கத்தரிக்காய் மசாலா

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
தனியாத்தூள் - 1 மேசைக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 1,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு சுருண்டு வரும்போது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கிய பின் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் வதக்கியபின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் செல்வி மேடம்,

உங்களை இப்போதெல்லாம் ரொம்ப அறுசுவையில் பார்க்க முடிவதில்லை - காரணமும் தெரிந்துகொண்டேன். நன்றாக உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம். முடிந்தபோது இங்கு வந்தால் போதும். விஷ் யூ அ ஸ்பீடி ரெக்கவெரி.

உங்களின் இந்த கத்திரிக்காய் மசாலா ட்ரை செய்து பார்த்தேன். சுவை ரொம்ப பிரமாதமா, செய்வதற்கு மிக சுலபமாக இருந்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
நலமா? ஆமாம்ப்பா, உடல்நிலை சரியில்லாததால் தான் சரியாக வரமுடிவதில்லை. உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. கூடிய விரைவில் பூரண குணம் அடைந்து வருவேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நான் அடிக்கடி செய்யும், என் மகளுக்கு மிகவும் பிடித்த ஒரு குறிப்பு இது. இதை ஓவனில் இன்னும் சுலபமாக செய்யலாம். தேவையானால் அதையும் சொல்கிறேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா நலமா?
இன்று உங்கள் குறிப்பில் இருந்து கத்தரிக்காய் மசாலா,
கொள்ளுரசமும் செய்தேன். கத்தரிக்காய்க்கு ப.மிளகாய்
சேர்த்திருந்தேன் மிகவும் சுவையாக இருந்தது.இதை ஓவனில் இன்னும் சுலபமாக செய்யலாம் என்று மேலே
குறிப்பிட்டு இருந்தீர்கள்.உங்களுக்கு நேரம் கிடைக்கும்
போது அதை இங்கே எழுதுங்களேன். மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்பு வத்சலா,
நலம், நீங்கள் நலமா? பாராட்டுக்கு நன்றி. பச்சை மிளகாய் சேர்த்து நானும் செய்து பார்க்கிறேன். ஓவன் குறிப்பு சீக்கிரமே தருகிறேன், முடிந்தால் யாரும் சமைக்கலாமில் போட தருகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் கத்த்ரிக்காய் மசாலா சூப்பரா இருக்கு மேம்.இன்னைக்கு சப்பாத்திக்கு செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு.கத்தரிக்காயை மசலாவுக்கு பெரியதாக அரிவதைவிட பொடியாக அரிந்து செய்தால் நன்றாகவும் இருக்கு.Thanks medam.

அன்பு தனு,
நலமா? மசாலாவுக்கு பொடியாக அரிந்தால், மசாலா பிடித்து வெந்து ருசி அதிகமாகும். அதுதான் காரணம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.