ஒற்றை தலைவலி

அன்பு தோழிஸ்,
காலையிலேயிருந்து ஒற்றை தலைவலி படுத்துது
சரி ஆக ஏதாவது வழி சொல்லுங்களேன்
-கவிதாராம்

black tea ginger pottu kudithu parungalen.

anuchakko

கவி ஆவி சுக்கு தூள் போட்டு ஆவி பிடிங்க.
நல்ல சூடான வெண்ணீர் குடிங்க.
சூக்கு காபி அல்லது, இஞ்சி நிறைய தட்டி போட்டு டீ குடிங்கள்.
கொஞ்சம் நேரம் கண்ணை சுற்றி ஒரு டவலை சுற்றி கொண்டு தூங்குங்கள்.
இரண்டு நெற்றி பொருத்து காது மடல் கீழ் ஏதாவது தைலம் போட்டு லேசாக த்ய்த்து கொண்டு படுங்கல்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா இந்த தலை வலி ப்ரசனை எனக்கும் இருக்கிரது நின்கல் சொன்ன பதில் எனக்கும் பயனுலதஹ இருக்கு எனக்கு ஆஸ்மா பிரசனை இருக்கு சலிதொல்லைவேரு இதனால் மாதம் ஒரு முரை டாக்டரிடம் பொஹவேன்டி வருது அடிக்கடி சலி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் மட்ர தொலிகலும் உதவி செயுங ப்லிஸ்

ஜெஸி நீங்கள் சொல்வதை கேட்டால் கழ்டமா இருக்கு
அபப்டின்னா மணியடிச்ச சோறு மாதிரி டக்டர் கிட்ட போறீங்க.

ஒற்றை தலைவலி, ஆஸ்மா, வீசிங் மூக்கடப்பு இதேல்லா ஒன்று வந்தா பின்னாடி ஒன்று ஒன்றா தொடரும், எல்லாமே அண்ணன் தம்பிமாதிரி.

அக்கரா தெரியுமா அதை தேனில் குழத்து சாப்பிடுஙக்ள்.
சைட் எபஃக்ட் எதுவும் வராது.

புளிப்பு அயிட்டன்ம் எதுவும் சாப்பிட கூடாது.

மோர் என்றால் குழந்தைகளுக்கு கொடுப்பது போல் புளிப்பில்லாமல், தயிறும் அப்படி தான்,

புளி, தக்காளி, எலுமிச்சை கொஞ்டம் கல்ம்மி பண்ணிகொள்லனும்.

ஈர தலையோடு இருக்க கூடாது.

முக்கை சிந்துவது போல் இரண்டு மூக்கையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து 21 முறை செய்யுங்கள்
எபப் எப்ப முடியுதோ அப்ப யெல்லாம் செய்யுஙக்ள்.
முடிந்தால் மூச்சு பயிற்சி இதில் எல்லா நோயுக்குமே விடுதலை கிடைக்கும்.

21 தடவை காலை மாலை.

முடிந்தால் இரண்டு நிமிடம் தொடர்ந்து

அதுக்கு மேல் என்ன ஞாபக வருதோ சொல்கிறேன்.
சூடா வெண்ணீர் குடிங்க
ஜில் தண்ணீ ஜூஸ் வேண்டாம்.

குளுமையான காய் கறிகள் பழங்கள் சாப்பிட வென்டாம்
ஒரு வாரம் டிரை பண்ணி பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

அடிக்கடி ஆஸ்த்மா சைனஸ் உள்ளவர்கள்.குளித்து நல்ல தலையை துவட்டிவிட்டு நல்ல ஆவி பிடியுங்க சிறிது மஞ்சள் தூள் போட்டு..கட்டாய்யம் வீட்டில் ஸ்டீமர் வாங்கி வச்சுக்குங்க அப்போ அலுப்பு படாது.
நம்ப ஊர்ல சமஹம் கிடைக்குதே அதை தினம் இரவு சூடான(ரொம்ப இல்ல) பாலில் கலந்து குடிக்க நல்ல பலன் தெரியுது.வாழைப்பழம் ,சப்போட்டா சாப்பிடாதீங்க.அது நல்ல சளி பிடிச்சுக்கும்
சுத்திலும் உள்ள பார்த்தீனியம் செடியை க்லீன் பன்னி எரிச்சு விடுங்க..முக்கால் பாகம் ப்ரச்சனை ஒழியும்..போத்திக்க நல்ல பருத்தி துணி யூஸ் பன்னுங்க இரவு.ஃபேனுக்கு அடியிலயே படுக்காதீங்க..
தினம் படுக்கும் முன் வெதுவெதுப்பன நீரில் முகம் மற்றும் மூக்கு துவாரம் கூட கழுகிவிட்டு படுங்க.நல்ல பலன் தெரியும்..

சைனஸ் 'கு தினமும் இல்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்ச்சு குளிக்கலாம் (வெரும் தலைக்கு, ஷாம்பூ இல்லாம). முதல்ல கஷ்டமா இருக்கும், ஆனா நீண்ட கால பழக்கம், சைனஸ்'அ கட்டுப்படுத்தும். இது என் அனுபவம். நான் எதுவும் உணவில் தவிற்பது இல்லை, மருந்தும் எடுக்கலை, நல்ல ஆரோக்கியமான உணவு போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அனு
ரொம்ப நன்றி பா.இப்ப சரியாடுச்சு.

Thanks to all

ஹாய் ஜலீலா அக்கா,
ரொம்ப நன்றி
உங்க சுக்கு காபி சாப்பிட்டுகிட்டே தான் எழுதினேன்.இப்ப சரியாடுச்சு.
அந்த நேரம் எழுதவே முடியல.
கவிதாராம்

Thanks to all

ஜலிலா ரொம்ப நன்ட்ரி நிங்கல் சொன்ன மூச்சுபயிர்சியை கட்டாயம் செய்வேன் சுக்கு துல் போட்டு ஆவி பிடிப்பது இப்பொலுது தான் டெரிந்துகொன்டென் ஹாய் தலிகா வனி உன்கலுடன் முதன் முதலஹ பேசுவதில் மகில்ச்சி நேஙல் சொன்னது எனக்கு மிகவும் பயனுல்லதஹ இருக்கும் அரு சுவை மூலம் இப்படி நிரய்ய தோழிகல் கிடைததில் மஹிழ்ச்சி

ஹாய் கவிதா சைனஸால் வரும் தலைவலிக்கு நான் செய்யும் மருந்து சுக்கை உரைத்து நெற்றியில் தேய்ப்பேன்.
ஒற்றை தலைவலி போக மிக சிறப்பனது தூக்கம் தான்.என்னத்தை கைமருந்து எடுத்தாலும் முழுமையாக தலைவலி போவது நிம்மதியான தூக்கம் தான்.

பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்

மேலும் சில பதிவுகள்