உறக்கம்

எனக்கு ஒரு புது பிரச்சனை. (பிரச்சனை தானா எனவும் தெரியவில்லை) அது தான் தூக்கத்தில் உளறுவது. நான் இந்தியாவில் இருந்த வரையிலும் எவ்வளவு கனவு கண்டாலும் அதிகம் உளறியது எல்லாம் கிடையாது. என் பெற்றோரும் அவ்வாறு சொன்னது இல்லை, நானும் உணர்ந்தது இல்லை. இங்கு (யூ.எஸ்) வந்து 3-4 மாதம் வரை கூட நன்றாக உறங்கின மாதிரி தான் நினைவு.

ஆனால், கடந்த 1-2 மாதமாக ஏதேதோ கனவு காண்பதும் அதில் பேசுவதை நிஜமாகவே பேசுவதுமாக உணர்கிறேன். எல்லாமே சாதாரண கனவுகள் தான், பெரிதாக சொல்லும்படி இல்லை. (அப்பா-அம்மா நினைவு என்றால் அவர்கள் தானே வரணும்?)

என் கணவரிடம் உளறினேனா எனக் கேட்டால், ஆமாம் என்கிறார். (அவர் சொல்வதை முழுக்கவும் நம்ப முடியவில்லை, உறங்கி விட்டால், இடியே விழுந்தாலும் எழ மாட்டார், நான் உளறுவது மட்டும் கேட்குமா?) எனக்கும் ஏதோ பேசினோமே என்று தான் தோன்றும். எல்லா நாளும் இவ்வாறு தோன்றினால், என் கற்பனை என ஒதுக்கலாம். ஆனால், வாரத்தில் 3-4 நாள் இப்படி மீதி நாள் நலம் என இருக்கிறது. இப்படி உளறியதாக எண்ணும் நாட்களில் நன்கு உறங்கிய திருப்தியும் இல்லை.

இரவில் நன்கு அசந்து தூங்க வேண்டும் என பகலிலும் தூங்குவதில்லை. எந்த விசனமான எண்ணங்களுடனும் உறங்க செல்வதும் இல்லை, பின் என்ன தான் காரணமாக இருக்கும்?? என் கரு வளையம் நாளுக்கு நாள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா? (ஏனெனில், 8 மணி நேர உறக்கம், ஏகப்பட்ட காய்-கனி என சேர்த்துக் கொண்டும் கருவளையம் அதிகரித்த வண்ணம் உள்ளது) இது பற்றி பெரிய கவலை இல்லை என்றாலும், பின்னாளில் இது பெரும் கவலை ஆகாமல் இருக்கவே இப்போது கேட்கிறேன். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து,

அன்புடன்,
ஹேமா.

ஹேமா நீ நான்னே கூப்பிடட்டா??
தூக்கம் கம்மியா இருந்தா இப்படி உளரல் அதிகமா இருக்கும்
ரொம்ப டயர்டா இருன்த..ஒடம்புக்கு ரெஸ்ட் கெடக்காட்டியும் வரும்
மனசுல எதாவதை நினைச்சு stressஇருந்தா இப்டி வரும்
சரியான நேரத்துல தூங்கி சரியான நேரத்துல எந்திரிக்கர பழக்கம் இல்லாட்டி இப்டி வரும்
தூங்க போரதுக்கு முன்னாடி மூக்கு முட்ட சாப்டாம அளவா பொண்ணா லட்சணமா சாப்பிட்டா இத குறைக்கலாம்

ஹலோ தளிகா, இங்க தான் இருக்கீங்களா? தாராளமா ஒருமையிலே கூப்பிடலாம். :-) தினமும் 11 மணிக்கு படுத்து 7-8 மணிக்கு எழுகிறேன். இது போதாதா?? இரவு 8 மணி வாக்கில் ஏதாவது பழம்/காய் தான் சாப்பிடுவேன். நீங்களும் அதானே சொல்றீங்க? :-(

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹலோ ஹேமா, எப்படி இருக்கிறீர்கள்? படுப்பதற்கு 1/2 மணித்தியாலத்திற்கு முன்னர் ஒரு கிளாஸ் சூடான பால் குடித்து விட்டு படுங்கள். நல்லா நித்திரை வரும். :) ட்ரை பண்னி பாருங்கள். நீங்கள் சியாட்டிலிலா இருக்கிறீர்கள்? உங்களது மற்றைய பதிவுகளிலிருந்து ஊகித்தேன். கேட்டதை தவறாக நினைக்க மாட்டீர்கள்தானே? :)

நான் நலமே. பார்க்க தான் ரொம்ப சோர்வாகவும் சூனியக்காரி போலவும் இருக்கிறேன்.. (கருவளையத்திற்கு நன்றி) கண்டிப்பாக முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன் நிலா. நான் சியாட்டில் தான். நீங்களுமா? அப்படி என்றால் நான் உங்களை வேறு ஒரு இடத்தில் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன் என நினைக்கிறேன். சரியா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நானும் சியாட்டில்தான் - Bellevue. ஆனால் நாம் சந்தித்ததில்லை. :) உங்கள் மற்றைய பதிவுகளிலிருந்து நீங்கள் சியாட்டிலாயிருக்குமோ என ஊகித்தேன். அவ்வளவே. :) நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? (மன்னிக்கவும். உங்களைப் போலவே எனக்கும் அடிக்கடி ஸ்மைலி பாவிக்கும் பழக்கம் உண்டு. நீங்கள் கூறிய அதே காரணமும் தான்.:))
அன்புடன்
நர்மதா

தமாஷ் பாபுவை ரொம்ப வெரட்டதிங்க.அப்புறம் காணம போய்ருவார்.என்ன சப்போட் பண்றேன்னுதான நெனைக்றீங்க???? நேற்று முழுக்க விழுந்து விழுந்து சிரிச்ருக்கு. நெத்தியில் bandaid யோடதான் எழுத்றேன்.உங்க இரண்டு பேர் combination work ஆகுது.கொஞ்ச நாளா பொருப்பா பதில் கொடுத்திட்டு இருந்தார். நீங்க வந்த பின்னலதான் சுயருபத்தை காட்டியிருக்கார்.

உண்மையிலேயே நான் காணாம போற நேரம் வந்துடுச்சுங்க.. வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு. இனி இந்த மாதிரி அரட்டைக்கு அதிக நேரம் செலவு பண்ண முடியாது. அப்பப்ப வந்து எட்டிப் பாக்கலாம். அதுவும் கூடாதுன்னு நம்ம நட்பு ஒண்ணு சொல்லுது. நேத்து ஒரு மெயில் அனுப்பி, அட்மினா அடக்கமா இல்லாம என்ன இது சின்னபுள்ளத்தனமான்னு, கேள்வி மேலே கேள்வி.

இப்ப நீங்க வேற சொல்லி காமிச்சுட்டீங்க. கொஞ்ச நாளு பொறுப்பா இருந்தாரு. இப்பத்தான் சுயரூபம் காட்டுறாருன்னு. அதென்னமோ உண்மைத்தான். எனக்குள்ளே தூங்கிட்டு இருந்த (அ)சிங்கத்தை இந்த ஹேமா பொண்ணு வந்து எழுப்பிவிட்டுடுச்சு. இயல்புக்கு மாறா ரொம்ப நாளா சீரியஸ்ஸா இருக்கிறது(நடிக்கிறது) எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு. நேரம் பாத்து அரட்டைக்கு கம்பெனி கிடைச்சதும் கேட்கவா வேணும். சிங்கம் தாவி குதிச்சிடுச்சு. இப்ப அடக்கி உள்ளே அனுப்ப வேண்டிய நேரம்.

அதனால, நான் பயந்து ஓடிட்டதா யாரும் நினைக்க வேணாம்.. இப்ப போறேன். மறுபடியும்.....

ஆணி ஜாஸ்தியாகிடுச்சுனு போனா சரி. அப்படி பார்த்தா நானும் போக வேண்டியவ தான், வேலைக்கு சேர பயிற்சி எடுக்கணும். (எது தேவையுள்ள ஆணி எது தேவையில்லாத ஆணினு தெரியுமா பாபுண்ணா?)

மற்றபடி அட்மின்னா பொறுப்பா இருக்கணும், ஓகே, அதுக்கும் வெட்டியா சில வம்பு பண்ணறதுக்கும் என்ன சம்பந்தம்?? இந்த மாதிரி பொறுப்புனு சொல்லி சொல்லி தான் நமக்குள்ள இருக்கற 5 வயசு குழந்தையை மூடி மறைச்சிடுறோம். எதில் பொறுப்பா இருக்கணுமோ அதில இருந்துட்டு மீதி நேரம் நல்ல விளையாட்டுத்தனமா இருந்தா என்ன தப்பு? யாராவது 1-2 பேர் சின்னபுள்ளத்தனம்/லூசுனு சொன்னாக் கூட கண்டுக்க கூடாது என்பது என் அபிப்ராயம்.

எனிவே, எல்லா ஆணியையும் பிடுங்கிட்டு வாங்க திரும்ப :-)

இத்தனை நாளா நல்லபடியா போய்ட்டு இருந்த தளம், நான் வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் வெட்டித்தனமாவும் போகுதுனு தோணுது. ஏதாவது உருப்படியான விஷயம் வேணும்னா நிறைய தேடணும் போலிருக்கு. இதனால நான் கொஞ்சம் என் அரட்டையை குறைச்சுக்கறேன். யாரும் தப்பா நினைக்க மாட்டீங்களே? (அப்பாடா நீயே மூடறேன்னு சொல்லும் போது நாங்க ஏன் தப்பா நினைக்க போறோம்னு கேக்கறீங்க, அதானே? ;-) )

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

Hi Hema
வந்திட்டீங்களா??? நேற்று நல்லா தூங்கினீங்களா?????சிங்கம் எங்கயோ போய்விட்டார்.

இரவில் தூங்குவதற்கு 1 மணி நேரம்முன்பாகவே சாப்பிட்டு விடுங்கள்.சூடான பால் சாப்பிடலாம்.பின்பு
உங்கள் இஷ்டதெய்வதின் பெயரை 108 முறை மனதிலேயே உச்சரிக்கலாம். மனதின் குழப்பம் குறையும்.
நிம்மதி கிடைக்கும். இது என் அனுபவம்.ட்ரை பண்ணிப்
பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்