சமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 3, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி - 4 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோகரி அக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) முடிவடையும். புதன்கிழமை(31/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

அதிரா,ம்னோகரி அக்கா ஜலிலா அக்காவுக்கு அறுசுவை வந்ததா என்று தெரியவில்லை,அவர் மீன் குழம்பு,சாம்பார்,கோழி வறுவல் ரெஸிபிகளை காப்பி செய்து அனுப்ப சொன்னார்,அனுப்பி வைத்தேன்,ஆனால் அவரை கானாம்,உடல் நிலை சரியில்லை என்றும் கேள்விபட்டேன்,மெயிலையும் கானாம்...ஒருவேலை லீவு முடிந்து தான் வருவார் என்று நினைக்கிறேன்..

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்தவார அசத்தல் ராணியாக துஷியந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அசத்தல் ராணி "துஷியந்தி" க்கும் மற்றும் 2வதாக அசத்தியுள்ள "அரசி" க்கும் 3வது இடத்தை பிடித்துள்ள "ரேணுகா" விற்கும் "சுரேஜினி" இக்கும்..... மற்றும் இதில் எம்மோடு பங்குகொண்டு அசத்திய அனைத்து அன்புத் தோழிகளுக்கும்... எம்மோடு ஒத்துழைத்து உடனுக்குடன் பதில்களை வளங்கிய மனோகரி அக்காவிற்கும் எனது நன்றிகள்.

எல்லோரும் தொடர்ந்து எமக்கு ஒத்துழைப்பு வளங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ரேணுகா மிக்க நன்றி, ஜலீலாக்காவிற்கு உடல் நலமென்றால் நிட்சயம் வந்திருப்பார், அடுத்தமுறை வந்து கலந்துகொள்ளட்டும். பறவாயில்லை. ஸ்ரீ, மாலி, வத்சலா... உங்கள் குறிப்புக்கள் கடைசிப் பெட்டியில் அனுப்பி சேர்த்துவிட்டோம்.... அனைவருக்கும் மிக்க நன்றி.

அடுத்த திங்கட்கிழமை (05/01) கதீஜாவின் குறிப்புக்கள் ஆரம்பமாகும். கதீஜா வந்திடுவீங்கதானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் என்னுடைய குறிப்புகளை சமைத்துப் பார்த்து கருத்துக்கள் கூறி நீங்கள் என்னுடன் உரையாடியது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, நீண்ட காலமாக கேட்பாரற்றுக் கிடந்த குறிப்புகளை தூசி தட்டிப் பார்த்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதற்கு காரணமாயிருந்த சகோதரிகள் அதிரா மற்றும் ரேணுகாவிற்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது நன்றி நன்றி நன்றி.....என்று ஆயிரமாயிரம் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.இனி அடுத்து வரப்போவது என் அருமை அன்புச் சகோதரி திருமதி கதிஜாவின் குறிப்புகள், அதில் நானும் கலந்துக் கொள்ள ஆவலோடு இருக்கின்றேன் வாய்பளித்த அறுசுவைக்கும் என் மனமார்ந்த நன்றி.

நன்றி அதிரா & ரேணுகா. நிச்சயம் பகுதி 5ல் என் பங்களிப்பு இருக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அதிரா மனோகரி மேடம் சமையலில் என்னால் கலந்து கொள்ள முடியல ரொம்ப வருத்தமா இருக்கு.
அதுவும் இல்லாமல் கொஞ்சநாட்களா எனக்கு அருசுவை சரியாகவும் கிடைக்கல, அதோடு ஊருக்கும் சென்று விட்டேன்.
ரேணுகா நான் கேட்டதும் உடனே ரெஸிபிகளை அனுப்பினீர்கள் ரொம்ப நன்றி நேற்று தான் எல்லாம் பார்த்தேன்.
இப்ப பையனுக்கு கடந்த ஒரு வாரமா உடம்பு சரியில்லை,
முடிந்தால் சகோதரி கதிஜாவில் குறிப்பில் இருந்து சில குறிப்புகள் செய்கிறேன்.
ஒரு நேரம் தான் டக்க்ன்னு ஓப்பன் ஆகுது இல்லை என்றால் டூமெனி கனெக்ஷன் என்று வருகிறது எரர் ஆகிவிடுகிறது.

//மனோகரி மேடம் செய்து அசத்திய அசத்தல் ராணி துஷ்யந்தி,அரசி, ரேணுகா,சுரேஜிணிக்கு தலையில் வைத்து கொள்ள டிசம்பர் பூக்களை கொடுக்கிறேன்.
வெள்ளை , ரோஸ்,வைலட் கலரில் ரொம்ப நல்ல இருக்கும். மேட்சா டிரெஸும் போட்டு கொள்ளுங்கள்.
அந்த அந்த சீசனில் அதும் மேட்சாக பூ வைக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.//
ஊரில் நான் போன போது டிசம்பர் மாதம் பூவும் ரொம்ப நல்ல இருந்தது ஆனால் வைக்க தான் முடியல.

மனோகரி மேடம் அருசுவை பார்க்கும் நாள் முதல் அப்ப அப்ப உஙகள் சமையல் தான் ஆனால் அப்போது பின்னூட்டம் கூட கொடுக்க தெரியாமல் இருந்தேன்.

மீன் குழம்பு, சமோசா,சிக்கன் 65,புளியோதுரை, பட்டர் சிக்கன் .....போன்றவை.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்