பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

அலைபேசி"யினால் (செல்போன்) அதிகம் விளைவது நன்மையா? தீமையா?

அலைபேசி தேவையா? தேவையற்றதா?

**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஆணும் பெணும் சேர்ந்து படிப்பது
சரியா? தவறா?
சேர்ந்துபடிப்பதால் அதிகம் வருவது
நன்மையா தீமையா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

மற்றும் சில தலைப்புகள்:

4. இன்றைய காதல் மனம் பார்க்கிறதா முகம் பார்க்கிறதா?!

5. திருமணத்துக்கு முன் காதலால் நன்மையா தீமையா?!

6. காதல் தோல்வி - அதிகம் பாதிப்பது ஆணையா பெண்ணையா?!

உமா... யார் குடுத்த என்ன??!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1.உலகில் சிறந்தது எது கல்வியா?செல்வமா?

2.உலகமக்களால் அதிகம் கவரப்பட்டவர் தேசத்தந்தை காந்திஜியா? நெல்சன் மண்டேலவா?

ஒரு ஒரு சில தலைப்புக்கள் எழுதும்போழு வேற மாதிரி இருந்தாலும் வாதாடும்பொழுது பார்த்தால் முன்பே நாம் பேசிமுடித்த தலைப்பு போல் ஆகிவிடும்..அப்படி இல்லாமல் புதுமையான தலைப்பாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

நம் தமிழ் இசையமைப்பாளர்கள் எந்த மொழி பாடல்களிலிருந்து காப்பியடிப்பதில் வல்லவர்கள்? இந்திய மொழி பாடல்களா? வெளிநாட்டு பாடல்களா?

you tube ல் தசவதாரம் படத்தில் இடம் பெற்ற "கல்லை மட்டும் கண்டால்" பாடல் பழைய மலையாள பாடலின் அப்பட்டமான காப்பியாக இருப்பதையும்,வாரணம் ஆயிரம் படத்தில் வரும் "அடியே கொல்லுதே பட பாடலின் ஆங்கில மூலத்தையும் இன்னும் பல பாடல்களின் மூலத்தையும் பார்த்ததினால் எனக்கு தோன்றிய தலைப்பு இது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டிமன்ற தலைப்பு

1.திரைப்படத்தில் நகைச்சுவை உண்ர்வு அக்காலத்தில் சிற்ந்து இருந்ததா? அல்லது இப்போது சிறந்து இருக்கிறதா?

காமெடியில் கலக்குவது வடிவேலுவா? அல்லது விவேக்கா?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

7. வேலைக்கு செல்லும் பெண்கள் உடன் பனிபுரியும் ஆண்களால் மதிக்க படுகிறார்களா மிதிக்க படுகிறார்களா?!

8. நாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண் சமுதாயம் சீர் பட்டிருக்கிறதா சீரழிந்திருக்கிறதா?!

9. கணவனே கண் கண்ட தெய்வம் - இன்றும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமா?!

10. இன்றைய அரசியலுக்கு தேவை கல்வி அறிவு பெற்ற இளைஞ்சர்களா அனுபவ அறிவு பெற்ற முதியோர்களா?!

(இதுக்கு முன்னாடி இந்த தலைப்புகளில் வாதாடி இருக்கிங்களான்னு எனக்கு தெரியாது.... நான் எல்லா பட்டிமன்றத்தையும் பார்த்ததில்லை. பேசி இருந்தால் விட்டு விடவும்.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னமோ இங்கு வரும் பட்டிமன்றத்தலைப்புக்களில் அதிகமானவை முன்னைய தலைப்புக்களை
சார்ந்தே வருவதால் இதற்குமுன் வாதாடப்பட்ட தலைப்புக்களை இயலுமானவரை கொண்டு வந்திருக்கிறேன்.
விடுபட்டவற்றை முடிந்தால் யாராவது தேடிக்கொண்டு வாருங்கள்.

பட்டிமன்றம்1. பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டுவது இனிப்பு வகைகளா? காரமா?

பட்டிமன்றம்2 இரவில்குழந்தைகளைபெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா?
இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

பட்டிமன்றம் 3
பட்டிமன்றம் 4

பட்டிமன்றம் 5.“இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்களா
அல்லது மன முதிர்ச்சியின்றி சுயநலமாக செயல்படுகிறார்களா?”

பட்டிமன்றம் 6. .“அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா
அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா".

பட்டிமன்றம் 7 "ஒரு குடும்பம் சிறப்படைய பெரிதும் காரணம் இல்லத்தரசிகளா?வேலைக்கு செல்லும் அரசிகளா?"

பட்டிமன்றம் 8.///வாடகைத்தாய்?நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா?வராதா?///

பட்டிமன்றம்9.மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சிறந்தது எது?கூட்டுக்குடும்பமா?தனிக் குடித்தனமா?

பட்டிமன்றம்10 ."இன்றைய ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறதா?சீர்படுத்துகிறதா?

புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?
[கணவன், மாமனார், மாமியார், மற்ற உறவுகள், பிரச்சனையே இல்லை.]

இதைப்படித்துவிட்டு முடிந்தளவு புதிய தலைப்புக்களை
இங்கு எடுத்து வருவோமே.

சுரேஜினி

நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?

டீ.வி சீரியல் பெண்களை பெருமைபடுதுகிறதா?சிறுமைபடுடுகிறதா?

கேட்க இனிமை பழைய பாடலா?புதிய பாடலா?

மேலும் சில பதிவுகள்