"தளிகா" "சந்தியா" சமையல்கள் "அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 6 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "தளிகா" "சந்தியா" சமையல்கள் அசத்த போவது யாரு?

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்

முதலாம்இடத்தைப்பிடித்த,அசத்தல்ராணி"ஸ்ரீ"க்கும்,2ம்இடத்தைப்பிடித்த"இமா"விற்கும்,3ம்இடத்தைப்பிடித்த"வானதி"க்கும்,"கிருத்திகா"விற்கும்வாழ்த்துக்களும் நன்றிகளும். இதனை இவ்வளவு அழகாக பட்டியல் போட்டு,எம்மை அசத்திய"அதிரா"விற்கும்,"ரேணுகா"
விற்கும் நன்றிகள்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

சரியா சொன்னீங்க வனி,எனக்கு கோபம் வருதோ இல்லையோ அழுகை வந்திடும்,கீதா சாரி சொல்லவும் எனக்கு கஷ்டமா போச்சு,அய்யோ நாம விளையாட்டா சொல்ல அவங்களை அது கஷ்டபடுத்திடுசேன்னு,இருந்தாலும் வனி என்னை நல்லாவே புரிஞ்சு வைச்சு இருக்கீங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி தனிஷா,தொடர்ந்து எங்களோட இனைந்திருங்கள்,குட்டி பொண்ணு எப்படி இருக்கிறா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எப்பவும் இணைந்திருப்பேன் ரேணு. குட்டி தூங்குறா. ஆமா என் கணக்கில் தளியின் பால் கொழுக்கட்டை விட்டுடீங்கப்பா. சரி பரவாயில்லை. நான் பின்னூட்டம் கொடுத்து கொள்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரேணு,
உங்க மனசை கஷ்டப்படுத்திட்டதா நினச்சு நான் சாரி சொல்லப்போய் என் மனசை கஷ்டப்படுத்தி சாரி சொல்ல வெச்சதை நினச்சு நீங்க மனசு கஷ்டப்பட்டதை நினைச்சு என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுப்பா! ரொம்ப சாரிப்பா! (கடைசியாய் ஒருமுறை)
அச்சச்சோ ரேணு என்னாச்சு? ஏன் அழறீங்க? நம்ம சென்னை சில்க்ஸில் போய் கர்ஷீஃப் வாங்கி துடைச்சுக்குங்க!!! (:-)

கீதா... சூப்பரு. நம்ம அறுசுவைக்கு வந்தா பிரெச்சனைகளை மறந்து சிரிக்கனும்... சாரி சொல்லி வருதபட கூடாது. உங்க பதிவு ... அஹா... கலக்கிடீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனிதா
இப்பல்லாம் நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். தெரிந்தோ தெரியாமலோ கூட நம் தோழிகள் மனதினை வேதனைபடுத்திடக்கூடாதுன்ற கவலையில்தான் சாரியெல்லாம்.
இருந்தாலும் இப்படி சொன்னதினால்தான் உங்களைபற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.இனி நோ சாரி!ஒன்லி சமையல் கட்டில் பூரி

நம்ப முடியவில்லை... இளவரசி பட்டம் எனக்கா:) பட்டம், பதவி எல்லாம் எனக்கு வேணாங்க. நான் ரொம்ப எளிமையான ஆளு:)அடடே எல்லாம் எங்க போயிட்டீங்க. நான் சும்மா விஜயகாந்த் டயலாக் பேசிட்டு இருந்தா அதுக்குள்ள எங்க போயிட்டீங்க? குடுங்க, குடுங்க மலர்மாலை, ரோஜாப்பூக்கள், பட்டாடை, பட்டம் எல்லாம் எனக்கு குடுங்க:) வாங்கிக்கிறேன்:)

வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றி. ராணி ஸ்ரீ அவர்களுக்கும் சக இளவரசிகளான இமா, கிருத்திகா அவர்களுக்கும் மற்றும் இதில் பங்குபெற்று சமைத்து பார்த்த அனைத்து சகோதரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தளிகாவின் சமையலில் இவ்வளவு செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதற்கு காரணமான அதிராவிற்கும், ரேணுவிற்கும் ஸ்பெஷல் நன்றிகள். அதிரா சில ஃபோட்டோஸும் எடுத்து வைத்துள்ளேன், புது தளம் வந்தவுடன் அனுப்புவேன்.

ஹாய் சகோதரிகளே,

தாமதமான பதிலுக்கு முதலில் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.
பாடசாலை ஆரம்பித்துவிட்டதால் முன்புபோல் வர முடியவில்லை. நான் வரும் நேரம் மிக மெதுவாகத்தான் இழைகள் திறபடும். இன்று அறுசுவையைப் பார்வையிட்டுவிட்டுப் பின்பு மற்ற வேலைகளைக் கவனிக்கலாம் என்றிருக்கிறேன்.

வத்சலா சொன்னதால் ஒரு நாளைக்கு ஒரு குறிப்புச் செய்வது என்று நினைத்து ஆரம்பித்தேன். பிறகு அப்படி இப்படி என்று 19 குறிப்பு ஆகிவிட்டது. இங்கு உங்கள் அனைவருடனும் சேர்ந்து சமைப்பது சாப்பிடுவது, அதிராவுக்குப் பாசல் அனுப்புவது எல்லாம் சந்தோஷமாக இருந்தது.

தளிகாவின் பதிவுகள் பார்க்கும் போது தளிகாவைப் பார்க்கவேண்டும் போன்றிருக்கும். சிறு பிள்ளைமாதிரி சந்தோஷப் பதிவுகளாக அனுப்பியிருப்பார். தளிகாவின் குறிப்புகள், சந்தியாவின் குறிப்புகள் எல்லாமே நன்றாக இருந்தன. லட்டும், மைசூர் பாகும் மிக நன்றாக இருந்தன. நான் போட்ட எல்லாப் பின்னூட்டங்களுக்கும் தளிகா ஒன்றுவிடாமல் பதில் போட்டிருந்தார். நன்றி தளிகா. தளிகா, உங்களை மகிழ்விக்க முடிந்ததையிட்டு சந்தோஷம். பொன்மாலைக்கு நன்றி. சந்தோஷமாக ஊருக்குப் போய் வாருங்கள். இம்முறை சமைத்த எல்லாவற்றையும் படம்பிடிக்க முடியவில்லை. எடுத்த படங்களை அட்மினுக்கு அனுப்பியிருக்கிறேன். புதிய தளத்தில் எனது பின்னூட்டங்களை மீண்டும் தருவதற்காகக் குறித்து வைத்திருக்கிறேன்.

நன்றி ஆசியா. மகன் பரீட்சை எப்படிச் செய்திருக்கிறார்? மாலைக்கு நன்றி.;-)

ரோஜாக்களுக்கு நன்றி செல்வி, வனிதா. எனக்கு யாராவது ரோஜா தந்தால் தடியை நறுக்கி நட்டுப் பார்ப்பேன். ;-) வனிதா, பகிர்ந்து சாப்பிட்டதால் என் எடை கூடவில்லை. ஆனால் வேறு விளைவுகளை அனுபவிக்கிறேன். ;-) எனக்கு நிறைய உணவுகள் ஒத்து வராது.

மாலைக்கும் கப்புக்கும் (அது ப்ளாஸ்டிக் கப் இல்லைதானே? ;-)) நன்றி ஜலீலா. பரிசாகக் கூடவே ஒரு சிரிப்பும் சிரித்திருக்கலாம். ;-D

வாழ்த்துக்களுக்கு நன்றி இலா, கிருத்திகா, தனிஷா, துஷ்யந்தி & வின்னி.

வத்சலா, நீங்க சொன்னதால்தான் ஒரு உற்சாகம் வந்தது. ;-) நன்றி.

நன்றி கவின். கவின் என்கிற பெயரில் எனக்கு ஒரு குட்டி மாணவன் இருந்தார். ;-)

நன்றி ஸ்ரீ. நான் இதை எதிபார்க்கவில்லை. ;-D

சாய் கீதா,
நன்றி, தங்குவதற்கு இடமிருக்கிறதை நம்பி இந்தியா வரலாம். ;-) (இது கடைத் தேங்காயை எடுத்து ..... மாதிரி இல்லை.)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நன்றி அதிரா, எல்லாம் நீங்க தந்த ஊக்கம்தான். ;-) வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் எண்ணம்போல் எல்லாம் அழகாகப் போகிறது. மற்ற ஆக்களிட குறிப்புகள் வரேக்க தொண்டை நோகக் கத்துறீங்கள். உங்கட குறிப்புகள் சமைக்கிற நேரம் எப்பிடிக் கத்துவீங்க என்று யோசிச்சுப் பார்த்தன். ;-)) பொறுத்திருந்து பாப்பம். நீங்க குறிஞ்சாவையெல்லாம் நினைவுபடுத்தி ஏங்க வைத்திருக்கிறீங்கள்.

ஹாய் ரேணுகா, எப்படி இருக்கிறீங்க. நான் ரசித்துச் சாப்பிட்டதற்குப் பட்டம் கொடுத்திருக்கிறீர்கள். ;-D நன்றி. வாழ்த்துக்கும் நன்றி. ஒவ்வொரு முறையும் பொறுமையாகக் கணக்கெடுத்து அழகாக வரிசைப்படுத்தி முடிவுகளை வெளியிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.

அசத்திய ஸ்ரீ, வானதி, கிருத்திகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கூடவே பங்குபற்றிய 33 பேருக்கும் எனது நன்றி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்