சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

ரேணுகா என் கணக்கில் இன்னும் ஒன்று, சிக்கன் பர்கர். மிகவும் நன்றாக இருந்தது. திரும்பவும் வருகிறேன்.

அன்புள்ள ரேனுகா/அதிரா
பல் எடுத்து இப்போது பரவாயில்லைப்பா.விசாரித்தமைக்கு மிகவும் நன்றி.
இன்று மெட்ராஸ் பெப்பர் சிக்கன் செய்தேன்.

பசங்களுக்கு விடுமுறை என்பதால் எனக்கு குக்கிங் மூட் கொஞ்ஜம் குறைவா இருக்கு.இன்னும் ஏதேனும் செய்ய முயற்சிக்கிறேன்.

உங்கள் ஊக்கம் எங்களை செய்ய வைக்கிறது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

கீதாச்சல் பார்த்தீங்களா? இப்படித் தெரியப்படுத்தினால்தான், மற்றவர்கள் வேறு குறிப்புச் செய்வார்கள். மிக்க நன்றி.

வின்னி, ஆசியா மிக்க நன்றி.

வனிதா, மிக்க நன்றி தொடர்ந்து செய்யவும்.

நான் ரேணுகாவிற்குப் பதவி உயர்வு குடுத்திருக்கிறேன்... "சமைத்து அசத்தலாமின் எக்கவுண்டன்" என்று, இனிமேல் எல்லோரும் கணக்குப் பிள்ளை என்று சொல்லாமல், ஸ்டைலா எக்கவுண்டன் என்று சொல்ல வேணும் ஓகேயா?:)

அரசி, அருண்பாலா, மாலி அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.

ரேணுகா பதவி உயர்வு தந்தமைக்காக 2 குறிப்புச் செய்யவேணும்:) (நீங்கள் செய்ய நினைப்பவற்றை விட).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா சான்ரா வந்து போயாச்சா.. என்ன கிப்ட் சொல்லுங்க.. நீங்க நாட்டியா இல்லை நைஸா என்று நான் சொல்றேன்
"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்று மெட்ராஸ் சாம்பார், பீன்ஸ் பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது,
அன்புடன்
சுதா

உங்கள் அழைப்புக்கு நன்றி ! இப்பொழுது குசின் இல்லாமல் நடு கூடத்தில் ஏதோ சமைத்து புசிக்கிறோம்!மனோகரி அக்காவின் சமைய்யலை உங்கள் அனைவருடன் சேர்ந்து சமைக்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது!ஆனால் புதிய கிச்சன் வந்தவுடன் சமைத்து அசத்தவேண்டியது தான்!

ஹாய் அதிரா, ரேணுகா & மனோகரி,
மன்னிக்க வேண்டும். நான் எவ்வளவோ முயன்றும் எதுவுமே செய்ய முடியவில்லை. :( (குறிப்புகள் எல்லாம் பிரதி பண்ணி வத்திருந்தேன்.) கவலையாக இருக்கிறது.
இன்று வெளியூர் பயணமாகிறேன். நிச்சயம் வந்தபிறகு போட்டிக்காக இல்லாவிட்டாலும், ஏதாவது சமைத்துப் பார்ப்பேன்.
வாழ்த்துக்கு நன்றி மனோகரி. சமைத்து அசத்தவிருக்கும் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் அதிரா & ரேணு,

2 ,3 நாட்களுக்கு பிறகு இன்றுதான் அறுசுவை பார்த்து சமைக்க சந்தர்ப்பம் அமைந்தது.
இன்று சமையல் (மனோகரி மேடம் குறிப்புகளிலிருந்து) - பிஸிபேளாபாத், முட்டை தொக்கு. மீண்டும் வருகிறேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இலா நான் சொல்கிறேன் சன்ரா குட், இலா நோட்டி, ஏன் தெரியுமோ? சமைப்பதே இல்லையே அதனால்தான்:)

குயிலா மிக்க நன்றி.

ரஸியா, பறவாயில்லை, கவலைப்படவேண்டாம், கிச்சின் திருத்தியதும் வந்து கலந்துகொள்ளுங்கள் எமக்கு சந்தோஷமே...

இமா: விடுமுறைகளோடு வருவதால் நிறையப்பேரின் நிலை இப்படித்தான் இருக்கிறது, நல்லவேளை நாங்கள் எங்கும் போகவில்லை, ஆனால் திங்கட்கிழமை எமக்கு விருந்தினர்கள் வருகிறார்கள்... 3 நாட்கள் நிற்பார்கள்.
போய் வந்துவிட்டால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் அடுத்தமுறை கலந்துகொள்ளலாம்.

ஸ்ரீ மிக்க நன்றி. கிடைக்கிற நேரத்தில் செய்ய முடிந்ததைச் செய்து சொல்லுங்கோ..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,கணக்கு சாரி அக்கவுண்டண்ட் ரேனுகா மெட்ராஸ் மீன் குழம்பு செய்தேன்.நல்லா இருந்தது.கணக்கில் சேர்த்துடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்