தேடுகிறேன்..அங்கு இந்தியன் உணவு கொன்டு போக முடியாது மசாலா வாடை வந்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்...சேன்ட்விச்சாக இருந்தால் கைய்யை நாசப்படுத்தாமல் சுலபமாக சாப்பிடவும் செய்யலாம்.ப்ட்ரெட் மட்டுமல்லாமல் ,ரொட்டி,பரோட்டாவில் செய்யும் சான்ட்விச்களையும் தந்துதவுங்கள்

இவருக்கு சான்விஜ் ரொம்ப பிடிக்கும் எனக்கு உவ்வேதான்..நானும் பதிவு போட்டுகறேன் பதில் வரும் அப்பதான் எனக்கும் தெரிய வரும் ஹி ஹி

சைட் பிட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா !!!தாளிகா மேடம் !!நானும் அதைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க கேட்டுட்டீங்க.

வாழை பழத்தை ரொட்டி / சப்பாதியில் சுருட்டி குடுக்கலம். வாழை பழம் விடமின் அதிகம் உள்ள உணவு.

கலிபோர்னியா ர்ராஃப்
தளி!! இது நான் நியூயார் சென்றால் எப்போது சாப்பிடும் ஒரு வெஜிடேரியன் சாப்பாடு. என்ன இருக்குன்னு சொல்றேன் இப்ப.. என்னிடம் ர்ராஃப் ரொட்டி இல்லை. இதில் ரெட் குடமிளகாய், அவகாடோ,அல்பலா ஸ்ப்ரவுட்ஸ் ( Alfalfa sprouts ),பச்சை லெட்டூஸ், சிவப்பு ஆனியன். அடுத்த வாரம் செல்லும் போது ஆராய்ச்சி செய்து வர்ரேன்.. இன்னும்மொன்று ஃபப்பல்லோ ( Buffallo) சிக்கன் ர்ராஃப். இப்ப்பதிக்கு உங்களுக்கு ஐடியா மட்டும் செய்தால் சொல்கிறேன். இங்க என் பேவரிட் பலாபல் கடையில் ஷவர்மா சேன்விச்

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நீங்கதான் நிறைய சாண்ட்விச் பண்ணுவீங்க வந்து குடுங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சில ஸாண்ட்விச் வகைகளை என் பிரிவில் உங்களுக்காக எழுதியுள்ளேன். செய்து பாருங்கள்.

Dear Thalika, I make Tuna sandwich for my husband. If you like tuna fish I will send you my recipe.

Vany

தாளிகா தினமும் நானும் சாண்ட்விச் பெக்பண்ன மண்டையே பிச்சுக்குவேன்....நானும் புதுசு புதுசா டரை பன்னுவேன்... சிலநாள் சொதப்பிடும்...

ரொம்ப நன்றி மனோ மேடம்... :-)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

உங்களுக்காக இரண்டு வெரைட்டி சாண்ட்விச் அட்மினுக்கு அனுப்பி இருக்கிரேன்,
நாளை நீங்க பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.தொடர்புக்கு என்பதில் டைப் செய்து அனுப்பினேன்.புதுசாக இப்பதான் அனுப்ப ஆரம்பித்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு மர்ழியா
சான்ட்விச்சில் உவ்வே சான்ட்விச்சும் உண்டு சூப்பர் சான்ட்விச்சும் உண்டு.என்க்கும் ரொம்ப இஷ்டம் சான்ட்விச்
அதுக்கு கீழ யரோ பதிவு போட்டிருக்காங்க தெரிய மாட்டேஙுது
ரஹ்மத் அது கூட நல்ல ஐடியாவா இருக்கே.என் ஹஸ் சொல்ரார் அப்படின்னா வாழைப்ப்பழத்தை ரெண்டா ஸ்லைஸ் பன்னி நடுவில் நட்ஸ் வச்சுட்டு சுருட்டவாம்
இலா எனக்கு அந்த ஆஃபால்ஃபா தான் புரியலை..எனக்கும் ராப் என்றால் கொள்ளை பிரியம்...ஆனால் அந்த ராப் ரொட்ட் எப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை..ரொம்ப மென்மையாக இருக்கும்..சதேர்ன் ஃப்ரயிட் சிக்கனில் கிடைக்கும் ராப் யாராவது சாப்பிட்டிருக்கீங்களா?ர்ம்ப நல்லா இருக்கும்
டியர் வாணி கட்டாயம் டூனா வைத்து செய்து பார்க்கிறேன் எங்களுக்கு அதன் சுவை பிடிக்கும்
அன்பு ஆசியா கூட்டாஞ்சோறில் இனையுங்கள்..உங்கள் குறிப்புக்காக காத்திருக்கிறேன்
அன்பு மனோ அக்கா..நீங்களும் எனக்கு குறிப்புகளை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது..இரண்டும் மிகவும் வித்யாசமாக இது வரை நான் பார்க்காத சான்ட்விச்ச்கள் கட்டாயம் செய்து பார்ப்பேன்..
ஹாஷினி வாங்க வாங்க சாட்விச்வேனும் சான்ட்விச் வேனும்னு கோஷம் போடுவோம் அட்மின் தனிப்பிரிவு தருவார்..இப்போ ஒரு 20 குறிப்பு குறைந்தபட்சம் சேர்ந்துட்டா அவர் தனிப்பிரிவு தருவார்..ஜலீலக்கா கொடுங்க கொடுங்க.
தேவா உங்களுக்கும் தெரியனுமே நேரம் இல்லையா
வானதி உங்களுக்கு தெரியுமா?மகளுக்கு சர்ஜரி முடிந்து நலம் என படித்தேன்..நிறைய பேருடன் பேச ஆசை நேரம் போதவில்லை.மாலி நலம் தான் என நம்புகிறேன்

மேலும் சில பதிவுகள்