சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

அதிரா, ரேணு எப்படி இருக்கீங்க.

ரேணு நான் செய்த குறிப்புகள் சிங்கப்பூர் நூடுல்ஸ், பைனாப்பிள் ஃப்ரைட் ரைஸ்.

எங்கே மனோகரி அக்காவின் குறிப்புகளை சரியாக செய்யமுடியாமல் போய் விடுமோ என பயந்தேன். ஆனால் நான் இதற்கு முன் செய்ததை விட அதிகம் செய்துள்ளேன் போல. நேரம் கிடைக்கும்போது குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டால் பிறகு சமைக்க சுலபமாக உள்ளது. இன்னும் சில குறிப்புகளை எடுத்து வைத்துள்ளேன். பார்ப்போம்.

சில குறிப்புகளை படித்து விட்டு செய்யலாம் என்று நினைப்பேன். ஆனால் அத்துடன் மறந்து விடுவேன். அதிரா நீங்கள் இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கவில்லையென்றால் மறந்த குறிப்புகளையெல்லாம் சமைத்து இருக்கவே மாட்டேன். உங்களுக்கும் உங்களுக்கு உதவி புரியும் ரேணுவுக்கும் என் நன்றிகள்.

என் அக்கவுன்ட்

புளியோதரை இன்று செய்தேன் . பின்னூட்டமும் அனுப்பியாயிற்று.
இங்க சமைக்கலைன்னு அடிக்க வர்ரீங்க.. ஜிம் மிஸ் ஜிம்முக்கு வரலைன்னு அடிக்க வர்ரா.. நான் என்ன செய்வேன் :((
"Every day I get up and look through the Forbes list of the richest people in America. If I'm not there, I go to work." -Robert Orben

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மாலி நீங்கள் வந்ததில் மிகவும் சந்தோஷம் மீண்டும் வாருங்கள்.எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

பர்வின் லீவு வந்தா குக்கிங் செய்யனும் என்ற என்னமே வரமாட்டீங்குது,சமையத்துல ஏண்டா லீவு வருதுன்னு இருக்கு,இருந்தாலும் முடிந்த பொழுது செய்யூங்க

ரசியா நீங்கள் கலந்துக்க முடியவில்லை என்றாலும் இங்கு வந்து சூழ்நிலை சொல்லிவிட்டீர்கள்,அதனால் உங்களை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் வேலை முடியும் வரை

இமா வெளியூர் பயணம் என்பதால் ஓ.கே.ஆனால் கட்டாயம் அடுத்த முறை கலந்துக்க வேணும்

வாங்க ஸ்ரீ என்ன குறிப்பு கம்மியா இருக்கு,நிறையா செய்யூங்க,

கவிசிவா வாங்க வாங்க,இன்னும் முடிந்த வரை செய்யூங்க.கனக்கிலும் சேர்த்தாச்சு

வானதி நான் நலம் நீங்கள் நலமா?அதிரா இப்படி ஒன்று தொடங்கவில்லை யென்றால் நிச்சயம் நாம் இத்தனை சமையல் செய்து இருக்க மாட்டோம்

அருண்பாலா,நான் நலம்,நீங்கள் நலமா?முடிந்த வரை இன்னும் செய்ய பாருங்கள்

அரசி அதிரசம் என்ன பன்னினீங்க,டேஸ்ட் நல்லா இருந்ததில் நிம்மதி,

வனிதா அதிரா அரபு நாட்டில் உங்களை சேர்க்கவும் துபாயோ என்று நினைத்தேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா நலமா?நான் செய்தது பிரென்ஞ் பிரைஸ்,வேர்கடலை கார குழம்பு...இன்னும் செய்வேன்

எனக்கு பதவி உயர்வா?மிகவும் சந்தோஷம்,அதானால் எல்லாருக்கும் ஸ்வீட்,ஆளுக்கு ஒன்னு எடுத்துகோங்க...

இலா கவலை விடுங்க,நீங்க இங்க வாங்க,ஜிம்மிஸை நம்ம அதிரா பார்த்துக்குவாங்க,,,..

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எலெக்ட்ரா என்பது ஸ்ட்ரீட் நேம்,அப்புறம் அட்ரஸ் சொல்லுங்க,கேக் செய்து அனுப்புகிறேன்,செய்தது காலியாகிவிட்டது.என் கேக் குறிபுக்கள் பார்த்தீர்களா?ஜலீலா போன் நம்பர் அல்லது மெயில் ஐ.டி தெரியுமா?அவங்களுக்கு இன்னும் நெட் சரியாகலையா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்த வாரம் கொஞ்சம் முன்னேற்றம் எனக்கு. இன்று இத்தாலியன் பாஸ்தா செய்தேன் . சுவை அபாரம்
ரேனு.. நான் சாப்பிடா அதிராக்கு வெயிட் போடுமா :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆசியா நான் சென்று வாங்கிவிட்டு சொல்கிறேன்,ஜலிலா அக்கா மெயில் ஐடி என்னிடம் உள்ளது,3 நாள் விடுமுறை தானே,அதனால் விடுமுறை முடிந்து தான் அக்கா வருவார்,நேற்றுக்கு முந்தினம் தான் நான் உங்க கேக் எல்லாம் பார்த்தேன்,நிச்சயம் செய்வேன்,என் பையனிடம் சொல்லி இருக்கேன்,கேக் செய்து தருவேன் என்று,அதற்க்காகவே செய்வேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இலா நல்ல முன்னேற்றம் தான்,அதிரா பார்த்தால் ரெம்ப சந்தோஷ படுவாங்க.
இலா அதிரா ஒரு முறை சொன்னது ஞாபகம் இருக்கா?நான் சமைக்க தானே சொன்னேன்,சாப்பிட சொன்னேனா என்றார்,அதனால் சமையூங்கள் சாப்பிடாதீர்கள்...வெயிட்டும் ஏறாது,மிஸ்ஸூம் குட்ட மாட்டாங்க.எப்படி ஐடியா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இலா..ரேணு ,

ஐடியா சூப்ப்ர். இலா சமைத்து விட்டு, அதை பார்த்துக்கொண்டே இருக்கணும். சோகத்தில் WT குறைந்துவிடும். ஹிஹி.

ரேணு, அதிரா,

இன்று கத்திரிக்காய் பிரியாணி செய்தேன். கணக்கில் சேர்த்துக்குங்க(செய்யரது வெறும் 2 குறிப்பு இதில் கணக்கு வேறா என்று திட்டாதீங்க :) )

அதற்க்குள் என் பெயர் மறந்து விட்டதா?நேற்று முன் தினம் காலையில் உங்களிடம் பேசின அஃப்னான் அம்மாதான் நான் [அன்புடன் தாஜ்]

மேலும் சில பதிவுகள்