Hello friends
எனக்கு +2 படிகும் போதிலிருந்து Dandruff இருக்கு. நான் College சேர்ந்த பின்பு கூட எனக்கு தலை முடி பராமரிப்பு பட்றி தெரியலை. வேலைக்கு சேர்ந்த பின்பு பாதி முடி இல்லை. Docter கிட்ட காட்டின பிறகு அவர்கள் சொன்னவட்றை(Nizoral) உபயோக படுதின பிறகும் முடி கோட்டுவது நிற்கவில்லை.work tension காரனமாக இருக்கலாம். இப்போது திருமனமும் ஆகி விட்டது. ஒரு ரோஜா வைக்க கூட முடி இல்லை. கணவர் பூ வாங்கி வந்தாலும் வைக்க கூந்தல் இல்லை.ரொம்ப வருதமாக இருக்கு.
எனக்கு எதாவது வழி சொல்லுங்கள் சகோதரிகளே. எனக்கு திரும்ப முடி வளறுமா?
Thanks,
Latha
லதா, முடி உதிர்தல்
டியர் லதா, ஷாம்பு அடிக்கடி போடாதிங்க.
3 நாளை''கு 1 தடவை போடுங்க.
தலை'யில் எண்ணைய் தடவி 10- 15 நிமிடதிற்கு பின்,மிதமான சூடுள்ள தண்ணிரில் ஷாம்பு போடாமல் குளிக்கவும் தினமும்.
தலை காயவைத்து ,எண்ணைய் தடவவும் தேவயான அளவு,
நிறைய எண்ணைய் தடவினாலும் முடி கொட்டும். கவலைபடாதிங்க முதலில.
நல்ல தேங்காய் எண்ணைய் யூஷ் பன்னுங்க.
*அன்புடன் பஜீலா*
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
லதா முடியுதிர்தல்
ஹாய் லதா நீங்க நல்ல ஒரு Trichologists போய் கன்ஸல்ட் பண்ணி அவங்க சொல்ற மாதிரி செய்யுங்க. ஹார்மோன் எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க.முடி இந்த அளவுக்கு உதிர்வதற்கு அடிப்படை காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்தா பலன் கிடைக்கும். நம் உடலுக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முடி கொட்டும்.அதை சரியாக்கினா தானே முடிகொட்டுவது நின்று விடும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
லதா- தலை முடி உதிர்வதற்கு
தலைமுடி தங்களுக்கு அதிகம் கொட்டுவதாக சொல்லி இருக்கீங்க. டாக்டரிடம் ஆலோசனை செஞ்சீங்களா? இரும்புச்சத்து குறைந்து இருந்தால் முடி கொட்டலாம். சிலருக்கு ஹார்மோன் பிரச்சனையாலும் முடி கொட்டலாம். என் கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு பெண்ணிற்கு தைராய்டு பிரச்சனையால் முடியின் அடர்த்தியே போய் விரல் அளவு அடர்த்திக்கு வந்துவிட்டதை பார்த்திருக்கிறேன். எனவே கவிசிவா சொல்வது போல் மருத்துவரிடம் சென்று ஆலோசியுங்கள். அவர் தேவையான டெஸ்ட்டுகளை எடுக்க சொல்லி, அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார். மேலும் நீங்கள் குளிக்கும் தண்ணீர் நல்ல தண்ணியா அல்லது உப்பு கலந்த தண்ணீரா? அதனாலும் முடி கொட்டலாம். சூடான தண்ணீரில் தலை குளிக்காதீர்கள். தினமும் இரண்டு வேளை தலையை மண்டையோட்டில் ( ஸ்கால்பில்) அழுத்தி நன்றாக விரல்நுனிகளால் மசாஜ் செய்யுங்கள். இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சி தூண்டப்படும். சாப்பாட்டில் இரும்புச்சத்துகளை சரியான விகிதத்தில் கலந்து கொள்ளுங்கள். தினமும் பால் அருந்துங்கள். ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் போன்றவற்றை மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். எப்போதும் ரிலாக்ஸ்டாக இருங்கள். அதுவும் கூட முடி கொட்டுவதற்கு காரணமாக இருக்கலாம். உணவு மூலம் நல்ல ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் வைப்பது மசாஜ் செய்ய ஒரு சாக்காக இருப்பதால் அதுவும் நல்ல பலனைத் தரும். ஆனால் தலையில் முடி குறைந்து காணப்படும்போது எண்ணெய் வைப்பது சரி வராது. அதனால் வெறும் விரல் நுனி மசாஜ் போதும். பொடுகு தொந்தரவு இல்லாமல், அழுக்கும் சேராமலும் தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பொடுகுக்கு எலுமிச்சை சாறு தடவி ஊறவைத்து குளியுங்கள். அப்போது சீப்பு, தலையணை உறை, போர்வை அனைத்தையும் மாற்றுங்கள். நிசோரால் போன்ற வீரியமான ஷாம்பூக்களை உபயோகிக்காமல் இப்போது ஹெட் அண்ட் ஷோல்டர் போன்ற பிராண்டுகளில் தினமுமே உபயோகிக்க தகுந்த மைல்ட் ஷாம்பூக்கள் உள்ளன. அதனை வாங்கி உபயோகியுங்கள். முடி உதிர்வதைத் தடுக்கும் வழிகளைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருக்கேன். இப்போது அதன் லிங்கை இங்கே கொடுக்க நேரமில்லை. தேடுக பகுதியில் அடித்து தேடிப் பாருங்கள்.
Hair falling!
Dear Madam,
Heat 200 ml Pure coconut oil with 1 bunch of curry leaves. You keep aside for 2 days. Use this oil. Definitely it will stop hair falling. It's very easy way to control the hair falling.
பதிலளித்த
பதிலளித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.
நான் Thyroid test செய்து பார்தேன். அதில் Euthyroid என்று சொன்னார்கள்.
அது நான் பிறக்கும் போதே இருந்தது என்றும்,அதனால் ஒன்றும்
பாதிப்பில்லை என்றும் சொன்னார்கள்.Heamoglobin
கொஞ்சம் கம்மியாக இருக்கு. அது கூட very slight variation.
நான் உங்கள் ஆலோசனை படி Docter கிட்ட consult பன்றேன் .
Thanks,
Latha
ஹலோ லதா,
ஹலோ லதா,
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!!!
பொடுகு நீங்க நான் என் பாவனையை சொல்லுகிறேன். முயன்று பாருங்கள்.
பயத்தம் மாவு ஒரு டப்பா எடுங்கள். இதனுடன் பயத்தம் மா நூறு வீதம் என்றால் வெந்தய பவுடர் ஒரு இருபது வீதம் என்ற கணக்கில் மிக்ஸ் பண்ணுங்கள். ஒரு டப்பாவில் போட்டு முடியால் முடி நன்றாக ஒன்று சேர குலுக்குங்கள். இதனை பாத்ரூமில் வைத்து கொள்ளுங்கள். குளிக்கும்போது ஒரு கப்பில் தேவைகேற்ப போட்டு ஸ்பூனால் ஷம்போ பதத்தில் தண்ணீர் அல்லது தயிர் விட்டு கட்டியில்லாமல் கலக்கி தலையில் நன்றாக தடவி பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக மசாஜ் பண்ணுங்கள். பிறகு அலசி விடுங்கள். இதை எப்போதுமே பாவியுங்கள். பொடுகு இல்லாமல் போய் விடும். சோப்பு போன்றவற்றை அடியோடு நிறுத்தி விடுங்கள்.
கலவை ஒட்டும் பதத்தில் இருந்தால் வெந்தய பவ்டரின் அளவை குறையுங்கள். அப்போது பிசுபிசுக்கது. தலைக்கு போட இலகுவாக இருக்கும். இதையே முகத்துக்கும் போடலாம். முகம் மினு மினுப்பாக இருக்கும். கவலை இல்லாமல் நம்பிக்கையோடு போடுங்கள் எல்லாம் சரியாகி விடும்.
thanks luxmy :):):)
thanks luxmy :):):)
Luxmy
குளிர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு வெந்தயத்தால் நீர் கோர்க்க வாய்ப்பு உள்ளதா?
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
உண்மையில்
உண்மையில் வெந்தயமும், பயறும் குளிர்ச்சியானவை. நீங்கள் தலையில் வைத்தவுடன் தேய்த்து கழுவி விடுங்கள். அதாவது shampoo வைத்து உடனடியாக கழுவுவது போல் கழுவி விடுங்கள். இப்படி ரெண்டு மூன்று தடவை குளித்து பாருங்கள். ஒத்து கொண்டால் தொடர்ந்து பாவியுங்கள். முகத்துக்கு கூட இந்த பொடி நல்ல பொலிவை கொடுக்கும். two in one.