கால்/மூட்டு வலி பிரச்சனை

கால்/மூட்டு வலி பிரச்சனை!

எனக்கு ஒரு 4, 5 நாளா முதுகு பிடிச்சிட்டு, மிக்கியமா இடது பக்கம் முதுகுக்கு கொஞ்சம் கீழே, சரியான வலி. நானும் நம்ம ஊரு Moove, இந்த ஊரு Bengay எல்லாம் தேச்சி, Advil (Pain reliever) எல்லாம் போட்டு இப்ப ஒரு மாதிரியா இருக்கு. இப்பெல்லாம் பேசாம தரையிலதான் படுத்துக்கறேன். வேற என்ன பண்ணனும்?! (ஒரு ஃப்ரண்ட் ஷூவை மாத்தி பாக்க சொல்றாங்க!).
எனி டிப்ஸ்?!!

சரி, இது இப்படி இருக்க, இப்ப என்னடான்னா, திடீர்னு வலது கால், முட்டிகிட்ட ரொம்ப வலிக்குது. வலின்னா எப்போதும் வலிச்சிட்டு இருக்கிற மாதிரி இல்லாம, திடீர் திடீர்னு வலிக்குது.
உள்ளே ஏதோ Bone-ல திருகி விட்ட மாதிரி... சுர்ருனு.
அப்புறம், காலை இப்படி அப்படினு ஆட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும் கொஞ்ச நேரத்தில சரியாயிட்ட மாதிரி இருக்கு. அப்புறம் மறுபடியும் வலி வருது. : (

என்ன பண்ணலாம்? - எதனால இப்படி வலிக்குது. யாருக்காவது இது பத்தி ஐடியா இருக்கா?! கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்.

(இந்த வயசிலேயே முட்டி ப்ராஃபெளம் வந்தால் நான் போகப்போக என்னதான் செய்யரதுன்னு எனக்கே தெரியலை. கவலையா இருக்கு. : ( )

கவலைப்படாதீர்கள்.நானும் இதே அவஸ்தையை கடந்த 20 நாட்களாக அனுபவித்துக்கொண்டுள்ளேன்.சாதாரண பிஸிசியனிடம் காட்டிய பொழுது ஒரு முழ நீளத்திற்கு டெஸ்ட்டுக்கு எழுதித்தந்தார்.நான் அதை கிழித்துப்போட்டு விட்டு ஒரு orthopaedic&foot specialist சென்று பார்த்தேன் .அவர் எக்ஸ்ரே பார்த்து விட்டு ஜவ்வு லேசாக வீக்கம்.ஒரு வாரத்தில் சரியாகி விடும் என்றார்.மருந்துகளுடன்,wax therapy எடுக்கசொன்னார்.அதன் படி செய்ததில் ஒரே நாளில் நிறைய மாற்றம் தெரிந்தது.இதோ இன்னும் அந்த சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளேன்.காலில் நல்ல மாற்றம் தெரிகின்றது.நீங்கள் உடனேயே ஒரு ஆர்த்தோ வைப்போய் பாருங்கள்.

arusuvai is a wonderful website

முதலில் ஷூ மாத்துங்க காலையில நல்லா நடந்துபோனவர் மாலையில் கஷ்டப்பட்டு நடந்தார்.. கூகிள் பண்ணியதில் ஒரு சைட் சரியா கவனிக்கலை.. அதில எங்க வலி இருக்குன்னு பாயின்ட் பண்ணினால் என்ன செய்யனும்ன்னு காமிக்கும். ஷூ மாற்றியதும் வலியும் மாறியது.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கும் முட்டி கிழே அமர்ந்து எலும் போது பளீர் என்று வலி.அதிகம் தொலுகும் போது ரமளானில் படுத்தி எடுத்தது.சேரில் அமர்ந்து எலும் போதும் வலி.யாரிடமும் சொன்னால் சிரிக்கிறாங்க.இப்பவே முட்டி வலியான்னு.என்னத்த சொல்ல.அது போக வலது கை முழங்கை வலி.வெயிட் சிறிது தூக்கினாலும் வலி.அதிகம் வேலை செய்தாலும் வலி.நானும் எலும்பு நிபுனரை பார்க்க இருக்கேன்.இப்போ வெல்லாம் 30வயதை கடந்து விட்டாலே முட்டி வலி பிரச்சனை வருதுன்னு சொல்றாங்களே உண்மையா !?
இந்த பிரச்சனை எல்லாம் வராம இருக்க என்ன செய்யனும்.எதும் யோசனை இருந்தா எனக்கும் சொல்லுங்லேன்

சாதிகா அக்கா எலும்பு orthopaedic ஓகே.//foot specialist //இது பாததிர்க்கு என்று தனியா பார்ப்பவங்களா?

அன்புடன் பர்வீன்.

மிக்க நன்றி ஸாதிகா அக்கா, உங்க பதிலுக்கு. என்னடா இது... இப்படி பிச்சனையா இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்க பதில் பார்த்தது ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. Ortho appt. வாங்கிடறேன். தேங்ஸ் ஒன்ஸ் அகைன்!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஓகே இலா, இந்த ஷூ விஷயம் நீங்களும் சொன்னதில உறுதிபட்டு போச்சு. முதல் வேலையா உடனடியா அதை பண்ணறேன். நான் பெரும்பாலும் அணியும் ஒரே walking ஷூதான் இப்போதும் அணிகிறேன். ஆனா, திடீர்னு ஏதோ ஒத்துவரலை... கட்டாயம் மாற்றுகிறேன். ரொம்ப தேங்ஸ் இலா.

அது எப்படி இலா, எல்லாத்துக்குமே கரெக்ட்-ஆ இன்டெர்னெட் படிச்சி நிறைய information தெரிஞ்சி அதை நல்லா நினைவிலேயும் வைச்சுக்கிறீங்க! வெரி நைஸ்!! அப்புறம் எப்பவாது அந்த சைட் (மேலே நீங்க குறிப்பிட்ட) மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால், எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க. நானும் தேடிப்பார்க்கிறேன்.

பி.கு. உங்களுக்கு நானும் email அனுப்புறேன், அனுப்புறேன்,... இன்னும் அனுப்பிட்டே இருக்கேன்.. : ) ஸாரி, பட் எப்படியும் கூடிய சீக்கிரம் அனுப்பிச்சிடுவேன்னு நினைக்கிறேன்!. பார்க்கலாம்!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி பர்வீன். உங்க கருத்தையும் இங்கே பகிர்ந்துகிட்டதற்கு...
உங்களுக்கு வந்த அதே டவுட்-தான் எனக்கும் இருக்கு!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

susri எனக்கும் இது அதிகம் நிண்டும் நடந்தும் கொண்டிருந்தா அவ்ளோதான் .1 வருசத்துக்கு 1 தடவையாவது சப்பாத்தை மாத்துங்கோ எண்டு டொக்டர் சொல்லீட்டு கால் முட்டிக்கு ஸ்போட்ஸ் செய்யேக்க போடுவினமே லாஸ்டிக் பாண்ட் அதுவும் வேண்டிப்போடச்சொல்லி சொன்னவர்.அதுக்குப்பிறகு லைட் ஆ ஸ்ராட் பண்ணேக்கயே நான் 2ம் செய்திடுவன் வலி வராது செய்து பாருங்கோ.

சுரேஜினி

I understood that the pain is in the foot/heal area not the knee/kneecap. This is the site

http://www.foot.com/info/info_pain_identifier.jsp

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தேங்ஸ் சுரேஜினி உங்க டிப்ஸ்-க்கு.
கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன். ஸ்போர்ட்ஸ் எலாஸ்டிக் பேன்ட்தான் சரியா எதுவும் இல்லை. வாங்கிடறேன்.

இலா,
Thanks. சைட் குறித்துக்கொண்டேன். - very useful site.
ஆனால், இப்பொதைக்கு தேவைப்படாது. என் வலி கால் மூட்டில்தான் (Knee/knee joint).

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நான் கன்ஸல்ட் பண்ணிய டாக்டர் orthopaedic& foot Specialist.எனக்கே இப்போதான் இதற்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் இருப்பது தெரிந்தது.

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்