பளிங்குப் பல்

எனகு என் பற்களை கொஞ்சம் அழகு படுத்த ஆசை வந்து விட்டது.சிறு வயதில் கேடு வரலாம் என்று ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லும் ஒன்று உண்டு..முன் பல் இரண்டும் ஒரு 3 மில்லிமீட்டெ நீளம் அதிகம்.பல்லும் ந்ல்ல வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்று ஆசை.
ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லிலுள்ள ஃபில்லிங் அகற்றி ரூட் கெனால் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்..
1)ரூட் கனால் செய்த அனுபவங்களை சொல்லுங்களேன்..அதற்கு எத்தனை சிட்டிங் வேண்டி வரும்..வலி இருந்ததா.செய்தபின் பலன் கிடைத்ததுஇபோல் உணர்ந்தீர்களா?
2)முன் பல்லை ட்ரிம் செய்ய ஆசை அதை செய்தவர்கள் உண்டா?
3)பற்களை பளிச் வெள்ளை ஆக்க ஆசை அதையும் செய்தவர்கள் உண்டா..வெண்மை எத்தனை நாட்களுக்கு இருக்கும்..என்ன மாதிர்யான ட்ரீட்மன்ட் செய்யலாம் என்று சொல்லுங்கள்..
உதவுங்கள் தோழிகளே.

சகோதரி இம்மா, தங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன். இது வெவ்வேறு அளவுகளில் கிடைப்பதாக தெரியவில்லை. இங்கேயும் சில பேர் அணிந்து இருப்பதை அருகில் சென்று பார்த்தால் சிலருக்கு உண்மையான பல்லை விட (கொஞ்சம் பெரிதாக இருந்து ) சற்று நீளமாக இருக்கிறது. ஆனால் பொதுவாக நார்மல் சைஸ் பற்களுக்கு பொருந்தும் விதமாக தயாரித்திருக்கிறார்கள். அரிசிப்பல் போன்று குட்டி குட்டி பல் இருப்பவர்களுக்கு இது சரியான சாய்ஸ் அல்ல. நார்மலான பல் சைசுக்கு அணிந்தால் தெரியவே தெரியாது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் விரைவில் தங்களுக்கு தருகிறேன்.இதனை காஸ்மெட்டிக் டூத் கவர் என்ற்று சொல்வார்கள். பார்ப்பதற்கு கலர் எதுவும் இல்லாமல் சிலிக்கானில் செய்தது போன்று இருக்கும். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் அங்கே உள்ள காஸ்மெட்டிக் ஷாப்புகளில் அல்லது பார்மசியில் கேட்டுப் பாருங்கள். இப்போது டீவியில் இதற்கான அட்வர்டைஸ்மெண்ட்டும் வருமின்றது. டெலி மார்க்கெட்டிங்கிலும் காண்பிக்கிறார்கள்.

உங்களுக்கு பதிவுகள் பாதி பாதியா தெரிஞ்சா,மறுபடியும் அந்த பேஜை refresh பண்ணி பாருங்க.அப்ப முழுவதும் தெரிகிறதா என்று செக் செய்யுங்கள்.இது வெறும் ஒரு ட்ரை தான்.

ஏன்னா நான் ஒரு நாள் internet explorer 8(beta) install செய்துட்டு அறுசுவை ஓபன் பண்ணினால் சில பத்திகள் பாதி பாதியாக தெரிந்தது.மறுபடியும் ரீஃப்ரெஷ் பண்ணினால் முழுவதும் படிக்க முடிகிறது.

அப்புறம் IE8 uninstall செய்துட்டு,IE VERSION 7 install பண்ணிட்டேன்.இதுவே உங்களுக்கு தீர்வுன்னு சொல்ல மாட்டேன்.இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்னு தோணுது.ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க!

ஆமாம்பா கரெக்ட தான்..நான் ரெஃப்ரெஷ் பன்னினேன் சரியா போயிடுச்சு..அய்யோ எனக்கு சந்தோஷம் தாங்கல..இத்தன நாள் பதில் என்னன்னே தெரியாம பேச வேண்டியதா இருந்தது.

ஹாய் தனிஷா/சுரேஜினி வைடெனிங் பத்தி டாக்டர்ட கேட்டா மொரச்சுட்டே சிரிக்க்ராரு.மஞ்சள் நிற பல் இருந்தா கூட நான் ரெகெமன்ட் பன்ன மாட்டேன் உங்க பல் நல்லாத் தானே இருக்கு அதுக்கு அதை போய் நாசப்படுத்தரீங்கன்னு சொல்லிட்டார்.ரொம்ப லேசா ஒரு மஞ்சள் நிறம் இருந்தது அதை மாத்தனும்னு நெனச்சேன் இனி மாட்டேன்

உங்க பதிலில் பாதி இல்ல கால் பாகம் தான் அன்று படிக்க முடிஞ்சது.சுகன்யா புன்னியத்தால ரெஃப்ரெச் பன்னினா சரியாயிடுச்சு.
ஆமாம் ஃபில்லிங் போடறேன் என்றால் ஆனால் டீப்பாக உள்ளே இறங்கியுள்ளதாம் அதனால் ரூட்டை பாதிக்குமா என்று சந்தேகமாக இருப்பதால் டெம்பரரி ஃபில்லிங் போடுவாராம்
டென்டல் கு இன்ஷூரன்ஸ் கவர் ஆகிறது கொஞ்சம் பெர்சென்டேஜ் கொடுத்தால் போதும் அதனால் கண்டிப்பா பல்லில் நிறமுள்ள க்ரவுனையே போடுவேன் சப்போஸ் ரூட் கனால் செய்வதாக இருந்தால்
அந்த பல் கவரை பற்றி படிச்சு எனக்கு ஆச்சரிய்மா போச்ஹு இப்படி எல்லாம் கூட உண்டா என்று.
என் கனவரைடம் சொன்னேன் அவர் சொல்றார் ஒரு நாள் கடையில் பார்த்தால் கண் இமை யாம் நீண்ட நீண்ட முடியாம்(lashes).பயந்துட்டாராம்.இதையெல்லாம் போட்டுகிட்டு வீட்டுக்கு வந்து கலட்டின பின் வீட்டிலுள்ளவர்கள் பயந்டு போக மாட்டாங்களான்னு கேக்கரார்..நான் உடனே பந்தா பன்னிக்கிட்டேன் பாருங்க எந்த மேக் அப்ப்பும் இல்லாம நேசுரல் பியூடியா தான் உங்க முன்னாடி நிக்கிறேன் இருந்தும் நீங்க பயப்படலை அதுக்கு பெருமை பட்டுக்கோங்கன்னு..ஹஹஹா

தகவலுக்கு மிகவும் நன்றி தேவா. எனக்குக் குட்டிப் பற்கள்தான். அதனாற்தான் கேட்டேன். (நகங்களும் அப்படித்தான். செயற்கை நகங்கள் எவ்வளவு வெட்டினாலும் பொருந்துவதில்லை.)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழீஸ்
ருட் கனாலுக்கு எனக்கு 5 சிட்டிங் வேண்டி வரும் என்று மருத்துவர் சொன்னார்..பல் ரொம்ப நீளமாம்..
இன்று முதல் விசிட்..எனக்கு அலுத்து போச்சு..1.15 மணிநேரம் இருந்தேன் இன்று..என்னை விட பாவம் டாக்டர் சும்மா படுக்கும் எனக்கே அப்படின்னா அவருக்கு?
இன்று எனக்கு 4 கனால்(ரூட்) இருப்பதாகவும் அதில் 3 அகற்றிவிட்டதாகவும் இன்னொன்றை தேடி தேடி அலுத்துவிட்டார்..அடுத்த விசிட்டில் இன்னொன்றை தேடுவார்..ஒவ்வொரு கனாலிலும் ரூட் செக் பன்னும்பொழுது பயந்து அலறிவிடுகிறேன்..உள்ளே ஊசியை வ்ட்டு தேடுகிறார்கள்..வலி என்னவோ ஒரு கட்டுறும்பு அளவுக்கு தான் என்றாலும் இப்ப வலிக்குமோ அப்ப வலிக்குமோ என்பது பயமாக ரொம்ப அசவுகர்யமாக உள்ளது..தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல வந்தேன்..என் மூஞ்சியை வைத்தே டாக்டர் கண்டுபிடித்து விட்டார் "அடுத்து 4 விசிட்கு வராம விட்டுராதீங்க என்றார்.
எனக்கு முதல் முறையே ரொம்ப பயமாக உள்ளது..அட்த்த சிட்டிங்கில் என்ன செய்வார்?அதுவும் இப்படி தான் ஊசியை விட்டு நோண்டுவார்களா?வலிக்குமா?எனக்கு லோகல் அனேஸ்தீஷியா கொடுத்தார்கள் நான் கெட்ட பிறகு இருந்தாலும் ஊசி ஆழமாக போகும்பொழுது வலிக்கிறது..
அனேஸ்தீஷியா இல்லாமல் செய்யலாமா என்று டாக்டர் கேட்கிறார்...நல்ல மருத்துவர் அதனால் இவ்வளவு பொறுமையாக இருந்தேன் இல்லையென்றால் நடுவே எழுந்து ஓடி வந்திருப்பே..தோழிகளே ப்லீஸ் சொல்லுங்க..இனி அடுத்தது என்ன செய்ய போகிறார்??

Hi Thalika,
இந்த வீடியோ பாருங்கள். உங்களுக்கு புரியும்.என்ன செய்கிறார்கள் என்பது புரிந்தால் பாதி பயம் போய்விடும் :-)

http://www.xomba.com/video_root_canal_treatment

ஹாய் தாளிகா
அன்னைக்கே உங்கலுக்கு பதில் கொடுக்கனும்னு நினைத்தேன் முடியலை...சரி இப்பவாவது சொல்லரேன்
நான் இரண்டு வருடம் முன்பு இந்த டீரிட்மெட் எடுத்து இருக்கேன்...என் மகளுக்கு ஒரு வயது இருக்கும் அப்போ அவ ஆப்பிள் எடுத்து எனக்கு ஊட்ட வந்தா அந்த ஆப்பிள் என் பல்லை நல்லா பதம் பாத்துருச்சு , அப்போ விண்டர் வேற நல்லா வலி வந்து டாக்டர்கிட்டே போன ருட் கனாலுக்கு அப்ய்மெண்ட் கொடுத்துடாங்க, வேற வலியே இல்லை சரினு நானும் வலிக்கு மட்டும் ஊசி போட்டு பாத்தா டாக்டர் ஒரு மணி நேரம் என் பல்லை ஒரு வலி பன்னிட்டார்...அப்புறம் நானும் அதுக்கு பின்பும் வலிக்கும்னு பயந்தேன் ரெண்டு நாளுலே நார்மல் ஆயிட்டேன்..அதுக்கு அப்புறம் செகண்ட் விசிட்டில் செக் பன்னினங்க..அதுக்கு ஒரு டெம்ரவரி பில்லிங் போட்டாங்க..அடுத்த விசிட்டில் அதுக்கு கேப் போடனும்னு சொன்னாங்க...அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா அவங்க அனுப்பின பில்லே பாத்து எனக்கு மயக்கமே வந்துருச்சு அப்போ என் இன்சுரன்சில் பல் கவர் ஆகலை அதனலே பில்லே பாத்ததும் பல்லுவலி தானா கானமே போய்யிடுத்து :-), அப்புறம் நம்ம ஊருக்கு(கோயமுத்தூர்) போய் தான் பல்லுக்கு கேப் போட்டேன் இங்கு கொடுத்த டாக்டர் பில்லில் 2% தான் அங்கு ஆச்சு...இபோ 1 வருசத்துக்கு மேலே ஆச்சு எந்த பிரச்சனையும் இல்லை......முதல் தடவை தான் வலி இருக்கும் அப்புறம் அவளவா வலி தெரியாது பயபடாமே எல்லா சிட்டிங்கும் எடுத்துகுங்க...அப்புறம் உங்க பல் பளிங்குபல் ஆக வாழ்த்துகல் :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஜிஜா அதை பாத்துட்டு தான்பா போனேன்..பாத்தப்ப பயம் அதிகமாயிடுச்சு:-D
ஹாஷினி எனக்கு என்ன ப்ரச்சனைன்னா இருக்கும் 4 கனாலில் 4 லும் சாகலை..உயிர் இருக்கு...நல்ல பல் வலியோட போயிருந்தா வலிக்காதாம் இது ஃபில்லிங் போட்ட வலி என்பதால் உயிருள்ள பல்லில் ஊசி ஏறும் வலி செமையா இருக்கு.பாவம் டாக்டரும் நர்சும் படாத பாடு பட்டுட்டாங்க..என்னையறியாம பெடிலிருந்து தலை எழுந்துடுது..டெலிவெரிக்கு கூட தைரியமா இருந்தேன் இது என்னமோ செம்ம பயம்.அடுத்த விசிட்டிலும் இப்டி தான் ஊசி விட்டு நோண்டுவாங்களா?
அப்பவும் வலிக்குமா?இன்னொரு கனால் மீதம் இருப்பதால் அதை எடுக்கும்போதும் வலிக்குமோன்னு இருக்கு..ஒவ்வொரு விசிடுக்கும் லோகல் அனேஸ்தீஷியா தருவாங்களா?
இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருக்கு போல..என் கசினுக்கு பல் வலியோட போய் ஊசி குத்துரப்ப சுகமா இருந்ததாம்.என் அம்மாவுக்கும் சுகமா இருந்ததாம்..என் பல் முழுக்க சாகலை அதான் வலி.உங்க பதில் படிச்சு தைரியமா இருக்கு..இங்கே எனக்கு டென்டல் இன்ஷூரன்ஸ் கவேர்ட் தான்.20%கொடுத்தா போதும் நம்ப ஊரில் செய்தால் வருவதை விட கம்மியா தான் வருது.அதனால அந்த பயம் இல்லை.
சரி கோவையில் எந்த டென்டல் க்லீனிக் போனீங்க?

இந்த பதிவு த்ரெட் முகப்புக்கு வர:-)

மேலும் சில பதிவுகள்