சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

இன்று மிளகு வெங்காய குழம்பு செய்தேன்.

அதிரா, மிகவும் அறிவாளி தான் நீங்கள்.
நான் பிரட்க்கிரம்ஸ் புரோக்கலியை ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து அதனை அட்மினுக்கு அனுப்பிவிட்டேன்.

மனோகரி அக்காவின் குறிப்புகளில் இன்று செய்தது பேச்சுலர்ஸ் பருப்பு கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்.

செய்து அசத்தியாச்சு.கிறிஸ்மஸ் அன்று கேக் செய்தது வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நேற்று முட்டை தொக்கும்,சன்னா மசாலாவும் செய்தேன்,இரண்டுமே சூப்பர்,

மனோகரி அக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ யேர் வாழ்த்துக்கள்,உங்களுக்கு பொறுமையாதான் குறிப்புக்கு கீழ பின்னூட்டம் தருவேன்,அதனால் கோவிக்காதீங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மாலி இந்த முறை நீங்கள் கலந்து கொண்டது சந்தோஷ்ம்,உங்களால் முடிந்தவரை செய்யூங்கள்,,

குயிலா வாங்கள்,இன்னும் நாள் உள்ளது முடியும் வரை செய்யூங்கள்,

சுரேஜினி நீங்க எங்கையும் போக முடியாது,கிறிஸ்துமஸ்க்கு நான் வீட்டு வரவா?பெரிய லிஸ்ட் எல்லாம் வைத்துளீர்கள்,நீங்கள் இந்த முறை அசத்தல் ராணியா வர போறீங்க போல

வாங்க விஜி நீங்களும் முடியும் வரை செய்யூங்கள்,

வாங்க ஜூலைகா இப்பொழுது குழந்தைகள் நலமா?உங்களால் முடிந்த வரை செய்யூங்கள்ள்,நீங்கள் கலந்து கொண்டதில் மிக்க மகிழச்சி

வானதி இந்த மாதம் விடுமுறை மாதம்,அதிகமாக விடுமுறை தான் வருகிறது,இருந்தாலும் இத் தலைப்பில் பங்கு பெற்று அனைவரும் சமைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இலா என்ன தாயம் விளையாடுவது போல் உள்ளது,சீக்கரம் தாயம் 64 போடுங்கள்

இந்திரா,கவின் வாங்கள்ள் இன்னும் முடிந்தவரை செய்து அசத்துங்கள்

ஆசியா எலெக்ட்ரா என்ன ஸ்டீரிட் பெயரா?இன்னும் அபுதாபி எனக்கு பழகவில்லை,தேடி பார்க்கிரேன் கடையை...

சுஜாதா வாங்க,அதிரா சொல்வது போல் தமிழில் டைப் பழகி கொண்டால் உங்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும்,

அரசி அதிரசம் செய்தீங்களா?எனக்கு மிகவும் பிடிக்கும்,ஆனால் இது வரை நான் முயற்சித்ததில்லை,

ஹா ஹா ஹாசினி நிச்சயம் செய்து பார்க்கிறேன்,ஆனால் பாகற்காய் இல்லை,திங்கள் செய்துவிட்டு சொல்லுகிறேன்,

ஆசியா கேக்கா என் பிள்ளை கேக் கேட்டான்,அட்ரஸ் சொல்றேன்,வீட்டுக்கு அனுப்பூங்கள்

விடுமுறை இருந்தாலும் எல்லாரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறீர்கள்,அனைவருக்கும் மிக்க நன்றி.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ யேர் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா இந்த முறை அசத்தல் ராணி பட்டம் எடுக்க முடிவா??நல்லது,எல்லாரையும் சமைக்க சொல்லும் அதிரா நீங்கள் இந்த முறை நிறையா சமையூங்கோ.

பார்ட்டி எல்லாம் முடித்து வாருங்கள் நாங்கள் யாரும் கோவிக்க மாட்டோம்,

வனிதா நீங்கள் அரபு நாடா?எந்த ஊரு சொல்லுங்கள்?
ஜலிலா அக்காவிடம் நான் பேசிட்டேன்,நெட் பிரச்சனை துபாயில் உள்ளதாக நானும் கேள்விபட்டேன்,அபுதாபியில் ஒரு நாள் தான் இருந்தது அப்பறம் சரியாயிடுச்சு,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கணக்கபிள்ளை... நான் சிரியா'ல இருக்கேன். :)

இன்று சமையல் - முட்டை பிரட் டோஸ்ட், வெள்ளை சட்னி, கேழ்வரகு புட்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நான் பூண்டு ஊறுகாய், புளியோதரை செய்தேன். டேஸ்டாக இருந்தது. நன்றி அக்காஸ்.

ஹாய் ரேணுகா&அதிரா,நலமா?
மனோகரி மேடத்தின் குறிப்புகளில் உள்ள காலிஃப்ளவர் வறுவல்&முட்டை ஃபிரைடு ரைஸ் செய்தேன்பா.ரியல்லி டேஸ்டி.
The most importtant ingredient in the formula of succeess is performing consistently.

அக்காஸ் இன்று அதிரசம் செய்தேன். ஷேப் வரலை. ஆனால் ருசியாக் இருந்தது

மேலும் சில பதிவுகள்