தேதி: April 16, 2007
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரவா - ஒரு கப்
அரிசி மாவு - 3/4 கப்
மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - 1/2 டீஸ்பூன்
ஒரு வாணலியில் ரவையை கலர் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த ரவையை மிக்ஸியில் போட்டு மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் மேலே கூறிய பொருட்கள் சேர்த்து 4 கப் நீர் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
தோசை பானை நன்கு காய வைத்து மெல்லியதாக விடவும். மாவு சிறிது வெந்தவுடன் எண்ணெய் ஊற்றவும். பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும்.
இந்த முறையில் தோசை க்ரிஸ்பியாக வரும். தோசை வேகும் பொழுது தீயை குறைத்து வைக்கவும்.
Comments
ரவா தோசை
எனக்கு ரவா தோசை என்றால் ரொம்பவும் பிடிக்கும். அருமையாக இருந்தது.
நன்றி
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ஹாய் சாந்தி!
இன்று இரவு ரவா தோசை செய்தேன். எனக்கு பிடித்தமான் டிஃபன் ஐட்டம் இது. வீட்டில் அதிகம் ட்ரை பண்ணியதில்லை.
ஆனா இன்று ரொம்ப நல்லா வந்தது. ரொம்ப நன்றி!
ரவா தோசை
ஹாய் சாந்தி ரவா தோசை ரொம்ப நல்ல மொறுமொறுனு இருந்தது.நன்றி!!
சாந்தி
ஹாய் சாந்தி
இன்று காலையில் தான் ரவா தோசை செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது,மிக்க நன்றி உங்கள் குறிப்புக்கு
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
ரவா தோசை
ரவா தோசை மிக மிக அருமையாக வந்தது.குறிப்பின் பொருட்கள் எனது குறிப்பில் உள்ளது போலவே தான் சிறிய வித்யாசம் தான் அளவு மாற்வே செய்து பார்க்க ஆசை வந்து விட்டது...ஆனால் ரொம்ப அருமையாக வந்தது.கறிவேப்பிலை மல்லி இலை போடவில்லை.ஆனால் முழுக்க ஹை ஃப்லேமில் வைத்து தான் செய்தேன்..மொருமொருவென சூடாக சாப்பிட மிகவும் அருமை..கட்டாயம் அனைவரும் செய்து பார்கக் வேண்டிய குறிப்பு..என் கணவரே பாராட்டினார்.நல்லதொரு குறிப்புக்கு நன்றி
சாந்தி,
சாந்தி,உங்கள் ரவை தோசை சூப்பரோ சுப்பர்.இன்று செய்தேன்.மொறு மொறுவென சூடாக சாப்பிட மிகவும் அருமை.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ரவாதோசை
சாந்த்தி இந்ததோசை ரொம்ப நல்லா வந்தது.எங்கள்வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது.நன்றி.
சவுதி செல்வி