சமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி ஒன்று, எதிர்பார்த்ததை விட அதிகமாக எல்லோருமே ஒன்றிணைந்து வெற்றியும் கண்டுவிட்டோம். அதேபோல் இது பகுதி - 2 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை செல்வியக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 02) முடிவடையும். புதன்கிழமை(03/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எல்லோரும் வாங்கோ,
பிரதீபா, சீதா அக்கா, இந்திரா, சுகன்யா,தனிஷா, ஆசியா உமர், வத்சலா, கவி எஸ், சந்தோ, ஹாசினி, வனிதா, ஸ்ரீ, சுரேஜினி, மேனகா, இலா, மாலதி அக்கா, ஜலீலாக்கா, பஸீலா பர்வீன், தானு, சுஹைனா, ஆயிஸ்ரீ, தளிகா, அம்முலு, அரசி, அருண்பாலா, கதீஜா, ரேணுகா, விஜிமலை, கவின், மர்ழியா, விஜிசத்தியா, ஸாதிகா அக்கா, துஷியந்தி, ஜீலைகா, கவிசிவா, ஷராபுபதி, வின்னி, இமா, தேவா, மனோஹரி அக்கா, நர்மதா, மனோ அக்கா, ஹாஜா ஜஸ்மின், ரஸியா, பர்வீன் பானு, ---- போன தலைப்பில் இணைந்துகொண்டவர்களைத்தான் இங்கே பெயர் குறிப்பிட்டுள்ளேன், போன தடவை இணைய முடியாமல் போனவர்கள் எல்லோருமே இம்முறை இணைந்துகொள்ளவேண்டும் என்பது அன்பான வேண்டுகோள், பெயர் குறிப்பிடவில்லையே என யாரும் தயவு செய்து குறைப்பட்டிட வேண்டாம்.... எல்லோரும் வாங்கோ.

ரேணுகா, உங்களைக்காணவில்லையே, மெயிலுக்கும் பதிலில்லையே..... ஏதாவது சுகயீனமோ? முடிந்தால் பதில் தாருங்கள். இத் தலைப்பையும் இனிதே நிறைவேற்றுவோம் வாருங்கோ...

இதில் களமிறங்கும் அனைவருக்கும் எங்கள் அட்வான்ஸ் நன்றிகள்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நான் தயாரா இருக்கேன்,ஆனால் இரண்டு நாளைக்கு எங்கள் வீட்டில் சைனீஷ் சமைய்யல் தான் அதர்க்கான காய்கறிகள் வாங்கிட்டேன்,இரண்டு நாட்க்களுக்கு பின் செல்வி அக்காவின் சமையலை செய்வேன்

இதோ வந்திட்டேன்..அவர்களுடைய குறிப்புகள் இதுக்கு முன்னும் நிறைய செய்து இருப்பேன்..இருந்தாலும் இது தான் செய்ய போறேனு இப்போவே சொல்ல முடியாது..ஆனால் கண்டிப்பா கலந்துக்கிவேன்..செய்து பார்த்ததும் உடனே பதிவு போடுகிறேன்..
அதிராவின் முயற்சி வெற்றியடைய என்னால் இயன்ற உதவியும் வாழ்த்துக்களும் எப்பவும் இருக்கும்...

அடுப்பில சட்டியும் கையில கரண்டியுமா ரெடியா நிக்கிறன் ஒரு ஒலிம்பிக் டுமீல் வையுங்கோ ஸ்ராட் பண்றோம்.
சுரேஜினி

இப்ப தான் சரி!!! எந்த உணவுக்கு என்ன காம்பினேஷன் என்று தேடினேன்.. என் கணவரிடம் வரும் வாரம் எல்லா நாளும் உங்களுக்கு சூப் இருக்கும் என்றேன்.. அவர் அதற்க்கு.. என்ன ஆப்பா இல்லை சூப்பா என்றார்.. ஒரே சிரிப்பு..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் அதிராக்கா,
இன்று என் மதிய உணவு இது தான்.

இப்படிக்கு
இந்திரா

(ரொம்ப பிஸிக்கா அதனால தான் ஷார்ட் மெசெஜ்.)

indira

தோழி அதிரா நல்ல தலைப்பு சென்ற் தடவை என்னால் கலந்துக்க்கொள்ள முடியவில்லை ஏனெனில் நெட் ப்ராப்ள்ம்.

இனிமேல் கல்ந்து கொள்ள்வேன்.

இன்று எங்கள் வீட்டில் செய்தது----- தக்காளிதொக்கு,முட்டைஆம்லெட்

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அன்பு அதிராவுக்கு நான் எங்கும் போகவில்லை....இங்குதான் இருக்கிறேன்..நடுவில் வெள்ளி சனி விடுமுறை அதான் வரலை.நேற்று வந்தேன் செல்விகாவின் குறிப்பை தேடியே நேரம் ஆகிவிட்டது...உங்கள் மெயில்லையும் பார்க்கவில்லை...என்னைபற்றி கவலை வேண்டாம் உங்களுக்கு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்விக்கா இன்று சப்பாத்திக்கு உருளைகிழங்கு தேங்காய்பால் கறி செய்தேன்...நன்றாக இருந்தது

அதிரா மெயில் அனுப்பிவிட்டேன் பார்க்கவும்..இனி உங்களுக்கு குழப்பம் தீர்ந்துவிடும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சமையலும் அசத்தலும்,
ரஸியா... நாட்கள் இருக்கிறது, முடிந்தவரை செய்யுங்கோ.நன்றி.
மிக்க நன்றி சந்தோ... இதேபோல் எப்பவும் கைகொடுங்கோ.

சுரேஜினி, டுமீல் வைத்தாயிற்று.... இனிக் கறண்டியால் கைவரிசையைக் காட்டுங்கோ..... சமைப்பதில்:)

இலா, என்ன இது சூப்பைக் கொடுத்துக்கொண்டே ஆப்பு வைக்கிறீங்கள்போல இருக்கு, பாவம் ஆத்துக்காரர்... செல்வியக்காவின் சூப்..... பர் பிறியாணிகளைச் செய்த்து எல்லோரையும் அசத்துங்கள்.

இந்திரா, செய்திட்டீங்களா?, பிஸியாகிட்டீங்களா? நேரம் கிடைக்கும்போது முடிந்தளவு செய்யுங்கள்.
ஜெயலஷ்மி, வாங்கோ... பறவாயில்லை, சிலநேரங்களில் சிலருக்கு முடியாமல் இருக்கும். இந்தத் தடவை நிறைய சமைத்து அசத்துங்கோ.

ஆ.... ரேணுகா, எங்கே உங்களைக்
காணவில்லையே எனத் தேடினேன்.... மிக்க சந்தோஷம்... நானும் ராத்திரியும் கொஞ்சம் குறிப்புகள் தேடினேன், இனி மிச்சம் தேடப் போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்