பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

ஓகே ஓகே கூல் பிரண்ட்ஸ்.
நான் இனிமேல் வாயை தொறக்கலப்பா .
யாராவது சீக்கிரம் நல்ல தலைப்பை சொல்லுங்கப்பா (பல தலைப்புகள் மனசுகுள்ள ஊறுது ப்ச் சொல்லமுடியலைய்யே:(

தாஜ்,என்ன பண்ணுறது வாய் சும்மா இருந்தாலும் கை சும்மா இருக்கமாடேங்குதே பழக்கதோசம் விடமுடியல...

எல்லாம் நன்மைக்கே...

அனைவரும் மகிழ்வது கூட்டு குடும்பதிலா?தனி குடும்பதிலா?

என்ன இது சின்ன பிள்ளைதனமா இருக்கு பாவம் நான் ஒரு சமத்து பொண்ணு அப்படிபட்ட என்னை இப்படி நான் இல்லாத டைமில் கலாய்பது கொஞ்சம் கூட சரி இல்லை...அதிராவை சொல்லுங்க அது நியாயம் என்னை போய் சே சே !!

ஆமாம் உமா இருமல்ன்னு முன்பு படிச்சமாதுரி நியாபகம் இப்ப எபப்டி இருக்கு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தாஜ் நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க?

அழகு என்பது உடலா??உள்ளமா??

வாழ்க்கை என்பது குடும்பத்தையா??அல்லது உலகத்தையா??அதிகம் சார்ந்தது...

Salaam

தயவுசெய்து இந்த இழையில் பட்டிமன்ற தலைப்புகளை மட்டும் கொடுங்கள். மற்ற விசயங்களைப் பேசி இந்த இழையினை நீண்டதாக மாற்றிவிட்டால், நாளை நடுவர் பதவி வகிக்க போகின்றவர்கள் தலைப்புகளை தேட சிரமப்படுவார்கள்.

பிரியாணிக்கு சிக்கனா, மட்டனா என்பது போன்ற நகைச்சுவை தலைப்புகளும் அவ்வபோது பட்டிமன்றத்தில் இடம்பெற்றால்தான் பட்டிமன்ற பகுதி சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. என்னிடம் தலைப்பு கேட்ட ஒருவருக்கு நான்கூட இதுபோல் ஒரு தலைப்பு சொன்னேன். இட்லிக்கு பொருத்தமானது சட்னியா, சாம்பாரா? :-)

இன்னும் சில தலைப்புகளை சொன்னேன். அவர் புதுமையாக இல்லை என்று நிராகரித்துவிட்டார். வேறு யாருக்கேனும் பயன்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்.

1. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஜாதி மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமானதா, அவசியமற்றதா?

2. சமூகப் பொறுப்பு அதிகம் கொண்ட திரைப்பட நடிகர் கமலா, ரஜினியா?

//1. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஜாதி மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமானதா, அவசியமற்றதா?//
அட்மினின் இந்த தலைப்பை நானும் வரவேற்கிறேன். உண்மையில் நான் தலைப்பு கொடுக்கும் போது இதைத்தான் கொடுக்க நினைத்தேன்.ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுமோன்னு விட்டுட்டேன் :-(

யாரும் அடிக்க மாட்டீங்கன்னு நம்பி அடுத்த தலைப்பை சொல்றேன்

படிக்க சுவாரசியம் நமக்கு வந்த காதல் கடிதமா? அடுத்தவருக்கு வந்த காதல் கடிதமா?

ஓடிட்டேன்.....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிரியாணிக்கு நல்லது சிக்கனா மட்டனா என்ற தலைப்பு சுவாரசியமாக இருக்கும்...கொஞ்சம் மனசுக்கு சுகமாக இருக்கும் படிக்க என்று நினைக்கிறேன்..சுஹைனாவின் இனிப்பா காரமா தான் இன்றும் மனதில் நிற்கிறது

என்னுடைய தலைப்பு

ஆண்பெண் ஒன்றாக கல்வி கறபது நல்லதா அல்லது தந்தனியே படிப்பது நல்லதா?

புஷ்ஷுக்கு செருப்படி என்று ஆள் ஆளுக்கு கொண்டாடுகிறார்களே அது புகழத்தக்க செயலா அல்ல்து கீழ்த்தரமானதா

மேலே சொன்ன புஷ் தலைப்பு கொஞ்சம் தர்மசங்கடத்தை உருவாக்கும் என்றால் விட்டுவிடலாம்.

1. இன்றும் ஆணாதிக்கம் இருக்கிறதா இல்லையா?!

2. பெணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா புகுந்த வீட்டிலா?!

3. நம் சமூகம் பெண்ணின் வளர்ச்சிக்கு இன்றும் முட்டுக்கட்டை போடுகிறடா இல்லயா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா கவிசிவா உங்கள் தலைப்பை படித்து சிரித்து விட்டேன். நிஜமாகவே இப்படி ஜாலியான தலைப்பில் வாதாடினால் தமாஷாகத்தான் இருக்கும் :) வேலை டென்ஷன் வீட்டில் டென்ஷன் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறக்கலாம்!

தளிகா உங்கள் முதல் தலைப்பு சூப்பர். Its quite a contentious issue and very topical too. சாரி இதற்கு தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

வனிதா இது நியாயமா??? ஆணாதிக்கத்தை பற்றி நான் ஒரு தலைப்பை கொடுக்கலாம் என்று வந்தேன். அதே மாதிரி பெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்கள என்றும் ஒரு தலைப்பை கொடுக்க வந்தேன். இப்படி கவுத்திட்டீங்களே!! ஆனா யார் கொடுத்தா என்ன? தலைப்பு வந்தால் சரிதான் இல்லையா?

அதே மாதிரி திருமதி ரபி அவர்கள் கூறிய தலைப்பும் என்னை கவர்ந்தது. அழகு என்பது உடலா அல்லது உள்ளமா? அருமையான தலைப்பு :)

Keep 'em coming folx!

உமா

மேலும் சில பதிவுகள்