தேதி: November 8, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் வற்றல் - 5
முழு பூண்டு - ஒன்று
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை
தாளிக்கும் பொருட்களை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து கெட்டியாக கொதிக்கவிட்டால் சட்னி தயார்.
இட்லி, தோசைக்கு ஏற்றது.
Comments
ஹாய் வனிதா
நேற்று இந்த கார சட்னி செய்தேன்.எனக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.தோசைக்கு தொட்டு கொள்ள செய்தேன்.டேஸ்டா இருந்ததுபா.தங்களின் குறிப்புக்கு நன்றி.
நன்றி சுகன்யா
தேடி தேடி காரமானதா சமைக்கிறீங்க... ;) மிக்க நன்றி சுகன்யா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா, காரசட்னி நல்லாயிருந்தது. ஈஸியாக செய்ய முடிந்தது. கோதுமை தோசைக்கு நல்ல combination
அன்புடன்
கிருத்திகா
அன்புடன்
கிருத்திகா
நன்றி கிருத்திகா
இரவு நானும் இதே தான் செய்தேன், அதே கோதுமை தோசைக்கு. ஹிஹிஹீ. மிக்க நன்றி கிருத்திகா. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா கார சட்னி இன்னைக்கு காலையில் தோசைக்கு செய்தேன் நல்லா இருந்தது.நன்றி
நன்றி கவி
காரமா இருந்துசா? :) மிக்க நன்றி கவி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா