பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

உமா நடத்தும் தற்போதைய பட்டிமன்றம் அருமையான தலைப்பு நன்றாக வாதாடலாம் எனக்கு கூட கை அரிச்சுகிட்டே தான் இருக்கு ஆனால் நான் வராத காரணம்..இதற்கு முன் நடந்த பட்டிமன்றங்களில் நேரமில்லாட்டாலும் ஆர்வம் காரணம் பங்கெடுத்து விட்டேன் ஆனால் ஒரு பதிவை போட்டுவிட்டால் அதற்கு எதிரணி என்ன பதில்பதிவை போட்டிருப்பார்கள் என்ற ஆர்வம் இருந்து கொண்டு ஒரு நாளையில் பல முறை செக் பன்னி நேரம் மெனக்கெட வேண்டியிருந்தது..பிறகு முடிவு செய்தேன் வேனாம் கிடைக்கும் அல்ப நேரத்தில் வீட்டௌ சுத்தப்படுத்தவோ அடுக்கி வைக்கவோ செய்யலாம் இது ரொம்ப நேரம் எடுக்கும் என்று..அதனால் தான் வரவில்லை..அனேகமாக எல்லோருக்கும் இதே ப்ராப்ளம் தான் இருந்திருக்கும்.
உமா வின் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளலாம் என்று ஆசை ஒரு பக்கம் மேலே சொன்ன பயம் மறு பக்கம்..இருங்க பிறகு வந்து பேசுகிறேன்

மனோகரி... நான் பட்டிமன்றத்துக்கு முற்றுபுள்ளி வைக்க சொல்ல வில்லை... "நம் மக்களுக்கு சற்று ஓய்வு தேவை போலும்" என்றே சொல்லி இருக்கிறேன். நம் அட்மின் அண்ணா சொன்னது போல் "தர்காலிகமாக" தான் நிருத்த சொல்கிறேன். காரணம், எல்லோரையும் எல்லா மற்ற மன்ற தலைப்புகளில் காண முடிகிறது, இங்கு காண முடியவில்லயே என்று தான்.... இது வரை வந்த பட்டிமன்றங்கள் 100 பதிவை தான்டி இருந்த போது, இந்த ஒரு தலைப்பு மட்டும் 30' ஏ தான்டாத வருத்தமே தவிர வேரொன்றும் இல்லை.

நீங்கள் சொல்வது போல் "ஆரம்பிப்பது கஷ்டம், முடிப்பது சுலபம்" தான். :) பாருங்கள் வரவில்லை என்று சொன்ன உமா'வை வம்பிழுத்து வர வெஇத்து, அவர் நடுவராக வந்த பட்டிமன்றத்துக்கு வாதாட ஆளில்லாமல் சுலபமாக முடித்து விட்டொம். ( சும்மா விளையாடாக தான் சொல்கிறேன்)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புச் சகோதரி வனிதா, பதிலளித்தமைக்கு நன்றி. பட்டி மன்றத்தில் நீங்க போட்டிருந்த பதிவும் அதை ஆமோதித்து இன்னும் பல பதிவுகளையும் பார்த்து தான் அதற்கு என் மாற்றுக் கருத்தை கூறி கொஞ்சம் அவசரப்பட்டு என் கருத்தை கூறிவிட்டேன், எது எப்படியோ உங்க நியாயமான வருத்தம் முன்வைக்கப்பட்டு உங்கள் கருத்து அமுலாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியே. இனி புதிய தளத்தில் புதியதொரு பட்டிமன்ற தலைப்பில் சந்திப்போம் நன்றி.

ஆடடா மனோகரி... நான் நினைச்சதை தான் நீங்களும் நினைச்சிருக்கிங்க. பாவம் ஒருவரை நடவரா வர வெச்சுட்டு, நம்ம வாதாடாம அவங்களை அம்போன்னு விட்டா, தவரில்லயா?! அதனால் தான் அப்படி சொல்லி இருந்தேன். பட்டிமன்றம்'னு இல்ல, எங்கயுமே தலைமை'க்கு மற்றவர்கள் மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும். நம்மை நடுவராக்கி அந்த பட்டிமன்றத்துக்கு யாரும் வரலன்னா, நம்ம மனசுக்கு கஷ்டமா இருக்குமில்ல... :)

சுரேஜினி... "அவசரக்கூட்டம்"னு போட்டு எல்லாரையும் வர வெச்சுட்டு காணாம போய்டீங்களா?! :)

மீண்டும் அடுத்த பட்டிமன்றத்துல பாப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமையலில் கெட்டிகாறர்கள் ஆண்களா பெண்களா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒலிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா இல்லையா? கணவன் மனைவி என்பதை தவிர்த்து தமக்கென சில சொந்த விஷயங்கள் இருப்பது சரியா தவறா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுருக்கி எழுத தெரியவில்லை.

சில நாடுகளில் 7 வயது முடிந்த நிலையில் தான் பிள்ளைகளுக்கு படிப்பே தொடங்குகிறார்கள்.சில நாடுகளில் 3 வயதில் கசக்கி பிழிய தொடங்கி விடுகுறார்கள்..எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றம் வளர்ச்சி கொண்டு பார்த்தால் எந்த வயதில் படிப்பை தொடங்கினால் சரியாக இருக்கும்??

வாழ்ந்து மடிபவர் மனிதனா?! [தான், தன் குடும்பம் என்று வாழ்பவர்]
மடிந்தும் வாழ்பவன் மனிதனா?! [தனக்காக வாழாமல் ஊருக்காகவும், நாட்டுக்காகவும் வாழ்பவர்]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொசசிவ்னஸ் என்று சொல்ல கூடிய "இது எனக்கு, இவர் எனக்கு சொந்தம்" என்று என்னும் எண்ணம் அதிகம் யாரிடம்? ஆணுக்கா? பெண்ணுக்கா?!

குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கரையும் உரிமையும் உள்ளவர் தாயா தந்தையா?! (வலது கண்ணா இடது கண்ணா என்று கேட்பது போல் இருக்கும், ஆனாலும் வாதாட பட வேண்டிய விஷயமே... காரணம் ஒரு பெண் 10 மாதம் சுமந்து உயிரை குடுத்து பெற்று எடுத்தாலும் ஆண்கள் தான் குழந்தையின் மேல் அதிக உரிமை உள்ளவர் போல் நடந்து கொள்கிறார்கள். குழந்தையின் துணியில் ஆரம்பித்து, படிப்பு, திருமணம் வரை பல வீடுகளில் ஆண்களே முடிவு செய்கிறார்கள். அதனால் தான் இந்த கேள்வி)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றத்திற்கு ஏன் இவ்வளவு நீண்ட விடுப்பு??
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்