என் அம்மாவிற்கு கை மூட்டு வலி இருப்பதாக சொல்கிறார்கள். ரத்த கொதிப்பு உண்டு. எளிதான வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.
என் அம்மாவிற்கு கை மூட்டு வலி இருப்பதாக சொல்கிறார்கள். ரத்த கொதிப்பு உண்டு. எளிதான வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.
Pain in Joints
தோழிகளே, ஆலோசனைகள் வந்து குவிந்து இருக்கும் என்ற ஆசையில் ஓடி வந்து பார்த்தால், ஏமாந்து போய்விட்டேன். நமது தோழிகள் எதிலும் வல்லவர்கள் என்று நினைத்து சந்தேகம் கேட்டேன். என் அம்மா டாக்டரிடம் காண்பித்து ஆயின்மென்ட் தேய்த்தும் பலன் கிடைக்கவில்லை. உதவுங்கள் ப்ளீஸ்.
With Best Wishes,
Thahira Banu.
With Best Wishes,
Thahira Banu.
குதி கால்
குதி கால் வலிக்கு சிறிய செங்கல் துண்டு எடுத்து சூடாக்கி பழுத்த எருக்கன் இலையை அதன் மேல் வைத்து காலை அதன் மீது வைத்து ஓத்தடம் கொடுக்கவும்
nalamadaiya aaval
அன்பு தோழி நானும் 1வருடமாக மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். painil என்ற தைலம் வாங்கி தேய்க்கவும்.சிறிது நேரம் கழித்து வெண்ணீர் ஒத்தடம் கொடுக்கவும்.விறைவில் அம்மாவுக்கு குணமடைய வாழ்த்துகிறேன்.
தங்கமான குறிப்பு கொடுத்த ரெங்கம் அவர்களுக்கு
உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி ரெங்கம். என் அம்மாவிடம் கண்டிப்பாக இதை சொல்கிறேன். நீங்கள் கொடுத்த வைத்திய முறைகளை கை வலிக்கும் உபயோகப்படுத்தலாமா?
நீங்களும் உங்கள் வேதனையிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
With Best Wishes,
Thahira Banu.
With Best Wishes,
Thahira Banu.
ஹாய் தாஹிரா!
மூட்டுவலிக்கு கேழ்வரகு மாவை தண்ணீர் கலந்து கை,கால்களில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து கழுவ குணம் தெரியும்னு கேள்விப்பட்டேன்.ஆனா இது ஒரு புக்கில் அனுபவப்பட்டவரின் கருத்தாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
அம்மாவுக்கு கொலஸ்ட்ரால் பிரச்னை இல்லாட்டி மதிய சாப்பாட்டுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளச்சொல்லவும். இரவில் பால் குறைந்த அளவு அருந்தலாம்.
நான் சொல்லிய இந்த ஆலோசனை தவறானதாக இருந்தால், தயவுசெய்து தோழிகள் தெரிவிக்கவும்.
தாகிரா ஹாட் வாட்டர்
தாகிரா ஏதாவது ஆயில் தேய்த்து ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுக்கசொல்லுங்கள்.
பேக் இல்லை என்றால் ஒரு மெல்லிய துணியில் அல்லது பாலிதீன் கவரில் சூடான சாதத்தை போட்டு ஒத்தடம் கொடுக்கவும், கைக்க்கு உடற்பயிற்சி செய்யவும்.
இர்த்த கொதிப்புக்கு
உப்பு கம்மி பண்ணி சாப்பிட சொல்லுங்கள்.
நல்ல ஒரு மனி நேரம் தைனம் நடந்தால் ஒரே மாததில் 50 % குறிஅய சான்ஸ் இருக்கு, அவர்களை டென்ஷன் இல்லாமல் இருக்க சொல்லுக்னக்ள்.
ஜலீலா
Jaleelakamal
painil treatment
அன்புள்ள சகிக்கு,அதிகமாக எதயும் தூக்க விடாதீர்கள்.அடிக்கடி கையை மெதுவாகமடக்கி நீட்ட சொல்லுங்கள். . கண்டிப்பாக கொடுக்கலாம்.எதுவும் செய்யாது. அன்புடன், ரெஙகம்.