சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

இந்திரா,விஜிமலை,இமா, கவிஎஸ், சீதாக்கா, சுரேஜினி, வத்சலா, குயிலா, சந்தோ, துஷியந்தி, வனிதா, ரேணுகா, மேனகா, பர்வீன் பானு, அரசி, விஜிசத்யா, ஆசியா, தனு, ஜெயலஸ்மி, வின்னி, ரஸியா, மனோகரி அக்கா, ஷராபுபதி, கவிசிவா, ஜலீலாக்கா, மனோ அக்கா, கவின், அருண்பாலா, செல்வியக்கா, நர்மதா, ஸ்ரீ.. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். இம்முறைதான் நினைவு வந்திருக்கிறது முதலிலேயே சொல்ல.(விஜிசத்யா, ஒகேயா?)

நாளை திங்கட்கிழமை(22/12) சமைக்கத் தொடங்குவோம், எல்லோரும் வாங்கோ......
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மனோஹரி மேடம் குறிப்பு தானே ,செய்து பார்ப்போம்.அருமையான குறிப்புக்கள் நிறைய இருக்கு,நேரம் கிடைக்கும் போது செய்து அசத்துவோம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த முறை முதல் சமையல் என்னுதுதான்.இன்றுகாலை கோதுமை புட்டு செய்தேன்.சூவையா இருந்தது.

5 வருஷ்மா சமைக்கிறேன்.புட்டு சமைத்ததில்லை.நேற்று என்னவரிடம் கேட்டேன்,புட்டு உங்களுக்கு பிடிக்குமா?சாப்பிடுவீங்களான்னு?ஒரு பதிலையும் கானாம்.இத்தனை வருஷ்மா வாழ்ந்து இது கூட தெரியலையே.அதான் இன்று புட்டு செய்தேன்.அவரும் நல்லா இருக்கு நைட்ல செய்,காலைல வேண்டாம்,நல்லா இருக்குன்னு சாப்பிட்டார்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று மீன் ரெடியாக இருந்ததால் செய்து பார்த்தேன்,சூப்பர்.முடிந்தவரை போட்டோ எடுத்து அட்மின்க்கு அனுப்புகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Today I did Egg Toast for Breakfast. It was good.

மஷ்ரூம் ரெடியா இருக்கவும் இன்று இதை செய்து பார்த்தேன். சுவை நன்றாக இருந்தது. செய்முறையும் ரொம்ப ஈஸி.

அதிரா, அழைப்பிற்கு மிக்க நன்றி! (இப்ப இரண்டு வாரங்களாக அறுசுவையை எட்டிகூட பார்க்க முடியாமல் போயிற்று....)
இந்த முறை, என்னால் முடியும்போதெல்லாம் செய்து தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஆகா, ஆரம்பித்துவிட்டீங்களா?
ஆசியா, முதலாவது ஆளாக ஓடி வந்திருக்கிறீங்கள், மிக்க நன்றி.
என்ன ரேணுகா, இந்த முறை அசத்தல் ராணியாகப் போறீங்கள் போல இருக்கு.. பார்க்கலாம் ரேணுகாவா அதிராவா என்று:) நன்றி ரேணுகா.
சுஜாதா, வாங்கோ மிக்க நன்றி.
ஸ்ரீ, ஆரம்பமாகிவிட்டதா சமையல், மிக்க நன்றி.... எங்கே மற்றவர்களைக் கணவில்லை

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிராக்கா,
ஓன் லைனிலா? ரேணுகா ரிலாக்ஸ் ஆகி (டீங்களா)டாங்களா?

இன்று நான் வெண்டைக்காய் மசாலா, முட்டைகோஸ் பொரியல் செய்தேன்.

இப்படிக்கு
இந்திரா

indira

அதிரா,ரேணுகா,மனோகரி அக்கா மற்றும் எல்லோரும்
நலமா?

இன்று சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

அதிரா, இவ்வாரம் தொடக்கம் விடுமுறை ஆரம்பித்து விட்டதல்லவா! வெளியில் செல்ல இருக்கிறோம். அதனால் 3அல்லது 4 நாட்கள் இந்தப் பக்கம் வரமுடியாமல் உள்ளது.இந்த முறை அதிகம் சமைக்க முடியாது. அடுத்த முறை பார்ப்போம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் அதிரா,ரேணு நான் இன்று செட் தோசை செய்தேன்.நன்றாக இருந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்